How to Add / Change Bank Account in EPFO: UAN Account
PF உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் UAN Account இல் Aadhaar Card, PAN Card மற்றும் Bank Details போன்ற KYC தகவல்களை Update செய்வது அவசியமாகும். சமீபத்தில் EPFO ஆனது KYC தகவல்களை புதுப்பிப்பு செய்வதில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. முக்கியமாக வங்கிக்கணக்கை Add செய்வதற்கு OTP முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பற்றிய முழு தகவல்களையும் Step by Step ஆக இந்த கட்டுரையில் காணலாம்.
UAN Number அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொழிலாளர்கள் தங்களின் பிஎப் கணக்கினை Online மூலமாகவே அணுக முடியும். இதன் மூலம் ஒரு பிஎப் உறுப்பினர் தன்னுடைய அனைத்து தகவல்களையும் இணையதளம் அல்லது ஸ்மார்ட் போன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் பணியாளர்கள் தங்களின் PF Amount யை UAN Portal மூலமாகவே Claim செய்ய முடியும். ஆனால் இதற்க்கு KYC Details யை அப்டேட் செய்ய வேண்டும்.
தற்போது EPFO அமைப்பானது, KYC Update செய்யும் இணைய பக்கத்தில் சில மாற்றங்களை புகுத்தியுள்ளது. முக்கியமாக வங்கித்தகவல்களை Add செய்வதில் பல சரிப்பார்ப்பு முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நீங்கள் வங்கித்தகவல்களை சேர்த்திருந்தால், இந்த புதிய முறையை பயன்படுத்தி மீண்டும் சேர்க்க தேவையில்லை.
ஒருவேளை நீங்கள் இன்னும் உங்களின் PF Account இல் வங்கித்தகவல்களை Add செய்யவில்லையா அல்லது ஏற்கனவே இருக்கும் Bank Account Number யை Change செய்ய வேண்டுமா ?
இதற்க்கு ஆம் என்பது உங்களின் பதிலாக இருந்தால், அதற்கான முழு செயல்முறைகளையும் இங்கே சொல்ல போகிறேன்.
How to Add / Change Bank Account in EPFO
பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி உங்களின் PF Account இல் Bank Account Details யை Add அல்லது Change செய்து கொள்ளலாம்.
Step 1: முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற UAN Portal தளத்தை அணுகி உங்களின் UAN கணக்கை Sign In செய்யவும்.
Step 2: பிறகு Manage > KYC என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 3: Add KYC என்ற பிரிவில் உள்ள Bank என்பதனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கு தகவல்களை Enter செய்யும் Option வரும்.
Name as per Bank Account என்ற இடத்தில் தானாகவே உங்களின் பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதாவது UAN கணக்கில் உள்ள பெயர் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்.
Bank Account Number மற்றும் Confirm Bank Account Number என்ற இடங்களில் உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை உள்ளிடவும்.
Bank IFSC என்ற இடத்தில் உங்களின் வங்கிக்கிளையின் IFSC Code யை Enter செய்யவும். பிறகு Verify IFSC என்பதை கிளிக் செய்து சரிப்பார்க்கவும்.
Step 5: கடைசியாக உள்ள Save என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 6: தற்போது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 7: இப்பொழுது நீங்கள் Add செய்த வங்கித்தகவல்கள் வெற்றிகரமாக Save ஆகிவிடும்.
நீங்கள் Save செய்த வங்கித்தகவல்கள் KYC Pending for Approval என்ற பிரிவில் இருக்கும். இதை சில நாட்களில் சரிபார்த்து Approve செய்த பிறகு, Approved KYC என்ற பிரிவிற்கு வந்துவிடும்.
பொதுவாக 10 நாட்களில் உங்களின் வங்கித்தகவல்கள் Approve செய்துவிடுவார்கள். இருப்பினும், சில நேரங்களில் Approve ஒரு மாதம் கூட ஆகலாம்.
இந்த இடுகையில் EPF கணக்கில் உங்களின் வங்கித்தகவல்களை அப்டேட் செய்யும் செயல்முறையை பற்றி சொல்லியிருக்கிறேன். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் PF பற்றிய பல்வேறு தகவல்களுக்கு இந்த இணையதளத்தை Follow செய்யவும்.