EPF Claim Forms

PF Withdrawal Form 19 and 10C Free Download Word Format

வருங்கால வைப்பு நிதி அல்லது PF என்பது இந்தியாவில்  தொழிலாளர்களின் சேமிப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். தொழிலாளர்களின் PF கணக்குகளை Employee Provident Fund Organization (EPFO) என்ற ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

பணியாளர்களின் சம்பளத்தில் ஒரு தொகையையும் மற்றும் முதலாளியின் சார்பில்  அதே அளவு தொகையையும்  EPF கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணமானது பிற்காலத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும். PF Withdrawal Form-யை Online அல்லது Offline மூலம் Apply செய்யலாம்.

பணியாளர்களுக்கான PF கணக்கு 

1952-ல் பணியாளர்களுக்கான Employee Provident Fund (EPF) சட்டம் கொண்டுவரப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ள எந்த ஒரு அமைப்பும் EPFOல் பதிவு செய்திருக்க வேண்டும். 

Read  Form 31: PF Advance பணம் எடுப்பது பற்றிய முழு தகவல்கள்

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் EPF-ல் பங்களிப்பு அளிக்கிறார்கள். அந்த பங்களிப்பானது அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து 12% (சில நிறுவனங்களில் 10% ஆக பிடித்தம் செய்யலாம்) EPF பங்களிப்புக்கு செலுத்தப்படுகிறது. அதே அளவு தொகையை முதலாளியின் சார்பிலும் பணியாளரின் PF கணக்கிற்குசெலுத்தப்படும்.

PF Withdrawal Reasons 

  • ஒரு பணியாளர் (Employee) பணியில் இருக்கும்போதே சில காரணங்களுக்காக தங்களுடைய PF கணக்கில் உள்ள பணத்தை Withdrawal செய்யலாம். 
  • Marriage, Education, Land Purchase / House Construction, Home Loan Repayment, EB Bill போன்ற காரணங்களுக்காக Form 31-யை பயன்படுத்தி Advance Amountயை Claim செய்யலாம்.
  • ஒரு தொழிலாளி வேலையிலிருந்து வெளியேறிய பின், இரண்டு மாதங்கள் வரைக்கும், எந்த நிறுவனத்திலும் பணிக்கு சேரவில்லை என்றால், PF பணத்தை முழுமையாக Withdrawal செய்யலாம்.
  • பணியாளரின் ஓய்வூதிய காலத்திலும் முழுமையான PF பணத்தை Withdrawal செய்யலாம்.
  • ஒருவேளை சேவையில் இருக்கும்போதே பணியாளர் இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் பி எப் பணத்தை கிளைம் செய்ய முடியும்.
Read  How to Claim Form -19: Final PF Settlement in Tamil

PF Withdrawal Forms Offline 

PF கணக்கில் உள்ள பணத்தை திரும்பப்பெற பயன்படுத்தும் படிவங்களை பற்றி காணலாம்.

PF Withdrawal Form 31 (Advance)

நீங்கள் பணியில் இருக்குபோது சில அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்படலாம். அந்த நிலையை சமாளிக்க உங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

EPF கணக்கில் உள்ள பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை (Advance) Withdrawal செய்வதற்கு EPF Form 31யை பயன்படுத்தலாம். பணியாளர் வேலையில் இருக்கும் போது அவசர கால தேவைகளை பூர்த்தி செய்ய Form 31-யை பயன்படுத்தலாம்.

PF Advance Amountயை Claim செய்யும் போது, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் தான் Claim செய்ய முடியும். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக PF Advance பணத்தை திரும்பப்பெற முடியும். 

 

PF Withdrawal Form 19 (Final Settlement)

பணியாளர் முழுமையான EPF பணத்தை Claim செய்ய EPF Form 19 பயன்படுத்தப்படுகிறது.  பொதுவாக இந்த படிவம் ஓய்வூதிய நேரத்தில் முழு PF தொகையை பெறுவதற்கு பயன்படுகிறது. எனவே இதை PF Final Settlement Form எனவும் அழைக்கலாம். 

Read  How to Transfer PF Online Using UAN

தொழிலாளி ஒரு நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்திருக்கலாம். பின்னர்  2 மாதங்கள் வரைக்கும் வேறு நிறுவனத்தில் பணியில் சேராமல் இருந்தால், Form 19-யை பயன்படுத்தி முழு தொகையையும் பெறலாம்.

PF Withdrawal Form 10C (Pension)

ஓய்வூதிய தொகை அல்லது திட்டச் சான்றிதழ் (Scheme Certificate) பெறுவதற்கு EPF Form 10C பயன்படுத்தப்படுகிறது. ஒரு பணியாளரின் சேவைக்கலாம் 10 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ஓய்வூதிய தொகையை Withdrawal செய்ய முடியும். 10 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்கலாம் இருந்தால் திட்டச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

பணியாளர் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அல்லது ஓய்வூதியதாரர் Form 19 மற்றும் 10C ஆகிய இரண்டையும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

PF Withdrawal Form 19 and 10C Free Download Word Format

Click Here Download  PF Form 19 Word Format

Click Here Download  PF Form 10C Word Format

இதையும் படியுங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest