How to Claim Form -19: Final PF Settlement in Tamil
Form 19 யை பயன்படுத்தி உங்களின் PF Account இல் இருக்கும் PF பணத்தை Claim செய்ய போகிறீர்களா? உங்களின் பதில் ஆம் என்றால், அதற்கான முழு செயல்முறையையும் நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.
அதாவது Form 19 யை எதற்காக பயன்படுத்துகிறோம், எப்பொழுதெல்லாம் படிவம் 19 யை பயன்படுத்த முடியும் மற்றும் அதை Claim செய்வதற்கான செயல்முறை என்ன போன்றவற்றை பற்றி விரிவாக காணலாம்.
Employee Provident Fund (EPF) என்பது தொழிலாளர்களுக்கான சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகும். தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) வரவு வைக்கப்படுகிறது.
மேலும் அதே அளவு தொகையானது நிறுவனத்தின் சார்பிலும் EPF நிதியில் செலுத்தப்படுகிறது. இந்த வைப்பு நிதியை Employee Provident Fund Organization (EPFO) என்ற ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த PF நிதியானது தொழிலாளர்களின் வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Table of Contents
PF Form 19 யை எப்பொழுது பயன்படுத்தலாம்?
உறுப்பினர்களின் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுப்பதற்கு Form 19-யை பயன்படுத்தலாம்.
தொழிலாளர்களின் PF கணக்கில் உள்ள முழு பணத்தையும் Withdraw செய்ய பின்வருவனவற்றில் ஏதாவது ஒரு தகுதியை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருந்தால் மட்டுமே படிவம் 19 யை பயன்படுத்தி பணத்தை திரும்பப்பெற முடியும்.
- உறுப்பினரின் ஓய்வூதிய காலம் வரும்போது மொத்த PF Settlement -யை பெறமுடியும்.
- உறுப்பினர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இரண்டு மாதங்கள் வரைக்கும், வேறு எங்கும் வேலைக்கு போகாமல் இருந்தால், மொத்த PF Settlement தொகையையும் பெற முடியும்.
Form 19-யை Online-ல் Apply செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
பொதுவாக நீங்கள் பி.எப் பணத்தை எடுக்கும் போது பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
- UAN கணக்கை Activate செய்திருக்க வேண்டும்.
- UAN கணக்கில் Aadhaar Number-யை Update செய்து அதை Verify செய்திருக்க வேண்டும்.
- Aadhaar Number-ல் Mobile எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஏனெனில் Online-ல் Apply செய்யும்போது Aadhaar தரப்பிலிருந்து OTP Number வரும்.
- உறுப்பினரின் சேவைக்காலம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவும், அதேநேரத்தில் PF தொகை 50,000 க்கும் அதிகமாகவும் இருக்கும் போது PAN Number-யை Update செய்திருக்க வேண்டும்.
- வங்கிக்கணக்கு எண்ணை சரிப்பார்க்க வேண்டும்.
Form 15G -யை எப்போது Upload செய்ய வேண்டும் ?
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது சில சந்தர்ப்பங்களில் Form 15G-யை Upload செய்ய வேண்டியதிருக்கலாம். அப்படி Upload செய்யவில்லை என்றால் Withdraw செய்யும் பணத்தில் 34.6% Tax பிடித்தம் செய்வார்கள்.
Form 19 யை Claim செய்யும்போது யாரெல்லாம் படிவம் 15G யை Upload செய்ய வேண்டும் மற்றும் யாரெல்லாம் Upload செய்ய தேவையில்லை என்பதை பற்றி காணலாம்.
- PF உறுப்பினரின் Withdrawal தொகையானது Rs.50,000 க்கும் அதிகமாகவும், அதேநேரத்தில் சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவும் இருக்கும்போது Form 15G-யை Upload செய்ய வேண்டும்.
- Withdrawal தொகையானது Rs.50,000 க்கும் குறைவாக இருக்கும்போது Form 15G -யை Upload செய்ய தேவை இல்லை.
- உறுப்பினரின் மொத்த சேவைக்கலாம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், அவர்கள் படிவம் 15G யை Upload செய்ய தேவை இல்லை.
How to Claim Form-19 in Online For PF Final Settlement
கீழ்கண்ட வழிமுறைகளின் மூலம் EPF Form 19-யை Online மூலம் Claim செய்யலாம்.
Step 1: முதலில் உங்களின் UAN கணக்கை Member Portal-ல் Sign in செய்ய வேண்டும்.
Step 2: இப்பொழுது உங்களின் UAN கணக்கு திறக்கும். அதில் Online Services என்பதை கிளிக் செய்யும்போது வரும் தேர்வுகளில் Claim (Form-31,19,10C&10D) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 3: KYC Details என்ற பகுதியில் உள்ள Bank Account No என்னும் இடத்தில் உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும். பிறகு Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: உடனே ஒரு Pop Up திரை தோன்றும். அதில் Yes என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: இப்போது கடைசியில் தோன்றும் Proceed For Online Claim என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 6: இந்த பக்கத்தில் PF Form-யை தேர்வு செய்யும் Option வரும். அதில் i want to apply for என்ற இடத்தில் ONLY PF WITHDRAWAL (FORM -19) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 7: இப்பொழுது ஒரு Pop Up திரை தோன்றும். அதில் Yes என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 8: Form 15G, Employee Address மற்றும் Scanned Passbook போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். (Form 15G-யை தேவைப்படும்போது மட்டும் அளித்தால் போதுமானது)
Step 9: பிறகு கடைசியில் உள்ள Check Box-யை டிக் செய்தவுடன் Get Aadhaar OTP என்ற Option தோன்றும். அந்த Option-யை கிளிக் செய்ய வேண்டும்.
Step 10: Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை Enter செய்து Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 11: இப்பொழுது Form 19 ஆனது வெற்றிகரமாக Submit செய்யப்பட்டிருக்கும்.
How to Track Form 19 Claim Status
Step 1: உங்களின் UAN Account-யை Login செய்யவும்.
Step 2: Online Services > Track Claim Status என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
Step 3: இதில் நீங்கள் Claim செய்த Form-ன் Claim Status-யை பார்க்கலாம்.
நீங்கள் Claim Form-யை விண்ணப்பித்தவுடன் 15 முதல் 20 நாட்களுக்குள்ளாக, உங்களின் பணமானது UAN கணக்கில் Link செய்யப்பட்ட வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
Frequently Asked Questions (FAQ)
PF Form 19 என்றால் என்ன?
ஒரு PF கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுக்க பயன்படும் படிவம் Form 19 ஆகும்.
பணியில் இருக்கும்போது படிவம் 19 யை பயன்படுத்தி Withdrawal செய்ய முடியுமா?
முடியாது. பணியில் இல்லாதபோது மட்டுமே Withdrawal செய்ய முடியும்.
எனக்கு Form 19 படிவம் தோன்றவில்லையே?
உங்களின் PF கணக்கில் Date of Exit யை Update செய்தால் மட்டுமே படிவம் 19 தோன்றும்.
மொபைல் மூலம் படிவம் 19 யை கிளைம் செய்ய முடியுமா?
மொபைலில் UMANG செயலி மூலம் PF Amount யை Withdrawal செய்ய முடியும்.