EPFO : How to Claim Form 31 in Online – PF Advance
உங்களின் PF கணக்கில் இருந்து Advance பணத்தை எடுக்க வேண்டுமா? Form 31-யை பயன்படுத்தி PF Advance யை எளிதாக Online மூலம் Claim செய்யலாம். அதற்கான முழு செயல்முறையை பற்றியும் நான் உங்களுக்கு விளக்க போகிறேன்.
நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையானது, அவர்களின் PF கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையானது தொழிலாளர்களின் வருங்காலத்தில் பெரிதும் பயன்படும்.
தொழிலாளர்களின் ஓய்வூதிய காலத்தில் இந்த தொகையை மொத்தமாக பெறும்போது, ஒரு பெரும் தொகை கிடைக்கும். அந்த தொகையை பெற அதற்கான படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.
ஆனால் சில நேரங்களில் நீங்கள் பணியில் இருக்கும்போதே அவசர தேவைகளுக்காக பணம் தேவைப்படலாம். அந்த சூழ்நிலையில் பி.எப் கணக்கில் இருந்து நீங்கள் Advance பணத்தை எடுக்க முடியும்.
EPFO ஆணையமானது, தொழிலாளர்கள் Form 31-யை பயன்படுத்தி Advance பணத்தை எடுக்க சில காரணங்கள் மற்றும் சேவை காலத்தை வரையறை செய்துள்ளது. அதாவது கடனை திருப்பி செலுத்துதல், தன்னுடைய அல்லது குடும்ப மருத்துவ செலவுகள், திருமணம், மெட்ரிகுலேஷன் கல்வி போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்களின் EPF நிதியில் இருந்து முன்பணத்தை பெறலாம்.
Table of Contents
EPF Form 31 Online Claim
கீழ்கண்ட வழிமுறைகளில் EPF Form 31-யை Online மூலம் Claim செய்யலாம்
Step 1: முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற EPFO இணையதளத்தை அணுகவும்.
Step 2: உங்களின் UAN எண் மற்றும் Password-யை உள்ளிட்டு கணக்கை Sign in செய்யவும்.
Step 3: இப்பொழுது உங்களின் UAN கணக்கு Open ஆகும். அதில் Online Services என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: பிறகு தோன்றும் தேர்வுகளில் முதலாவதாக உள்ள Claim (FORM-31, 19, 10C & 10D) என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இந்த பக்கத்தில் Member Details, KYC Details மற்றும் Service Details போன்ற தகவல்கள் இருப்பதை காணலாம். அதில் KYC Details-ல் உள்ள Bank Account No என்னுமிடத்தில் ஒரு Box இருக்கும். அதில் உங்களின் வங்கிக்கணக்கின் கடைசி 4 எண்களை கொடுத்து Verify என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: அடுத்து ஒரு Pop Up Window தோன்றும். அதில் Yes என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: உங்களின் வங்கிக்கணக்கானது இப்போது Verify ஆகியிருக்கும். இப்பொழுது Proceed For Online Claim என்பதை அழுத்தவும்.
Step 8: இதில் Claim Form-யை தேர்வு செய்யும் Option வரும். அதில் PF Advance (Form-31) என்பதை தேர்வு செய்யவும்.
Step 9: Form-யை தேர்வு செய்தவுடன் அதற்க்கு கீழே கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுக்க வேண்டும். அதாவது நீங்கள் என்ன காரணத்திற்க்காக Advance பணத்தை எடுக்கிறீர்களோ அந்த காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு Employee Address -யை Enter செய்து Cheque-யை Scan செய்து Upload செய்ய வேண்டும். பின்பு அதற்க்கு கீழே உள்ள Check Box-யை டிக் செய்ய வேண்டும்.
Step 10: அடுத்து கடைசியாக Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உங்களின் Aadhaar Card-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
Step 11: அந்த OTP எண்ணை Enter செய்து Validate OTP and Submit Claim Form என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
Step 12: இப்பொழுது உங்களின் Online Claim Form ஆனது வெற்றிகரமாக Submit செய்யப்பட்டது என்ற செய்து வரும். அந்த செய்தியில் PDF File ஒன்று வரும் உங்களுக்கு தேவைப்பட்டால் அதை Download செய்துக்கொள்ளலாம்.
EPF Form Claim Status
Step 1: நீங்கள் Apply செய்த Form-ன் Status-யை தெரிந்துக்கொள்ள Online Services > Track Claim Details என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 2: தேர்வு செய்தவுடன் உங்களின் விண்ணப்பத்தின் நிலையினை (Status) அறியலாம்.
நீங்கள் Online மூலமாக Form-யை Apply செய்தவுடன் அந்த கோரிக்கையானது முதலில் Employer-க்கு செல்லும். அங்கு சரிபார்க்கப்பட்ட பிறகு அந்த கோரிக்கையை PF அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். PF அலுவலகத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், உங்களின் வங்கிக்கணக்கிற்கு பணமானது Credit செய்யப்படும். இந்த Process நடப்பதற்கு 15 அல்லது 20 நாட்கள் வரை ஆகலாம்.
மேலும் படிக்க
- EPF Form 31 : Details & Instructions on PF Advance – பி.எப் தகவல்கள்
- EPF Calculator – Employee Provident Fund Balance-யை கணக்கிடுதல்
- How to Solve Name,DOB,Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி
- EPFO-UAN Portal-லில் UAN Activation, KYC தகவல்களை Update செய்வது எப்படி?
- PF (வருங்கால வைப்பு நிதி) என்றால் என்ன, அதன் அடிப்படை தகவல்கள்