Aadhar Card

ஆதார் PVC அட்டைக்கு Apply செய்வது எப்படி?

ஒரு இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். பொதுவாக ஒரு நபருக்கு வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு ஆவணங்கள் இருந்தாலும், ஆதார் கார்டு என்பது முதன்மையானது ஆகும். ஆதார் கார்டில் கருவிழி மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கியிருக்கும். 

பல்வேறு அரசு சலுகைகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் மானியங்களை DBT என்று அழைக்கப்படும் Direct Benefit Transfer முறை மூலம் நேரடியாக பயனாளரின் வங்கிக்கணக்கிற்கே செலுத்தப்படும். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ என்ன செய்வது? கவலை வேண்டாம். இதெற்கென ஒரு அருமையான வசதி உள்ளது. அது என்னவென்றால் நீங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக PVC Aadhaar Card க்கு விண்ணப்பிக்கலாம். அதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

PVC Aadhaar Card என்றால் என்ன?

PVC ஆதார் கார்டு என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) அறிமுகப்படுத்தப்பட்ட, ATM கார்டு அளவுள்ள பிளாஸ்டிக் வகை ஆதார் அட்டையாகும். இந்த ஆதார் அட்டையானது பாலிவினைல் குளோரைடு ( Polyvinyl Chloride – PVC) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகிறது.

Read  How to Change Address in Aadhar Card Online Tamil: Full Guide

அசல் ஆதார் அட்டையில் இருக்கும் அதே தகவல்கள் PVC ஆதார் அட்டையிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும். காகித வகை ஆதார் அட்டையை விட PVC வகை ஆதார் அட்டை மிகவும் பாதுகாப்பானது ஆகும். ஏனெனில் PVC யில் கிழிந்துபோகும் அல்லது சேதமடையும் ஆபத்துகள் இல்லை. இது ATM கார்டு அளவில் சிறியதாக இருப்பதால், பர்ஸ்களில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.

PVC ஆதார் அட்டைக்கு எவ்வளவு செலவாகும்?

நீங்கள் PVC ஆதார் அட்டையை பெறுவதற்க்கு Rs.50 ரூபாயை செலுத்த வேண்டும். அந்த 50 ரூபாயில் PVC அட்டையின் விலை, GST மற்றும் ஸ்பீட் போஸ்ட் கட்டணங்கள் உட்பட அனைத்தும் உள்ளடக்கியிருக்கும். 

50 ரூபாய் கட்டணத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். UPI (Phonepe or Google pay), Credit / Debit Card, Wallet, Net Banking மற்றும் WhatsApp போன்ற வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

PVC ஆதார் அட்டைக்கு ஆன்லைன் மூலம் Apply செய்வது எப்படி?

நீங்கள் பின்வரும் செயல்முறையை பின்பற்றி PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அவை பின்வருமாறு:

Step 1: உங்களின் மொபைல் அல்லது கணினியில் உள்ள Browser யை Open செய்து, அதில் My Aadhaar என்று Type செய்து தேடவும். பிறகு முதலில் உள்ள myAadhaar என்ற இணையதளத்தை திறக்கவும்.

my aadhaar website

Step 2:  Login என்பதை கிளிக் செய்யவும்.

Login Aadhaar with OTP

Step 3: உங்களின் ஆதார் எண் மற்றும் Captcha யை Type செய்து Send OTP கிளிக் செய்யவும். இப்பொழுது ஆதார் எண்ணில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number யை Enter செய்து Login என்பதை அழுத்தவும். 

Read  How to Change Address in Aadhar Card Online Tamil: Full Guide

Login Aadhaar Services with OTP

Step 4: தற்போது பல்வேறு வகையான ஆதார் சேவைகள் இருப்பதை காண்பீர்கள். இப்பொழுது நாம் PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க போகிறோம். எனவே Order Aadhaar PVC Card என்பதை தேர்வு செய்யவும்.

Select Order Aadhaar PVC Card - myAadhaar

Step 5: இப்பொழுது ஆதார் அட்டையில் இருக்கும் உங்களின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற விவரங்கள் தோன்றும். அதற்க்கு கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.

Order Aadhaar PVC Card Online

Step 6: இந்த பக்கத்தில் கட்டணம் தொடர்பான விவரங்கள் இருக்கும். கீழே உள்ள Check Box யை டிக் செய்து Make Payment என்பதை கிளிக் செய்யவும்.

Make Payment for Aadhaar PVC Card

Step 7: இப்பொழுது கட்டணம் செலுத்தும் பக்கம் தோன்றும். அதில் கட்டணம் செலுத்த பல்வேறு தேர்வுகள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு தேர்வை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம். இங்கு நான் ATM Card யை கொண்டு பணம் செலுத்தப்போகிறேன். எனவே Credit / Debit என்பதை தேர்வு செய்கிறேன்.

Select Payment Method for Aadhaar PVC

Step 8: இப்பொழுது உங்களின் ATM Card மேல் இருக்கும் 16 இலக்க எண்ணை Card Number என்ற இடத்தில் Type செய்யவும். பிறகு ATM அட்டையின் Expiry Date, CVV Number மற்றும் ATM அட்டையின் மேல் இருக்கும் உங்களின் பெயர் போன்ற அனைத்தையும் உள்ளிடவும்.

Read  How to Change Address in Aadhar Card Online Tamil: Full Guide

இதில் CVV நம்பர் என்பது ATM Card பின்புறத்தில் இருக்கும் கடைசி மூன்று எண்கள் ஆகும். அனைத்தையும் நிரப்பிவிட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.

Debit Card details - aadhaar pvc card

Step 9: தற்போது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Complete Payment என்பதை கிளிக் செய்யவும்.

PVC Aadhaar Card Payment

Step 10: இப்பொழுது நீங்கள் PVC Aadhaar Card க்கு வெற்றிகரமாக Apply செய்துவிட்டீர்கள். தற்போது Download Acknowledgement என்பதை கிளிக் செய்து ஒப்புகை சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். அதில் உள்ள SRN Number யை பயன்படுத்தி PVC Aadhaar அட்டையின் Status யை தெரிந்துகொள்ள முடியும்.

Download Acknowledgement - Aadhaar PVC Card

How to Check PVC Aadhaar Card Status 

நீங்கள் PVC Aadhaar Card க்கு விண்ணப்பித்தவுடன் 5 வேலை நாட்களுக்குள் உங்களின் முகவரிக்கு வந்துவிடும். Aadhaar Card இல் எந்த Address உள்ளதோ அந்த முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவிடுவார்கள். இருப்பினும் PVC Aadhaar Card இன் Status யை பின்வரும் படிகளை பின்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Step 1: https://myaadhaar.uidai.gov.in/checkStatus என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். 

Step 2: அதில் Enter SRN என்ற இடத்தில், நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த Acknowledgement இல் உள்ள SRN Number யை Enter செய்யவும்.

Step 3: பிறகு Captcha யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும். 

Check Aadhaar PVC Card Order Status

Step 4: தற்போது PVC ஆதார் அட்டையின் Status யை காணலாம்.

Check Aadhaar PVC Card Order Status in Tamil

இந்த பதிவில் PVC ஆதார் என்றால், அதை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது மற்றும் அதன் Status யை எவ்வாறு Check செய்வது போன்ற பல்வேறு தகவல்களை பார்த்தோம். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole