How to Download Driving Licence, Pan Card to DigiLocker
DigiLocker என்னும் ஆன்லைன் சேமிப்பகத்தில் Driving License, PAN Card போன்ற ஆவணங்களை Link செய்து Download செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசு DigiLocker என்ற Cloud சேமிப்பகத்தை அறிமுகப்படுத்தியது. இது குடிமக்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆன்லைனில் சேமித்தல் மற்றும் பகிர்வதற்கு பாதுகாப்பான தளம் ஆகும். ஏனெனில் டிஜிலாக்கர் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் தளமாகும். அனைத்து இடங்களிலும் காகித வடிவிலான ஆவணங்களை எடுத்துச்செல்வதை அகற்றுவதற்கு DigiLocker என்ற தளம் கொண்டுவரப்பட்டது.
குடிமக்கள் DigiLocker Account -யை பதிவு செய்ததும், 1 GB அளவுள்ள சேமிப்பு இடம் வழங்கப்படும். அதில் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமித்துக்கொள்ளலாம்.
Table of Contents
Benefits of Download Driving License on DigiLocker
டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்யப்படும் ஓட்டுநர் உரிமதால் பின்வரும் பயன்களை பெறலாம்.
- உங்களின் வாகன பயணத்தின் போது Driving License -யை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் டிஜிலாக்கர் கணக்கில் Download செய்துள்ள ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்கலாம்.
- ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து தகவல்களையும் Online -ல் மீட்டெடுக்கலாம். எனவே அவற்றை பற்றிய தகவல்களை நீங்கள் நினைவில் வைத்திருக்க அவசியம் இல்லை.
- நீங்கள் ஓட்டுநர் உரிமத்தை அடையாள சான்றிற்காக வழங்க விரும்பினால், அதை டிஜிலாக்கர் கணக்கில் இருந்து பகிரலாம். இதனால் Physical Document -யை கொடுக்க தேவை இருக்காது.
- டிஜிலாக்கரில் உள்ள ஓட்டுநர் உரிமம் சம்மந்தப்பட்ட துறையில் இருந்து நேரடியாக Download ஆவதால், டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை சரிபார்க்க முடியும்.அதிகாரிகள் QR Code -யை Scan செய்து சரிபார்க்கலாம்.
Benefits of Download PAN Card on DigiLocker
- PAN Card -ல் உள்ள தகவல்கள் டிஜிலாக்கரால் சரிபார்க்கப்படுகிறது. எனவே டிஜிலாக்கரால் சரிப்பார்க்கப்பட்ட PAN Card -யை நம்பகமான ஆவணமாக கருதப்படுகிறது.
- டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட இந்த பான் ஆவணத்தை, மின்னணு முறையில் பயன்படுத்தும்போது IT சட்டம் 2000 இன் படி செல்லுபடியாகும்.
- PAN குறித்த தகவல்கள் தேவைப்படும் அரசு துறை மற்றும் நிறுவனங்களுக்கு டிஜிலாக்கர் கணக்கின் வழியாக PAN Document -யை பகிரலாம்.
மேலும் படிக்க – How to Register DigiLocker Account
How to Download Driving License, PAN Card on DigiLocker
Step 1: முதலில் https://digilocker.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Step 2: ஏற்கனவே Register செய்யப்பட்ட DigiLocker கணக்கை Sign In செய்யவும். நீங்கள் இன்னும் DigiLocker கணக்கை Register செய்யவில்லை என்றால், Sign Up என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
Step 3: கணக்கை Sign In செய்தவுடன் Dashboard தோன்றும். அதில் Get Issued Documents என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: Search Box -ல் Driving Licence என்று டைப் செய்தால் வரும் தேர்வுகளில் All States, Ministry of Road Driving License என்பதை கிளிக் செய்க.
Step 5: உங்களின் Name மற்றும் Date of Birth -ல் ஆதார் அட்டையில் உள்ளபடி முன்பே நிரப்பப்பட்டிருக்கும். எனவே அதை மாற்ற இயலாது.
Step 6: Driving License No என்ற இடத்தில் உங்களின் DL எண்ணை கொடுத்து Check Box -யை டிக் செய்ய வேண்டும்.
Step 7: பிறகு Get Document என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 8: இப்போது டிஜிலாக்கர், போக்குவரத்து துறையின் சர்வரில் இருந்து ஓட்டுநர் உரிமத்தை Download செய்யும்.
Download செய்யப்பட்ட ஆவணம் Issued Document என்ற பிரிவில் இருக்கும்.
Download PAN Card
Step 1: https://digilocker.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Step 2: டிஜிலாக்கர் கணக்கை Sign In செய்யவும்.
Step 3: Dashboard -ல் உள்ள Get Issued Document என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: Search Box -ல் Income Tax என்று டைப் செய்தால் Income Tax Department, All States என்று வரும்.
Step 5: அதை கிளிக் செய்த பிறகு வரும் PAN Verification Record என்பதை அழுத்தவும்.
Step 6: ஆதார் அட்டையில் உள்ள Name மற்றும் Date of Birth ஆகியவை ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும்.
Step 7: உங்களின் PAN Number -யை உள்ளிட்டு அதற்கு கீழே, உங்களின் பெயர் PAN Card -ல் உள்ளபடி கொடுக்கவும்.
Step 8: Check Box -யை டிக் செய்து Get Document என்பதை கிளிக் செய்யவும்.
Step 9: நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக இருந்தால் PAN Card Download ஆகும்.
Step 10: Issued Documents என்ற பிரிவில் சென்று பதிவிறக்கம் செய்த ஆவணத்தை காணலாம்.
டிஜிலாக்கர் கணக்கில் RC, School Mark Sheet இதுபோன்ற பலவிதமான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து Digital வடிவில் சேமிக்கலாம். பிறகு தேவைப்படும் போது அதிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க – How to Upload Documents to DigiLocker
வருங்காலத்தில் ஒரு தனிநபரின் அனைத்து ஆவணங்களையும் டிஜிலாக்கர் கணக்கில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த தகவல்களை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை Comment பிரிவில் பதிவிடவும். மேலும் பயனுள்ள பதிவுகளின் அறிவிப்புகளை பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.