DigiLocker

How to Upload Your Documents in DigiLocker

DigiLocker ஆனது, காகிதமற்ற Documents என்ற கருத்தை நோக்கமாக கொண்டது. இது Digital India என்ற அரசாங்க திட்டத்தின் ஒரு முயற்சி ஆகும். ஒரு குடிமகனின் சான்றிதழ் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்குதல், சேமித்தல், பகிர்தல் மற்றும் சரிபார்த்தல் போன்ற செயல்பாடுகளை Online மூலம் செய்ய முடியும். 

ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 GB அளவிலானாக DigiLocker கணக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிலாக்கர் கணக்கில் Aadhaar, PAN, Driving Licence, School Certificates போன்ற பல ஆவணங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது. மேலும் தனிப்பட்ட பல ஆவணங்களை உங்களின் டிஜிலாக்கர் கணக்கில் Upload செய்யலாம்.

Table of Contents

Register For DigiLoker

உங்களின் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிலாக்கரில் Upload செய்ய வேண்டுமென்றால், முதலில் கணக்கை Register செய்ய வேண்டும். மொபைல் அல்லது கணினியில் எளிமையாக Digilocker Account யை Register செய்யலாம்.

Read  How to Download Driving Licence, Pan Card to DigiLocker

மொபைல் எண்ணை கொண்டு OTP Number மூலம் Authenticate செய்து கணக்கை Register செய்யலாம். இருப்பினும், ஆதார் எண் மூலம் Authenticate செய்தால் மட்டுமே, டிஜிலாக்கரில் உள்ள கூடுதல் சேவைகளை பெற முடியும்.

கணினியில் https://digilocker.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், மொபைலில் DigiLocker என்ற Anroid Application மூலமும் கணக்கை பதிவு செய்யலாம்.

How to Upload Document to DigiLocker Account

DigiLocker-ல் உங்களின் தனிப்பட்ட Documents-களை பின்வரும் செயல்முறைகளில் Upload செய்யலாம்.

Step 1: https://digilocker.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: Sign in என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Sign in - Digilocker

Step 3: உங்களின் Mobile OTP மூலமாகவோ அல்லது Username & Password மூலமாகவோ கணக்கை திறக்க வேண்டும்.

Login Account - Digilocker documents

Step 4: இப்பொழுது உங்களின் கணக்கின் Dashboard திறக்கும். அதில் Uploaded Documents என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Click Upload Documents

Step 5: Folder என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Folder -களை உருவாக்கிக்கொள்ளலாம்.

Read  DigiLocker: How to Register DigiLocker Account in Online

Create Folders - Digilocker Documents

Step 6: DigiLocker-ல் Documents -யை Upload செய்ய Upload என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Click Upload for Digilocker documents upload

Step 7: இப்பொழுது நீங்கள் எந்த ஆவணத்தை பதிவேற்ற வேண்டுமோ அதன் மேல் Double Click செய்ய வேண்டும். பிறகு உங்களின் ஆவணம் Upolad ஆகிவிடும்.

here documents uploaded

Step 8: Upload செய்த Document -ன் வகையையும் தேர்வு செய்யலாம். மேலும் அந்த ஆவணத்தை Share, Download, Delete போன்றவைகளை செய்யலாம்.

Digilocker documents share,download,delete

குறிப்பு :

நீங்கள் DigiLocker -ல் Document Upload செய்யும்போது கீழ்காணும் நிபந்தனைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

  • பதிவேற்றம் செய்யும் ஆவணத்தின் அதிகபட்ச அளவு 10 MB ஆகும். அதாவது 10 MB -க்கும் அதிகமாக இருக்கக்கூடாது. 
  • அனுமதிக்கப்பட்ட ஆவண வகைகள் PDF, JPEG, PNG
  • ஆவணங்களின் பெயரில்  \ / : * ? ” < > | ` ^ and ~ போன்ற குறியீடுகள் இருக்க கூடாது.

Benefits of DigiLocker 

  • டிஜிலாக்கர் காகித பயன்பாட்டை குறைத்து, அரசாங்கத்தின் நிர்வாக செலவுகளை குறைக்கிறது.
  • DigiLocker Documents டிஜிட்டல் வடிவில் இருப்பதால், அதை எங்கிருந்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • டிஜிலாக்கரில் சுய சான்றிதழ்க்கு (self-attestation) ஓத்தாக e Sign வசதி உள்ளது.
Read  How to Download Driving License in DigiLocker Mobile App

டிஜிலாக்கர் திட்டமானது, இந்தியாவை Digital அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட அரசின் முதன்மை திட்டமாகும். டிஜிலாக்கர், ஆன்லைன் மூலமாக சான்றிதழ்களை வழங்குவதற்கும், சரிபார்ப்பதற்கும் ஒரு தளமாகும். இது மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும். மேலும் இது போன்ற பல பயனுள்ள கட்டுரைகளின் அறிவிப்புகளை பெற கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole