Blog என்றால் என்ன? | Blog Meaning in Tamil | Full Details
நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று இணையத்தளத்திலோ அல்லது யூடியூப் சேனலிலோ தேடியிருந்தால், நிச்சயம் Blog என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த Blog என்றால் என்ன? அதில் இருந்து பணத்தை ஈட்ட முடியுமா? முடியுமென்றால் அது எப்படி சாத்தியம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
இன்று யார் வேண்டுமானாலும் ஒரு Blog யை Open செய்து அதில் பதிவுகளை இடலாம். அந்தளவு இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதற்க்கு கணினியில் பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்களும் நிச்சயம் ஒரு Blog யை திறக்கலாம். அது இலவசமாகவும் மற்றும் சிறிது பணத்தை முதலீடு செய்தும் தொடங்கலாம். சரி வாருங்கள் Blog யை பற்றி பார்க்கலாம்.
Table of Contents
Blog Meaning in Tamil
Blog என்பதற்கான அர்த்தத்தை (Meaning) பின்வருமாறு கூறலாம்.
- இணையத்தில் தினமும் வெளியிடும் பதிவு
- வலைதள கட்டுரை
- தினசரி உங்களின் அனுபவத்தை இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளும் செயல்
- உங்களை தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நினைவகம்
- தினசரி நாளேடு
Blog என்றால் என்ன?
Blog என்பது தொடர்ச்சியாகவோ அல்லது சீரான இடைவெளியிலோ கட்டுரைகளை வெளியிடும் ஒரு இணையதளம் ஆகும். இந்த Blog இல் தனிப்பட்ட தகவல்கள் (Personal Blog), கதைகள் (Story Blog), சுய முன்னேற்றம் (Self Development Blog), தொழில்நுட்பம் (Technology), தினசரி செய்திகள் (Daily News), பயண அனுபவங்கள் (Travel Experience) இது போன்ற பல்வேறு வகைகளில் கட்டுரைகளை வெளியிடலாம்.
இணையதளங்களில் வெளியிடும் கட்டுரைகளை வலைப்பதிவுகள் (Blog Post) என்றும் அழைக்கலாம். வலைப்பதிவுகளை Publish செய்த பிறகு, இணையத்தை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், அந்த வலைப்பதிவுகளை படிக்க முடியும்.
பொதுவாக ஒரு இணையதளம் அல்லது வலைத்தளத்தில் வலைப்பதிவுகளை வெளியிடும் போது தலைகீழ் கால வரிசையில் காட்டும். அதாவது ஒரு புதிய வலைப்பதிவை எழுதி வெளியிடும்போது, அந்த இணையதளத்தில் முதல் வலைப்பதிவு (Post) ஆக காட்டும். ஏற்கனவே முதல் இடத்தில் இருந்த பழைய Post ஆனது இரண்டாவது இடத்திற்கு சென்று விடும்.
ஒரு இணையதளத்தில் எண்ணிலடங்காத Post களை எழுதி அதை Publish செய்ய முடியும். அதாவது நீங்கள் சில நூறுகள், ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் என எவ்வளவு Post களை வேண்டுமானாலும் போட முடியும்.
ஒரு Blog இன் அமைப்பு (Structure) எப்படி இருக்கும்?
பொதுவாக ஒரு வலைத்தளம் பல பகுதிகளை கொண்டிருக்கும். இருப்பினும் பெரும்பாலான அனைத்து வலைத்தளங்களும் கீழ்காணும் சில முக்கிய பகுதிகளை கொண்டிருக்கும்.
Header Section:
இது ஒரு வலைத்தளத்தின் மேல் பகுதியில் இருக்கும். இதில் இணையதளத்தின் Logo, Blog Title மற்றும் Main Navigation Menu இருக்கும். Navigation Menu என்பது Home, About, Contact, போன்ற பக்கங்களை (Pages) கொண்டிருக்கும்.
Body:
இது ஒரு வலைத்தளத்தின் முக்கியமான பகுதியாகும். ஏனெனில் இந்த பகுதியில் தான் நாம் Publish செய்யும் Post கள் இருக்கும். இதில் தேவையான Post களின் மீது கிளிக் செய்து படிக்கலாம்.
Sidebar:
Sidebar ஆனது Body பகுதியின் வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ அல்லது இரண்டு பக்கங்களிலோ இருக்கும். இந்த பகுதியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பதிவுகள் (Recent Posts), விட்ஜெட்கள் (Widgets), Tags, Category போன்ற அம்சங்கள் இருக்கும்.
Footer Section:
இது வலைப்பக்கத்தின் கீழே இருக்கும். இதில் Privacy Policy, Disclaimer, Contact Details, Company Address போன்ற பக்கங்களை எளிதாக அணுகும் வகையில் இருக்கும்.
Blog மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
பொதுவாக அனைவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து சம்பாதிப்பர். அல்லது ஒரு தொழிலை தொடங்கி அதை மேம்படுத்தி அதன் மூலம் பணத்தை ஈட்டுவார்கள். ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்க்கு நிச்சயமாக அதிக பணம் தேவைப்படும் என்று உங்களுக்கு தெரியும்.
ஆனால் ஒரு நிறுவனத்திற்கு போகாமலும், அதிகமான பணத்தை முதலீடு செய்து தொழிலை தொடங்காமலும் வீட்டில் இருந்தவாறே பணத்தை சம்பாதிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.
அது சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம் தான் என்று சொல்வேன்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஒரு வலைத்தளத்தை தொடங்கி அதில் இருந்து பணத்தை ஈட்ட முடியும். ஆன்லைன் மூலம் நேர்மையாக பல வழிகளில் சம்பாதிக்கலாம். அவற்றில் மிக அதிகமாக வருமானம் தரக்கூடிய வழி தான் Blog யை தொடங்குவது.
இன்று பலபேர் வலைத்தளங்களின் மூலம் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை பணம் ஈட்டுகின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு வலைத்தளத்தை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் இருந்தால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
ஒரு Blog யை தொடங்குவதால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் ஒரு வலைத்தளத்தை தொடங்கும்போது, அது மக்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்கள் ஆர்வமாக படிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வருவார்கள். உங்களின் முக்கிய வேலை வலைத்தளத்தில் பயனுள்ள Post களை தொடர்ச்சியாக வெளியீட்டு பார்வையாளர்களை கொண்டு வர வேண்டும்.
பிறகு Google Adsense, Affiliate Marketing, Direct Advertisements, Launch online courses, Sell Products போன்ற பல்வேறு வழிகளில் பணத்தை ஈட்டலாம். இதில் கூறியது சில தான் இதை போன்று எண்ணற்ற வழிகள் உள்ளன.
ஒரு வலைத்தளத்தை தொடங்க HTML, CSS, Javascript போன்ற பல்வேறு கோடிங் அறிவு தேவையா என்று நீங்கள் யோசிக்கலாம். அவற்றை தெரிந்து வைத்திருந்தால் சிறந்தது தான். ஆனால் அவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தற்போது WordPress இல் அனைத்திற்குமே Plugins இருக்கிறது. எனவே கோடிங் தெரியவில்லை என்ற கவலை வேண்டாம்.
Google Adsense என்றால் என்ன?
Google Adsense என்பது Blog, Youtube, App போன்றவற்றில் இருந்து பணம் சம்பாதிக்க உதவும் ஒரு விளம்பர தளமாகும். ஒரு வலைத்தளத்தை கூகிள் Adsense இல் Approve வாங்கிய பிறகு தான் Adsense இல் இருந்து பணத்தை ஈட்ட முடியும்.
சரி Adsense எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
கூகுள் ஆட்சென்ஸ் இல் இருந்து பணம் சம்பாதிக்க விரும்பும் வெளியீட்டாளர்கள் முதலில் கூகுள் ஆட்சென்ஸ் திட்டத்தில் இணைய வேண்டும். வெளியீட்டாளர்கள் என்பது வலைத்தளங்களை வைத்திருப்பவர்கள் ஆவர்.
வெளியீட்டாளர்கள் கூகுள் ஆட்சென்ஸ் இல் இணையும் போது, Google Adsense தரப்பில் இருந்து திட்டத்தில் இணையும் வலைத்தளத்தை முழுமையாக ஆய்வு செய்வார்கள். வலைத்தளம் திட்டத்திற்கு தகுதியானது என்று அறிந்த பிறகு அந்த வலைத்தளத்திற்கு Approve கொடுப்பார்கள்.
விளம்பரதாரர்கள் தங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கு Google Adsense யை அணுகுவார்கள். Adsence ஆனது அந்த விளம்பரங்களை வெளியீட்டாளர்களின் வலைத்தளங்களில் விளம்பரம் செய்வார்கள். அந்த விளம்பரங்களில் கிடைக்கும் வருமானத்தில் வெளியீட்டாளர்களுக்கு 68% சதவீதத்தை கொடுத்து மீதமுள்ள 32% சதவீதத்தை கூகுள் ஆட்சென்ஸ் எடுத்துக்கொள்ளும்.
அதாவது விளம்பரங்களில் இருந்து 100 ரூபாய் வருவாய் வந்தால், அதில் Rs.68 ரூபாய் வலைத்தளதாரர்களுக்கும், Rs.32 ரூபாய் கூகுள் ஆட்சென்ஸ்க்கும் பிரித்து வழங்கப்படும்.
ஒரு வலைத்தளத்தை தொடங்க என்ன தேவை?
நீங்கள் ஒரு வலைப்பதிவை தொடங்குகிறீர்கள் என்றால் அதற்க்கு கீழ்காணுபவை தேவைப்படுகிறது.
Domain Name:
ஒரு Blog யை தொடங்குவதற்கான முதல் பணி Domain பெயரை தேர்வு செய்வதாகும். டொமைன் பெயர் என்பது ஒரு இணையதளத்தை அடைய Browser இல் Type செய்யும் உரையாகும். இதுவே ஒரு வலைதளத்தின் அடையாளம் ஆகும்.
உதாரணமாக, Google இன் Domain பெயர் google.com ஆகும்.
Hosting:
ஒரு இணையதளத்தை இயக்குவதற்கு ஹோஸ்டிங் மிக முக்கியமாகும். வலைத்தளத்தில் வெளியிடப்படும் பதிவுகள், படங்கள் போன்ற அனைத்தையும் சேமிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு நினைவகம் தேவைப்படும். அவை அனைத்தையும் நிறைவு செய்பவையே Hosting ஆகும்.
இந்த hosting இருந்தால் மட்டுமே ஒரு இணையதளத்திற்கு தேவையான WordPress, Plugins என அனைத்தையும் Install செய்து முதல் Post யை வெளியிட முடியும். பல்வேறு நிறுவனங்கள் Hosting சேவையை வழங்குகின்றன. அதில் நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து அதன் கட்டணங்களும் மாறுபடும்.
WordPress:
WordPress என்பது இலவசமாக கிடைக்கும் ஒரு Content Management System (CMS) ஆகும். Domain மற்றும் Hosting ஆகிய இரண்டையும் Configuration செய்த பிறகு, WordPress யை Install செய்ய வேண்டும்.
இந்த WordPress மூலமாக தான் உங்களின் வலைப்பதிவு மற்றும் வலைப்பதிவில் வெளியிடப்படும் பதிவுகள் அனைத்தையும் நிர்வகிக்க முடியும். கோடிங் அறிவு இல்லாமல் வலைத்தளத்தை இயக்குவதற்கு இந்த WordPress முக்கிய பங்கு வகிக்கிறது.
முடிவுரை
வலைப்பதிவை பற்றி சொல்வதற்கு இன்னும் எண்ணற்ற தகவல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்த ஒரு வலைப்பதிவின் மூலம் சொல்லிவிட முடியாது. இருப்பினும் இந்த பதிவு ஒரு Blog என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு தொடங்குவது என்பதை பற்றிய ஓரளவு புரிதலை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த பதிவை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும்.