DigiLocker: How to Register DigiLocker Account in Online
நீங்கள் Digilocker யை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் Voter Id, Aadhaar Card போன்ற ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வருங்காலத்தில் இந்த டிஜிலாக்கரும் முக்கியமானதாக கருதப்படும். உங்களுக்கு இந்த டிஜிலாக்கரை பற்றி தெரியவில்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த டிஜிலாக்கர் என்றால் என்ன, அதன் பயன்கள் யாவை மற்றும் இதற்க்கு எப்படி Register செய்வது போன்றவற்றை பற்றிய முழு தகவல்களையும் இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
டிஜிலாக்கரின் சுருக்கம்:
Name | Digilocker |
Department | Ministry of Electronics and Information Technology |
Launch Year | 2015 |
Intent | Indian Digitization |
Launched by | Prime Minister (Narendra Modi) |
Official App | DigiLocker |
Official Website | https://www.digilocker.gov.in |
Table of Contents
What is DigiLocker?
DigiLocker என்பது இந்திய குடிமக்களின் ஆவணங்களை மின்னணு வடிவில் சேமித்து வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் சேமிப்பகம் (Cloud Storage) ஆகும். இது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த வசதியை மொபைல் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டின் மூலமாக பெறலாம்.
டிஜிலாக்கர், குடிமக்களின் மின்னணு ஆவணங்களை சேமித்து, தேவைப்படும் நேரத்தில் அதை அணுகி பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
டிஜிலாக்கரில் என்னென்ன ஆவணங்களை சேமிக்கலாம் ?
டிஜிலாக்கரில் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களின் மின்னணு நகல்களை சேமிக்கலாம். அவற்றில் சில முக்கிய ஆவணங்களின் பெயர் பட்டியல் கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆவணங்கள் | Documents |
ஆதார் அட்டை | Aadhaar Card |
வாக்காளர் அடையாள அட்டை | Voter ID Card |
பான் கார்டு | PAN Card |
பிறப்பு சான்றிதழ் | Birth Certificate |
இறப்பு சான்றிதழ் | Death Certificate |
சாதிசான்றிதழ் | Community Certificate |
வருமான சான்றிதழ் | Income Certificate |
வாரிசு சான்றிதழ் | Legal Heir Certificate |
இருப்பிட சான்றிதழ் | Nativity Certificate |
10th மதிப்பெண் பட்டியல் | 10th Marksheet |
12th மதிப்பெண் பட்டியல் | 12th Marksheet |
குடிமக்களின் தனிப்பட்ட ஆவணங்களையும் சேமிக்க முடியும். அதாவது, ஆவணங்களின் Scan செய்யப்பட்ட நகல்களையும் பதிவேற்றலாம்.
e- Sign வசதி
டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த ஆவணங்களை, சேவை வழங்கும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். DigiLocker -ல் வழங்கப்பட்ட e-Sign வசதியைக்கொண்டு, ஆவணங்களை மின்னணு முறையில் கையொப்பமிடலாம். இந்த மின்னணு கையொப்பமிடுதல் முறையானது, அசல் ஆவணங்களின் சுய சான்றளிப்பு போன்றது.
Benefits of DigiLocker Account
- இந்திய குடிமக்களுக்கு Digital முறைகள் அதிகாரம் அளிக்கிறது.
- ஆவணங்களை ஆன்லைன் சேமிப்பகத்தில் சேமிப்பதால், தேவைப்படும்போது எளிமையாக கிடைக்கிறது.
- போலி ஆவணங்கள் மற்றும் அசல் ஆவணங்களின் பயன்பாட்டை குறைக்கிறது.
- அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மின்னணு ஆவணங்களை பாதுகாப்பான முறையில் அணுக உதவுகிறது.
- அரசு துறை மற்றும் நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை குறைக்கிறது.
- ஆவணங்களை கையிலெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் ஆவணங்களை விரைவாக அணுக முடியும்.
- சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மின்னணு முறையில் Documen-களை பகிர முடியும்.
- குடிமக்கள் தரவுகளின் முழுமையான privacy-யை உறுதி செய்கிறது.
- மொபைல் அல்லது கணினியின் மூலம் டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்த முடியும்.
How to Register for Digilocker Account
DigiLocker Account -யை Register செய்ய பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.
Step 1: முதலில் https://digilocker.gov.in என்ற டிஜிலாக்கரின் Official இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: Sign Up என்பதை கிளிக் செய்க.
Step 3: இப்போது தோன்றும் Sign Up பக்கத்தில் Mobile Number அல்லது Aadhaar Number -யை கொடுத்து Continue என்பதை கிளிக் செய்க.
Step 4: Aadhaar Number -யை கொடுத்தால் மட்டுமே, டிஜிலாக்கரின் பல சேவைகளை பயன்படுத்த முடியும். எனவே, ஆதார் எண்ணை உள்ளிட்டு கணக்கை Register செய்க.
Step 5: இப்பொழுது ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 6: Set Security PIN என்ற பக்கம் திறக்கும். அதில் 6 இலக்க PIN Number -யை Set செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 7: இப்போது வெற்றிகரமாக உங்களின் டிஜிலாக்கர் கணக்கு Open ஆகிவிடும்.
டிஜிலாக்கரில் உள்ள கூறுகள் (Components)
டிஜிலாக்கரில் உள்ள வெவ்வேறு Components -கள் பின்வருமாறு:
Dashboard
இது ஒரு பயனர் இடைமுகமாகும். டிஜிலாக்கரில் உள்ள சில முக்கிய தகவல்களை இந்த Dashboard -ல் காட்டுகிறது.
Issued Documents
பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் இருந்து வரும் ஆவணங்கள், நேரடியாக உங்களின் டிஜிலாக்கரில் வருகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட ஆவணங்களை இந்த Issued Document பகுதில் காணலாம்.
Uploaded Documents
உங்களின் சொந்த Documents மற்றும் சான்றிதழ்களை இதன் வழியே Upload செய்யலாம்.
Shared Documents
இந்த பிரிவு நீங்கள் மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட Documents / Certificates போன்றவற்றை காட்டுகிறது.
Activity
இந்த பிரிவு ஆனது உங்களின் எல்லா செயல்பாடுகளையும் காட்டுகிறது.
Issuers
வழங்குநர்கள் (Issuers) என்பது அரசு துறை மற்றும் நிறுவனங்கள் ஆகும். வழங்குநர்கள் டிஜிலாக்கர் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். உங்களின் அரசு சம்பந்தமான ஆவணங்களை பெற இங்கே செல்லலாம். (Example: Aadhaar Card, Driving Licence, RC Book .ect …)
Requesters
கோரிக்கையாளர்கள் (Requesters) டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். பயனாளர்கள் வெவ்வேறு சேவைகளை பெறும்போது, அதற்க்கு தேவையான ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் Online -ல் பகிர்ந்து கொள்ளலாம்.
Profile
இந்த பகுதியில் உங்களின் Name, Date of Birth, Gender போன்ற தகவல்கள் இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தானாகவே Profile பகுதிக்கு Fetch செய்து கொள்ளும். டிஜிலாக்கர் கணக்கை Open செய்த பிறகு, ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்தால், Update Profile என்ற இடத்தில் Verify செய்ய வேண்டும்.
Account Setting
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1 GB Online சேமிப்பகத்தில், தற்போது எவ்வளவு சேமிப்பகத்தை (Storage) பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறியலாம். மேலும் Email ID -யை மாற்றி Verification செய்யலாம்.
மேலும் படிக்க – How to Upload Documents in Digilocker |
முடிவுரை
இந்திய அரசு வழங்கும் DigiLocker என்னும் ஆன்லைன் சேமிப்பகம், ஒரு குடிமகனின் முக்கிய ஆவணங்களை நிர்வகிக்க பயனுள்ளதாக இருக்கும். பிற்காலத்தில் இந்த டிஜிலாக்கர் அனைத்து குடிமக்களுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
இந்த கட்டுரையில் இந்திய அரசின் டிஜிட்டல் லாக்கரை பற்றிய பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இதை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பெற கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.