How to Download Driving License in DigiLocker Mobile App
உங்களின் Driving License -யை Digilocker என்ற மொபைல் செயலியில் Download செய்து பயன்படுத்தும் சேவையை இந்திய அரசாங்கம் வழங்குகிறது. இவ்வாறு Download செய்யப்படும் Driving License -யை அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிலாக காட்டலாம்.
DigiLocker என்பது இந்திய குடிமகன் தன்னுடைய ஆவணங்களை Digital வடிவில் சேமித்து வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஆன்லைன் சேமிப்பகம் (Cloud Storage) ஆகும். டிஜிலாக்கர் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான தளம் ஆகும்.
குடிமக்கள் தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை (Certificate) டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம். இவ்வாறு சேமிக்கப்படும் ஆவணங்கள் JPEG, PNG மற்றும் PDF ஆகிய வடிவில் மட்டுமே இருக்க வேண்டும்.
Table of Contents
DigiLocker Mobile App
DigiLocker சேவையை Mobile Application வழியாகவும் பெற முடியும். இதற்காக Play Store -ல் DigiLocker என்று Search செய்தால் வரும் App -யை Install செய்துகொள்ளலாம்.
அல்லது
கீழே உள்ள Link -யை கிளிக் செய்தும் DigiLocker App -யை நிறுவிக்கொள்ளலாம்.
Android App – https://play.google.com/store/apps/details?id=com.digilocker.android&hl=en_IN
Apple App – https://apps.apple.com/in/app/digilocker/id1320618078
How to Download Driving License in DigiLocker App
நீங்கள் முதல் முறையாக டிஜிலாக்கரை பயன்படுத்திகிறீர்கள் என்றால், அதில் Sign Up செய்து Account யை Register செய்ய வேண்டும்.
டிஜிலாக்கர் கணக்கை Sign Up செய்வதை பற்றிய செயல்முறைகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்க.
How to Register DigiLocker Account?
ஏற்கனவே Register செய்த டிஜிலாக்கர் கணக்கில், பின்வரும் செயல்முறைகளின் மூலம் Mobile App -ல் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கலாம்.
Step 1: DigiLocker App -யை கிளிக் செய்து Open செய்ய வேண்டும்.
Step 2: Sign in என்பதை கிளிக் செய்க.
Step 3: Mobile, Aadhaar அல்லது Username இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்து Sign in with OTP என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இப்பொழுது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை கொடுத்து Continue என்பதை கிளிக் செய்க.
Step 5: Security PIN -யை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 6: Get your Digital Driving License என்பதை கிளிக் செய்யவும்.
அல்லது
Step 7: Get Issued Documents என்பதை கிளிக் செய்தால் Search Box வரும். அதில் Ministry of Road Transport and Highways, All States என்பதை Type செய்து, Driving License என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள Name மற்றும் Date of Birth ஆகியவற்றை தானாகவே எடுத்துக்கொண்டு தற்போது உங்களுக்கு தெரியும்.
Step 8: உங்களின் ஓட்டுநர் உரிமம் எண்ணை கொடுத்து Get Document என்பதை கிளிக் செய்தால் Driving License ஆனது Download ஆகிவிடும்.
Step 9: பதிவிறக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை Issued Documents என்ற பகுதியில் காணலாம்.
Benefits
- உங்களின் வாகன பயணத்தின் போது காவலர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிலாக இந்த Digital License -யை காண்பிக்கலாம்.
- இது DigiLocker ஆல் Verify செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.
மேலும் படிக்க – How to Upload Documents in DigiLocker
அரசாங்கத்தின் இந்த மாதிரியான டிஜிட்டல் வழி சேவைகள் வரவேற்கத்தக்கது ஆகும். ஓட்டுநர் உரிமம் சம்மந்தப்பட்ட துறையின் சர்வரில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் ஆவதால், இதில் மோசடிகள் செய்ய முடியாது. எதிர்காலங்களில் இந்த சேவைக்கு அதிகமான வரவேற்பு இருக்கும். இதேபோல் RC Book மற்றும் Insurance போன்றவைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.