EPF Claim FormsEPFO

Form 31: PF Advance பணம் எடுப்பது பற்றிய முழு தகவல்கள்

PF Form 31 என்பது PF Advance பணத்தை Claim செய்ய பயன்படும் விண்ணப்பம் ஆகும். பணியாளர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு (Employee Provident Fund) செலுத்துகிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு பணத்தேவை ஏற்படலாம். அந்த நேரத்தில் அவர்கள்  தங்களின் PF கணக்கில் இருந்து Advance பணத்தை பெற முடியும்.

ஒரு ஊழியர் Form 31-யை Fill செய்து கொடுப்பதன் மூலம் PF நிதியிலிருந்து Advance தொகையை பெற முடியும்.

Form 31-யை Online அல்லது Offline வழியே விண்ணப்பிக்கலாம். Offline வழியே விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். ஆனால் Online வழியாக விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு இருக்கும். எனவே Online-ல் ஒரு சில தகவல்களை மட்டும் நிரப்பினால் போதும்.

பணியாளர் ஒருவர் Form 31-யை பயன்படுத்தி எடுக்கும் பணமானது, அவரின் காரணத்தை பொறுத்து மாறுபடும். 

Form 31 பற்றிய சுருக்கம்:

துறையின் பெயர்  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 
PF படிவம் எண் Form 31
படிவத்தின் நோக்கம் PF பணத்திலிருந்து அட்வான்ஸ் தொகையை பெறுதல் 
படிவத்தை நிரப்பும் முறை ஆன்லைன் 
PF படிவத்தை Apply செய்யும் இணையதளம் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

Table of Contents

EPF பங்களிப்பில் Advance பணத்தை Withdrawal செய்வதற்கான நோக்கம் 

தொழிலாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக திடீரென்று பணம் தேவைப்படலாம். அந்த நெருக்கடியான நேரத்தில் அவரின் PF கணக்கில் உள்ள தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுக்க EPFO அனுமதிக்கிறது.

Read  PF (Provident Fund) என்றால் என்ன? | PF Meaning in Tamil

சரி Form 31-யை பயன்படுத்தி எந்தெந்த நோக்கங்களுக்காக PF கணக்கில் உள்ள பணத்தை முன்கூட்டியே திரும்ப முடியும் என்று பார்க்கலாம்.

1. Site / பிளாட் / வீடு வாங்குதல் / வீடு கட்டுதல் / இடத்தை கையகப்படுத்துதல்  :  

  • கட்டாயமாக 5 வருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • Site -யை வாங்குபவர்களுக்கு 24 மாத அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA) பணத்தை Withdraw செய்யலாம்.
  • பிளாட் / வீடு வாங்குதல் / வீடு கட்டுதல் / இடத்தை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு 36 மாத அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA) தொகையை Withdraw செய்யலாம்.

அல்லது 

  • பணியாளர் (Employee) மற்றும் முதலாளியின் (Employer) மொத்த பணம் மற்றும் அதன் வட்டி 

அல்லது 

  • மொத்த செலவு 

இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த பணத்தை பெறலாம்.

  • இந்த வகை காரணத்திற்க்காக ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

2. உறுப்பினர் / துணைவிக்கு சொந்தமான வீட்டில் அல்லது துணைவியுடன் கூட்டாக / மாற்றம் செய்தல் / மேம்படுத்துதல் / பழுதுபார்த்தல்  

  • வீடு கட்டி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும்.
  • 12 மாதங்களின் அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA)

அல்லது 

  • வட்டியுடன் கூடிய பணியாளரின் பங்களிப்பு (Employee Share)

அல்லது 

  • செலவு (Cost)

இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதை பெறலாம்.

  • இந்த வகை காரணங்களால் ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

3. சிறப்பு வழக்குகளில் கடன்களை திருப்பி செலுத்துதல் (Repayment of Loans in special cases)

  • குறைந்தபட்சம் 10 வருடங்கள் சேவையாவது இருக்க வேண்டும்.
  • சில நோக்கங்களுக்காக கடனின் நிலுவைத்தொகை மற்றும் வட்டியை திரும்ப செலுத்துவதற்கு EPF நிதியில் இருந்து பணத்தை பெறலாம்.
  • 36 மாதங்களின் அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA)
Read  PF Withdrawal Form 19 and 10C Free Download Word Format

அல்லது 

  • வட்டியுடன் கூடிய பணியாளர் (Employee) மற்றும் நிறுவனத்தின் (Employer) மொத்த பங்களிப்பு 

அல்லது 

  • மொத்த நிலுவை அசல் மற்றும் வட்டி 

இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதை பெறலாம்.

  • அசல் மற்றும் வட்டியை குறிக்கும் சான்றிதழை கடன் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும்.
  • இந்த வகை காரணத்தால் ஒரு முறை மட்டுமே எடுக்கலாம்.

4. சிறப்பு வழக்குகளில் முன்பணம் (Advance) வழங்குதல் 

  • ஒரு நிறுவனம் 15 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டால் மற்றும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எந்த ஒரு இழப்பீடும் வேலையும் இல்லாமல் இருந்தால்

அல்லது 

  • தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் (Strike) அல்லது பிற காரணங்களால் தொடர்ந்து 2 மாதங்களாக ஊதியத்தை பெறாமல் இருந்தால் 
  • வட்டியுடன் பணியாளரின் பங்களிப்பை (Employee Share) எடுத்துக்கொள்ளலாம்.
  • பணி நீக்கம் / பதவி பறிப்பு / ஆட்குறைப்பு போன்ற காரணங்களால், அதிகபட்சம் 50% வரை வட்டியுடன் கூடிய தொகையை பணியாளர் பங்களிப்பில் இருந்து பெறலாம். 
  • ஒரு நிறுவனம் 6 மாதத்திற்கும் மேல் மூடப்பட்டு இருந்தால் மற்றும் பணியாளர்களுக்கு எந்த நஷ்டஈடும் கொடுக்காமல், அவர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது நிறுவனத்தின் பங்களிப்பில் இருந்து 100% வரை எடுக்கலாம். 

5. உடல் நலக்குறைவின் (illness) போது மருத்துவ செலவுக்காக நிதியிலிருந்து முன்பணத்தை பெறுதல் 

  • ஒரு தொழிலாளியின் சொந்த மருத்துவ செலவுக்காகவோ அல்லது அவரின் குடும்பத்தினருடைய  மருத்துவ செலவுக்காகவோ 6 மாதங்களுக்கான Basic Pay + DA அல்லது வட்டியுடன் கூடிய தொழிலாளியின் பங்களிப்பு  இதில் எது குறைவோ அந்த தொகையை பெறலாம்.

6. திருமணம் அல்லது குழந்தைகளின் மெட்ரிக்குலேஷன் கல்விக்காக நிதியிலிருந்து முன்பணம் பெறுதல் 

  • இதில் குறைந்தபட்சம் 7 வருடங்களின் சேவை இருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் சொந்த திருமணம் / மகன் / மகள் / சகோதரன் / சகோதரி போன்றோரின் திருமணம்.
  • மகன் / மகள் ஆகியோரின் போஸ்ட்  மெட்ரிக்குலேஷன் கல்வி
  • பணியாளரின் பங்களிப்பில் இருந்து வட்டியுடன் கூடிய 50% தொகையை எடுக்கலாம்.
  • இந்த காரணத்திற்காக 3 முறை பணம் எடுக்கலாம்.

7. மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு முன்பணம் வழங்குதல் 

  • மாற்றுத்திறனாளியின் சிரமத்தை குறைக்கும் உபகரணங்கள் வாங்குதல்.
  • 6 மாதத்திற்க்கான அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA) 
Read  PF Passbook யை ஆன்லைன் மூலம் Download செய்வது எப்படி?

அல்லது 

  • வட்டியுடன் கூடிய பணியாளரின் பங்களிப்பு 

அல்லது 

  • உபகரணங்களின் விலை 

இவற்றில் எது குறைவோ அந்த தொகையை பெறலாம்.

  • இந்த காரணத்திற்காக ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த 3 வருடங்கள் வரைக்கும் மறுபடியும் எடுக்க முடியாது.

8. ஒய்வு பெரும் ஓராண்டிற்கு முன்பாகவே பணம் எடுத்தல் 

  • 54 வயதிற்கு பிறகு மற்றும் ஒய்வு பெறும் ஓராண்டிற்கு முன்பாகவே பணத்தை எடுக்கலாம்.
  • அதிகபட்சமாக EPF பணத்தில் இருந்து 90% பணத்தை எடுக்கலாம்.

9. மேலும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் முன்பணம் வழங்கப்படுகிறது 

  • அசாதாரண சூழ்நிலைகளில் (இயற்கை பேரிடரால் சொத்துக்கள் சேதம் அடைதல்) முன்பணம் வழங்கப்படுகிறது (para 68L).
  • மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அந்த உறுப்பினருக்கு முன்பணம் (அதிகபட்சமாக Rs.300) வழங்கப்படுகிறது (para 68M).
  • வரிஸ்தா பென்ஷன் பீமா யோஜனா (Varistha Pension Bima Yojana) திட்டத்தில் முதலீடு செய்ய முன்பணம் வழங்கப்படுகிறது (para 68NNN).

முடிவுரை 

 
 

FAQ 

Form 31 யை எதற்காக பயன்படுகிறது?

ஒரு தொழிலாளியின் PF பணத்தில் அட்வான்ஸ் தொகையை எடுக்க பயன்படுகிறது.


Form 31 விண்ணப்பித்த பிறகு பணம் செட்டில் ஆக எத்தனை நாட்கள் ஆகும்?

பொதுவாக 20 நாட்களுக்குள் பணம் செட்டில் ஆகிவிடும். சில நேரங்களில் 10 நாட்களில் கூட செட்டில் ஆகும்.


படிவம் 31 யை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்கலாம்?

நீங்கள் Withdraw செய்யும் தொகையானது, நீங்கள் எடுப்பதற்கான காரணம் மற்றும் உங்களின் சேவைக்காலம் ஆகியவற்றை பொறுத்து இருக்கும்.


Form 31 யை Apply செய்த பிறகு அதை Cancel செய்ய முடியுமா?

நீங்கள் Apply செய்த பிறகு அதை உங்களால் ரத்து செய்ய முடியாது. இருப்பினும் நீங்கள் உங்களின் PF அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


Form 31 யை Claim செய்து அட்வான்ஸ் பணத்தை பெற்ற பிறகு அதை மீண்டும் PF கணக்கில் திருப்பி செலுத்த வேண்டுமா?

திருப்பி செலுத்த தேவையில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole