How to Change Address in Aadhar Card Online Tamil: Full Guide
உங்களின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியை நீங்களே ஆன்லைன் மூலம் மாற்றம் செய்யலாம். அதை எவ்வாறு மாற்றம் செய்வது என்ற கேள்வி எழுகிறதா? கவலை வேண்டாம். ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலம் முகவரி மாற்றம் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்ற முழு தகவல்களையும் உங்களுக்கு சொல்கிறேன்.
இந்திய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஆவணங்களில் ஆதார் அட்டை என்பது முதன்மை ஆவணமாகும். அரசாங்க சலுகைகள், வருங்கால வைப்பு நிதி, அடையாள ஆவணம், பிறந்த தேதிக்கான சான்று என பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது.
தற்போது அனைத்து மக்களும் ஆதார் அட்டையை வைத்துள்ளனர். பிறக்கும் குழந்தைக்கும் சில மாதங்களில் ஆதார் அட்டையை வாங்கிவிடுகிறார்கள். இதன் மூலம் ஆதார் அட்டை அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது என்பதை உணர முடிகிறது.
இவ்வளவு முக்கியமான Aadhar Card இல் உங்களின் Address தவறாக இருந்தால், அது எதிர்காலத்தில் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம். எனவே உடனடியாக உங்களின் ஆதார் அட்டையில் சரியான முகவரியை Update செய்யுங்கள். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே எவ்வாறு முகவரியை மாற்றுவது என்பதை பற்றி காணலாம்.
ஆதாரில் முகவரி மாற்றம் பற்றிய சுருக்கம்:
Department | Unique Identification Authority of India (UIDAI) |
Service Category | Update Address in Aadhaar Card |
Update Mode | Online |
Cost for Aadhar Update | Rs.50 |
Official Website | www.uidai.gov.in |
Toll-Free Number | 1947 |
Email Id | help@uidai.gov.in |
Aadhar Card இல் Address Update செய்ய தேவையான ஆவணங்கள்
நீங்கள் ஆதார் அட்டையில் அட்ரஸ் அப்டேட் செய்ய முகவரிக்கான சான்று தேவைப்படுகிறது. கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை முகவரிக்கு சான்றாக பயன்படுத்தலாம்.
No | List of Documents for Address Proof in Tamil | List of Documents for Address Proof in English |
1 | பாஸ்போர்ட் | Passport |
2 | வங்கிக்கணக்கின் அறிக்கை / பாஸ்புக் | Bank Statement / Passbook |
3 | தபால் நிலைய கணக்கின் அறிக்கை / பாஸ்புக் | Post Office Account Statement / Passbook |
4 | வாக்காளர் அட்டை | Voter ID |
5 | குடும்ப அட்டை | Ration Card |
6 | ஓட்டுநர் உரிமம் | Driving License |
7 | மின்சார கட்டண பில் (3 மாதங்களுக்குள்) | Electricity Bill |
8 | 100 நாள் வேலை அட்டை | NREGS Job Card |
9 | பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய பள்ளி மாற்றுச்சான்றிதழ் | School Transfer Certificate (TC) Containing Name and Address |
10 | பள்ளி அடையாள அட்டை | School Identity Card |
ஆதார் கார்டில் முகவரி மாற்ற கட்டணம்
சில வருடங்களுக்கு முன்பு வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யலாம். ஆனால் தற்போது ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம் போன்று எந்த அப்டேட் செய்தாலும், அதற்க்கு கட்டணமாக Rs.50 ரூபாயை செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். அதாவது Credit card, ATM Card, UPI, Wallet, Net Banking மற்றும் Paytm ஆகிய ஏதாவது ஒன்றின் வழியே கட்டணத்தை செலுத்தலாம்.
How to Change Address in Aadhar Card Online
நீங்கள் Aadhaar Card இல் உள்ள Address யை Online மூலம் மாற்றுவதற்கு முன்பு, முகவரி சான்றுக்கான ஆவணத்தை Scan செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். அந்த ஆவணம் JPG அல்லது PDF வடிவத்தில் இருக்க வேண்டும்.
மேலும் ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட Mobile Number யை அருகில் வைத்திருக்கவும். ஏனெனில் அந்த எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP Number யை உள்ளிட்டால் மட்டுமே Aadhaar Card இல் Login செய்ய முடியும்.
சரி பின்வரும் செயல்முறையை பயன்படுத்தி எவ்வாறு முகவரி மாற்றம் செய்வது என்பதை காண்போம்.
Aadhaar Login
Step 1: முதலில் ஆதார் கார்டின் இணையதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்லவும்.
Step 2: அந்த இணையதளத்தில் My Aadhaar என்ற மெனு பாரில் உள்ள Update Demographics Data & Check Status என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது https://myaadhaar.uidai.gov.in/ என்ற தளத்திற்கு Redirect ஆகும். அதில் Login என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் Aadhaar Number யை உள்ளிட்டு Send OTP என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP யை Enter செய்து Login என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 6: தற்போது உங்களின் ஆதார் அட்டை Login ஆகிவிடும். இந்த பக்கத்தில் பல சேவைகள் இருக்கும். அதில் Update Aadhaar Online என்பதை தேர்வு செய்க.
Aadhaar Card Update
Step 7: Proceed to Update Aadhaar என்பதை கிளிக் செய்க.
Step 8: இதில் Name, Date of Birth, Gender மற்றும் Address ஆகிய தேர்வுகள் இருக்கும். அதில் Address என்பதை தேர்வு செய்து Proceed to Update Aadhaar என்பதை அழுத்தவும்.
Step 9: இப்பொழுது ஆதார் அட்டையில் ஏற்கனவே உள்ள முகவரி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருக்கும். அதற்க்கு கீழே உங்களின் புதிய முகவரியை Enter செய்வதற்கான வசதிகள் இருக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள முகவரியின் விவரங்களை Type செய்யவும்.
நீங்கள் ஆங்கிலத்தில் Type செய்த பிறகு அதற்கு கீழே உள்ள தமிழ் பெட்டகத்தில் தானாகவே தமிழில் நிரப்பிக்கொள்ளும். இதில் Care of என்ற இடத்தில் தந்தையின் பெயரை கொடுக்க வேண்டும்.
Document Upload
Step 10: புதிய முகவரியை Enter செய்த பிறகு Select Valid Supporting Document Type என்பதை கிளிக் செய்து, நீங்கள் முகவரி சான்றாக Upload செய்ய விரும்பும் ஆவணத்தை தேர்வு செய்யவும்.
இங்கு நான் Driving License என்பதை தேர்வு செய்துள்ளேன்.
பிறகு View details & Upload Document என்பதை கிளிக் செய்து ஏற்கனவே Scan செய்து தயாராக உள்ள ஆவணத்தை Upload செய்யவும்.
பிறகு கடைசியாக உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
Step 11: இரண்டு பெட்டிகளையும் டிக் செய்துவிட்டு Next என்பதை அழுத்தவும்.
Make Payment
Step 12: இப்பொழுது அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். பெட்டியை டிக் செய்து Make Payment என்பதை கிளிக் செய்யவும்.
Step 13: தற்போது கட்டணத்தை செலுத்துவதற்கான பக்கத்திற்கு redirect ஆகும். நீங்கள் எதன் மூலம் பணத்தை செலுத்த போகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். இங்கு நான் Credit Card / Debit Card என்பதை தேர்வு செய்துள்ளேன்.
Step 14: இந்த பக்கத்தில் உங்களின் 16 இலக்க ATM Card Number, Expiry Date, CVV Number மற்றும் Name ஆகியவற்றை உள்ளிட்டு Proceed என்பதை அழுத்தவும்.
Step 15: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Submit செய்தால் Rs.50 ரூபாய் வெற்றிகரமாக செலுத்தப்படும்.
அவ்வளவு தான் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கான செயல்முறை முடிந்தது. இரண்டு வாரங்களில் உங்களின் ஆதார் அட்டையில் புதிய முகவரி அப்டேட் செய்யப்படும்.
புதிய ஆதார் அட்டையை எப்படி பெறுவது?
முகவரி மாற்றப்பட்ட பிறகு பழைய ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அதில் பழைய முகவரி தான் இருக்கும். உங்களின் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்த பிறகு, ஒரு நெட் சென்டரில் சென்று புதிய ஆதார் அட்டையை Download செய்து Print எடுத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
அல்லது ஆன்லைன் மூலமாகவே ஸ்மார்ட் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து புதிய ஆதார் அட்டையை பெறலாம். இந்த ஸ்மார்ட் ஆதார் அட்டையானது ரேஷன் கார்டு போல் சிறியதாக இருக்கும். இதற்காக நீங்கள் Rs.50 ரூபாயை செலுத்த வேண்டும். புதிய ஸ்மார்ட் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு தபால் மூலம் உங்களின் முகவரிக்கு வந்துவிடும்.
முடிவுரை
இன்று ஆதார் கார்டு பற்றிய ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டீர்கள். அதாவது ஆதார் அட்டையில் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வது மற்றும் புதிய அட்டையை எவ்வாறு பெறுவது போன்ற தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.