How to Download Driving License in Tamil | ஓட்டுநர் உரிமம்

How to Download Driving License in Tamil: நீங்கள் Driving License யை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய நினைக்கிறீர்களா? ஆம் எனில், அவ்வாறு பதிவிறக்கம் செய்வதற்கு எந்த இணையதளம் அல்லது மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் மற்றும் அதற்க்கான படிகள் என்ன என்பதை இங்கு காணலாம்.

இதற்க்கு முன்பு ஒருவர் ஓட்டுநர் உரிமத்தை தொலைத்துவிட்டால், அதை பெறுவதற்கு போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு அதை மீண்டும் பெரும் நடைமுறை கடினமாக இருந்தது. ஆனால் இப்பொழுது Driving License ஆனது டிஜிட்டல் வடிவில் வந்துவிட்டது. அந்த Digital Driving License யை Download செய்து வாகனம் ஓட்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் அசல் ஓட்டுநர் உரிமத்தை அனைத்து இடங்களுக்கும் உடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

What is a Driving License in Tamil?  

Driving License என்பது இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு, உரிமையாளரின் திறன் மற்றும் தகுதிக்கு,  அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ சான்றாகும். இது ஒரு தனிநபருக்கு பொது சாலைகளில் மோட்டார் வாகனத்தை இயக்க சட்டப்பூர்வ அனுமதியை வழங்குகிறது. 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தியாவில் எந்த ஒரு ஓட்டுனரும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது சட்டப்பூர்வத் தேவையாகும்.

Read  How to Pay Traffic Fines Via e-Challan Online in Tamil

ஓட்டுநர் உரிமத்தில் ஓட்டுநரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் உட்பட, ஓட்டுநர் இயக்க அங்கீகரிக்கப்பட்ட வாகனத்தின் வகையின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்கள் உள்ளன.

How to Download a Driving License in Tamil

உங்களின் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய இரண்டு விதமான வழிகள் உள்ளன. அதில் முதலாவது Digilocker மற்றும் இரண்டாவது Parivahan ஆகும். இந்த இரண்டு வழிகளின் மூலம் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது பார்ப்போம்.

1. How to Download a Driving License Through Digilocker 

Step 1: உங்களின் ஸ்மார்ட் போனில் Digilocker என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

Step 2: அந்த செயலியை ஓபன் செய்து Get Started என்பதை கிளிக் செய்யவும்.

Digilocker Account

Step 3: நீங்கள் இந்த செயலிக்கு புதியவர் என்றால் Create Account என்பதை கிளிக் செய்யவும்.

Read  How to Pay Traffic Fines Via e-Challan Online in Tamil

Create Account for Digilocker

Step 4: உங்களின் Name, Date of Birth (இரண்டும் ஆதாரில் இருப்பதை போன்று), Gender, Mobile Number, 6 Digit PIN (நீங்களே உருவாக்கவும்) மற்றும் ஆதார் நம்பர் போன்றவற்றை Enter செய்து Submit செய்தால், Digilocker Account உருவாக்கப்படும்.

Download DL in DIgilocker

Step 5: கணக்கை உருவாக்கிய பிறகு கீழே உள்ள Search என்பதை கிளிக் செய்யவும். 

Search DIgilocker Service

Step 6: அந்த Search Box இல் Driving License என்பதை Type செய்தவுடன், கீழே வரும் Driving License All States என்பதை தேர்வு செய்க.

Driving License All States

Step 7: தற்போது உங்களின் Driving License Number யை Type செய்து Get Document என்பதை அழுத்தவும்.

Download Driving License online in Tamil

Step 8: இப்பொழுது உங்களின் ஓட்டுநர் உரிமம் பதிவிறக்கம் ஆகும். அதை கிளிக் செய்து பார்க்கும்போது -Digilocker ஆல் Verify செய்யப்பட்ட Driving License இருக்கும். இதில் ஒரு ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். 

Read  How to Pay Traffic Fines Via e-Challan Online in Tamil

Digital Driving License

2. Steps to Download a Driving License Through Mparivahan

Step 1: உங்களின் மொபைல் போனில் Mparivahan என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

Step 2: அதை திறந்து Sign Up என்பதை கிளிக் செய்து கணக்கை உருவாக்கவும்.

Step 3: கணக்கை உருவாக்கிய பிறகு My Virtual DL என்பதை கிளிக் செய்யவும்.

Virtual Driving License

Step 4: அதில் உங்களின் DL Number மற்றும் Date of Birth யை கொடுத்து Add My Driving License என்பதை அழுத்தவும்.

Create Virtual DL

Step 5: தற்போது உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளிட்டு Submit செய்யவும். இப்பொழுது Virtual DL வெற்றிகரமாக உருவாக்கப்படும்.

OTP Verification for Driving License Download

Step 6: My Virtual DL என்பதிற்கு கீழே உள்ள Driving License யை செய்து திறக்கவும்.

How to Download Driving License in Tamil

Step 7: இப்பொழுது ஓட்டுநர் உரிமம் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Download Digital License in Tamil

இந்த இரண்டு செயலிகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குபவை ஆகும். எனவே இந்த செயலிகளில் இருந்து காண்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமம் அசலாக கருதப்படும். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest