கிரெடிட் கார்டு என்றால் என்ன? | What is Credit Card in Tamil
கிரெடிட் கார்டு என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? நிச்சயமாக பல பேருக்கு இந்த கேள்வி எழலாம். நீங்கள் வங்கிக்கணக்கை பயன்படுத்துபவராக இருந்தால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற வார்த்தைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
டெபிட் கார்டு என்பது நாம் பணத்தை எடுக்க பயன்படுத்தும் ATM Card என்று தெரியும். ஆனால் Credit Card என்பது என்ன மற்றும் அதன் பயன்பாடு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
கிரெடிட் கார்டு என்றால் என்ன?
கிரெடிட் கார்டு என்பது வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் அட்டையாகும். இந்த கடன் அட்டையை கொண்டு அந்த வாடிக்கையாளர் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையின் மூலம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க முடியும்.
அப்படி விலைக்கு வாங்கிய பிறகு ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் அல்லது மாதத்தவனை (EMI) மூலம் செலுத்தலாம். கடன் அட்டைக்கான (Credit Card) வரம்புகள் அதை வழங்கும் வங்கிகள் நிர்ணயிக்கின்றன.
Credit Card Meaning in Tamil
Credit Card = கடன் அட்டை
கிரெடிட் கார்டை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இந்த கடன் அட்டையை பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் பொருள் அல்லது சேவையை விலைக்கு வாங்கினால், அதற்கான பணத்தை வங்கிகள் உடனடியாக கிரெடிட் கார்டு மூலம் வழங்குகின்றன. பிறகு அந்த வாடிக்கையாளர் வங்கிகளுக்கு மாதத்தவனையாக (EMI) செலுத்தலாம்.
இதற்காக ஒரு குறிப்பிட்ட வட்டியை (Interest) வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கின்றன.
கிரெடிட் கார்டுக்கும் டெபிட் கார்டுக்கு என்ன வேறுபாடு
Credit Card மற்றும் Debit Card (ATM Card) ஆகிய இரண்டும் ஒரே மாதிரி மற்றும் ஒரே அளவில் இருக்கும். ஆனால் இரண்டும் வெவ்வேறு ஆகும்.
டெபிட் கார்டு என்பது நீங்கள் செலவழிக்கும் பணம் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து கழிக்கப்படும். கிரெடிட் கார்டு என்பது நீங்கள் செலவழிக்கும் பணம் வங்கிகள் வழங்கிய கிரெடிட் வரம்பில் (Credit Limit) இருந்து கழிக்கப்படுகிறது.
Credit Card யை எங்கு பயன்படுத்தலாம்?
ஆன்லைனில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். மேலும் ஆஃப்லைனிலும் Swipe Machine இல் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து பயன்படுத்தலாம்.
நீங்கள் கிரடிட் கார்டை பயன்படுத்திய பிறகு அதற்கான பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால், அதற்கான அபாராத்தை செலுத்த வேண்டும்.
மேலும் இவ்வாறு தாமதமாக செலுத்தினால் அது உங்களின் Cibil Score யை பாதிக்கும். எனவே பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துவது சிறந்ததாகும்.
உங்களின் கடன் அட்டையை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
கிரெடிட் அட்டையை எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
வங்கிகளும் மற்றும் சில நிதி நிறுவனங்களும் கிரெடிட் கார்டு சேவையை வழங்குகின்றன. நீங்கள் நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கிரெடிட் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் விண்ணப்பித்த பிறகு உங்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தகுதி இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். சில வங்கிகள் Virtual Credit Card யை வழங்குகின்றன. இதை பயன்படுத்தியும் நீங்கள் பொருட்களை வாங்கலாம்.
முடிவுரை
கிரெடிட் கார்டு என்றால் என்ன என்ற உங்களின் சந்தேகத்தை இந்த பதிவு தீர்த்துவைப்பதாக நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
இதையும் படியுங்கள் |