How to Pay Traffic Fines Via e-Challan Online in Tamil
நீங்கள் Traffic Fines யை Online மூலம் Pay செய்ய நினைக்கிறீர்களா? உங்களின் கேள்வி இதுவென்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். போக்குவரத்து அபராதங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான முழு தகவலையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
மோட்டார் வாகனங்களை இயக்கும் அனைத்து மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஓட்ட வேண்டும். ஆனால் சில நபர்கள் போக்குவரத்துக்கு விதிகளை (Traffic Rules) சரியாக பின்பற்றுவது இல்லை. இவ்வாறு விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு போக்குவரத்து மற்றும் காவல் துறை அபராதங்களை விதிக்கின்றது.
இதற்க்கு முன்பு வரைக்கும் Fine யை செலுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் அபராதத்தை செலுத்தும் இந்த வழிமுறை மக்களுக்கு சிரமாக இருந்தது.
இப்போது அனைத்தும் டிஜிட்டல் ஆக மாறிவிட்ட நிலையில், போக்குவரத்து அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் உங்களின் ஸ்மார்ட் போன் அல்லது கணினியின் மூலமாகவே Traffic Fine யை Pay செய்ய முடியும்.
Table of Contents
Traffic Fines யை கட்டவில்லையென்றால் என்ன ஆகும்?
போக்குவரத்து அபராதத்தை உரிய காலத்திற்குள் கட்ட வேண்டும். அப்படி கட்டாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தால் அதற்கான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டியது வரலாம்.
நீங்கள் அபராதத்தை கட்டவில்லை என்றால், நீங்கள் எப்போதாவது RTO அலுவலகத்திற்கு செல்லும்போது உங்களுக்கான சேவை கிடைக்காது. அதாவது, வாகனத்தை FC க்கு கொண்டு சென்றாலோ அல்லது பிற சேவைகளை பெறுவதற்காக சென்றாலோ அந்த சேவை உங்களுக்கு மறுக்கப்படும்.
ஏனெனில் நீங்கள் கட்டவேண்டிய அபராத தொகையின் விவரங்கள் RTO அலுவலகத்தால் பார்க்க முடியும். முழு அபராத தொகையும் கட்டிய பிறகே RTO அலுவலக சேவைகளை பெற முடியும்.
e-Challan என்றால் என்ன?
வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டால் அதற்க்கு ஒரு ரசீதை கொடுப்பார்கள். அதில் செலுத்த வேண்டிய அபராத தொகை, குற்றத்தின் வகை, பெயர், Challan Number போன்ற தகவல்கள் இடப்பெற்றிருக்கும்.
இந்த Challan இன் மின்னணு வடிமே e-Challan ஆகும். இது மக்களுக்கு வெளிப்படை தன்மையை வழங்குகிறது.
e-Challan மூலம் நீங்கள் Online அல்லது Offline மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
சில நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டு காவலர்களின் கைகளில் அகப்படாமல் சென்றுவிடுகின்றனர். அவர்களின் வாகன எண் CCTV கேமராவில் பதிவாகி இருக்கும். அந்த வாகன எண்ணை கொண்டு அதை பற்றிய தகவல்களை RTO அலுவலகத்தில் இருந்து பெறுகிறார்கள். அவற்றை கொண்டு காவலர்கள் அபராதத்தை விதிக்கிறார்கள்.
அபராதம் விதிக்கப்பட்டவுடன் வாகன உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் அனுப்பப்படும்.
Traffic Fine மற்றும் Challan Status யை எவ்வாறு அறிந்துகொள்வது?
பொதுவாக அபராதம் விதிக்கும்போது தரப்படும் ரசீதில் அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால், விதிகளை மீறிவிட்டு காவலர்களிடம் சிக்காமல் தப்பிக்கும் நபர்கள் ரசீதை பெற்றிருக்க முடியாது. அப்படி இருக்கும் போது அவர்கள் என்ன விதிகளை மீறிள்ளனர் மற்றும் எவ்வளவு தொகையை செலுத்த வேண்டும் என்பதை அறிய விரும்புவர்.
இதற்க்கு e-Challan யை Print அல்லது Download செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதற்கான செயல்முறை பின்வருமாறு பின்பற்றலாம்.
Step 1: நீங்கள் முதலில் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: உங்களுக்கு Challan Number தெரியாது என்பதால் Vehicle Number என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது உங்களின் Vehicle Number, Chassis Number அல்லது Engine Number இன் கடைசி 5 இலக்க எண் மற்றும் Captcha போன்ற தகவல்களை Enter செய்து Get Details என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: தற்போது நீங்கள் செலுத்த வேண்டிய Challan இன் தகவல்கள் வரும். அதில் Challan Print என்ற இடத்தில் உள்ள Print Option யை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு e-Challan திறக்கும். அதில் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
Step 5: மேலும் அந்த ரசீதுக்கான அபராதத்தை கட்டியுள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும். Payment என்ற இடத்தில் Pay Now என்று இருந்தால் நீங்கள் இன்னும் அபராதம் கட்டவில்லை என்று Challan Status தெரிந்துகொள்ளலாம்.
How to Pay Traffic Fines e-Challan Online
Traffic e-Challan அபராதத்தை Internet Banking, Debit Card / Credit Card, BHIM UPI, NEFT மற்றும் SBI Branch Payment ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் பணத்தை செலுத்தலாம்.
இதில் Debit Card (ATM Card) இன் மூலம் எவ்வாறு போக்குவரத்து அபராதத்தை செலுத்துவது என்பதை பின்வரும் படிகளின் மூலம் காணலாம்.
Step 1: நீங்கள் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற வலைத்தளத்திற்கு செல்க.
Step 2: இந்த பக்கத்தில் Vehicle Number என்பதை தேர்வு செய்யவும். பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு Get Details என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்போது வரும் Challan இல் Pay Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் Mobile Number யை Enter செய்து Send OTP என்பதை அழுத்தவும்.
Step 5: OTP Number யை Enter செய்து Submit செய்யவும்.
Step 6: Payment Gateway இல் SBI ePay என்பதை தேர்வு செய்யவும். பிறகு Check Box யை டிக் செய்து Continue என்பதை அழுத்தவும்.
Step 7: Debit Card / Credit Card என்பதை தேர்வு செய்து 16 இலக்க ATM Card Number, Expiry Date, CVV Number மற்றும் Account Holder Name போன்றவற்றை உள்ளிட்டு Pay Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 8: இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit செய்தால், உங்களின் பணம் செலுத்தப்பட்டுவிடும்.
கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை (Receipt) எவ்வாறு பெறுவது?
நீங்கள் பணத்தை செலுத்திய பிறகு அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கான படிகள் பின்வருமாறு ,
Step 1: https://echallan.parivahan.gov.in/index/accused-challan இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: ஏற்கனவே மேலே கூறியபடி Vehicle Number என்பதை தேர்வு செய்து அவற்றின் தகவல்களை உள்ளிடவும். பிறகு Get Details என்பதை அழுத்தவும்.
Step 3: Receipt என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இப்பொழுது நீங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது தோன்றும். அதை நீங்கள் Print அல்லது Download செய்துகொள்ளலாம்.
இன்று Traffic Fines யை Online மூலம் எவ்வாறு Pay செய்வது என்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தமிழ் மொழியில் அறிந்துகொள்ள இந்த இணையதளத்தை அணுகவும்.
மேலும் இந்த கட்டுரையை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.