EPFO

How to Change Mobile Number in EPF Account Online: UAN Portal

EPF உறுப்பினர்கள் தங்களின் PF Account இல் Mobile Number மற்றும் Email Id யை எவ்வாறு Change அல்லது Update செய்வது என்பதை பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

PF இல் உறுப்பினராக இருக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களும், தங்களின் PF Account இல் Mobile Number யை Update செய்வது அவசியமாகும். ஏனெனில் PF Withdrawal, KYC Update, PF Balance போன்ற பல்வேறு அறிவிப்புகளை (Notifications) பெறுவதற்கு மொபைல் எண் தேவைப்படும்.

பணியாளர்கள் பல்வேறு காரணங்களால் தங்களின் பிஎப் கணக்கில் உள்ள மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

சில பணியாளர்கள், ஏற்கனவே தங்களின் EPF Account இல் கொடுத்த மொபைல் எண்ணை தவறவிட்டிருக்கலாம்.

அல்லது

இதுவரை மொபைல் எண்ணை பதிவு செய்யாமலும் இருக்கலாம்.

இவற்றில் எந்த காரணமாக இருந்தாலும், உங்களின் மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கான செயல்முறைகளை பற்றி விளக்க படங்களுடன் சொல்ல போகிறேன்.

அதற்க்கு முன்பு ஒரு விஷயம். அது என்னவெனில் உங்களின் பிஎப் கணக்கில் Email Id யையும் அப்டேட் செய்வதால் ஏதாவது நன்மை உண்டா என்ற சந்தேகம் வரலாம். 

ஆம் நிச்சயம் உண்டு. நீங்கள் PF குறித்த அறிவிப்புகளை மொபைல் எண்ணில் பெறுவதை போலவே Email Id மூலமும் பெற முடியும். ஆனால் அதற்க்கு நீங்கள் உங்களின் Email Id யை பதிவு செய்ய வேண்டும்.  ஆனால் இது கட்டாயம் அல்ல.

சரி, மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கான செயல்முறைகளை பார்ப்போம்.

How to Update Mobile Number in EPF Account Online

நீங்கள் Mobile Number யை Update செய்வதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது, நீங்கள் இப்பொழுது தான் மொபைல் எண்ணை புதியதாக Register செய்பவராக இருக்கலாம். அல்லது ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் தற்போது உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். அல்லது வேறு காரணங்களுக்காக மொபைல் எண்ணை மாற்ற நின்னைக்கலாம்.

Read  PF (Provident Fund) என்றால் என்ன? | PF Meaning in Tamil

இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் உங்களின் தொலைபேசி எண்ணை எப்படி மாற்றுவது என்பதை பற்றி விளக்கமாக காணலாம்.

How to Register Mobile Number in EPF Account Online

நீங்கள் இன்னும் உங்களின் UAN Number யை Activate செய்யவில்லை என்றால், அதை Activate செய்யும் போது புதிய மொபைல் எண்ணை Register செய்யலாம்.

Step 1: நீங்கள் UAN Portal என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Activate UAN என்ற Option யை கிளிக் செய்யவும்.

Go UAN Portal & Click Activate UAN

Step 3: இப்பொழுது UAN Number Activate செய்வதற்கான இணைய பக்கம் திறக்கும்.

அதில் உங்களின் UAN Number, Member Id (PF Number), Aadhaar Number மற்றும் PAN Number இவற்றில் ஏதாவது ஒன்றை Enter செய்ய வேண்டும்.

Get Authorization Pin

இவற்றில் உங்களின் UAN Number அல்லது Member Id யை Enter செய்ய நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் ஆதார் மற்றும் பான் நம்பரை ஏற்கனவே உங்களின் PF Account இல் சேர்த்திருந்தால் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். ஆனால் அனைவரிடமும் PF Number அல்லது UAN Number நிச்சயமாக இருக்கும்.

Read  How to Transfer PF Online Using UAN

மேலும் உங்களின் Name, Date of Birth, Mobile Number மற்றும் Email Id போன்றவற்றை உள்ளிடுக.

Step 4: Get Authorization Pin என்பதை கிளிக் செய்க.

Step 5: உங்களின் Mobile Number க்கு OTP Number வரும். 

Validate OTP and Activate UAN

Step 6: I Agree என்பதை டிக் செய்து OTP Number யை உள்ளிடவும். பிறகு Validate OTP and Activate UAN என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது UAN Number Activate செய்யப்பட்டு உங்களின் Mobile Number உம் Register ஆகிவிடும்.

How to Change Mobile Number & Email Id in EPF Account Online

நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த Mobile Number மற்றும் Email Id யை எவ்வாறு Change செய்வது என்பதை பற்றி காணலாம்.

Step 1: UAN Portal இணைய பக்கத்திற்கு சென்று உங்களின் UAN Account யை Login செய்யவும்.

Sign in to UAN Account

Step 2: Manage > Contact Details என்பதை கிளிக் செய்யவும்.

Click Manage & Contact Details - EPF Account Mobile Number Update

Step 3: Change Mobile Number மற்றும் Change Email Id என்பதை டிக் செய்து New Number Number மற்றும் Email Id யை Enter செய்யவும்.

Enter New Mobile Number & Email Id

Step 4: Get Authorization Pin என்பதை அழுத்தவும்.

Step 5: உங்களின் Mobile எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு Save Changes என்பதை கிளிக் செய்யவும் .

Click Save Changes- UAN Account

இப்பொழுது வெற்றிகரமாக உங்களின் மொபைல் நம்பர் மற்றும் Email Id Change செய்யப்பட்டிருக்கும். இதற்கான அறிவிப்பு செய்து மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

Read  EPF Passbook: How to Login & Download UAN Passbook in Online

How to Change Mobile Number if You Forgot the in PF Account Password

நீங்கள் உங்களின் PF Account இல் ஏற்கனவே ஒரு மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பீர்கள். இருப்பினும், அந்த மொபைல் நம்பரை தற்போது நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம். அல்லது ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை மறந்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்களின் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது என்பதை பற்றி படிப்படியாக பார்க்கலாம்.

Step 1: UAN Portal இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Forgot Password என்பதை கிளிக் செய்யவும்.

Click Forgot Password

Step 3: உங்களின் UAN Number யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.

Type Your UAN Account Number

Step 4: இப்பொழுது ஏற்கனவே பதிவு செய்த மொபைல் நம்பர் உங்களிடம் இல்லை என்பதால் No என்பதை கிளிக் செய்க.

Select No

Step 5: உங்களின் Name, Date of Birth மற்றும் Gender போன்றவற்றை உள்ளிட்டு Verify செய்யவும்.

Enter Name Date of birth & Verify

Step 6: Aadhaar Number யை உள்ளிட்டு மீண்டும் Verify செய்யவும்.

Enter Aadhaar Number

Step 7: இப்பொழுது உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை Enter செய்து Get OTP என்பதை அழுத்தவும்.

Enter Aadhaar linked mobile number

Step 8: ஆதார் OTP Number யை Type செய்து Verify செய்க.

Enter OTP & Click Verify

Step 9: உங்களின் UAN Account யை Login செய்வதற்கான New Password யை Enter செய்யவும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Enter New Password & Click Submit

இப்பொழுது நீங்கள் Enter செய்த புதிய Password சேமிக்கப்பட்டுவிடும். மேலும் உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட Mobile Number உம் Change செய்யப்பட்டிருக்கும்.

உங்களின் PF Account இல் Mobile Number யை எவ்வாறு Register அல்லது Change செய்வது என்பதை பற்றி இந்த இடுகையில் தெரிந்துகொண்டீர்கள். இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.

மேலும் வங்கி மற்றும் PF குறித்த பல தகவல்களுக்கு எண்களின் இணையதளத்தை பின்தொடரவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole