How to Calculate PF Contribution in Salary & Check PF Balance
ஒவ்வொரு தொழிலாளியின் மாத சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (EPF) சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை (PF Contribution) பிடித்தம் செய்வார்கள். இந்த PF தொகையானது அவர்களின் ஓய்வூதிய காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
தொழிலாளர்களின் PF கணக்கில் செலுத்தப்படும் தொகையில், தொழிலாளி (Employee) மற்றும் நிறுவனம் (Employer) என இரண்டு பேரின் சார்பில் பங்களிப்பு இருக்கும்.
தொழிலாளர்களின் சம்பளத்தை பொறுத்து அவர்களின் PF தொகையானது பிடித்தம் செய்யப்படும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது அந்த தொழிலாளரின் PF Account இல் செலுத்தப்படும்.
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதியை எப்படி கணக்கிடுகிறார்கள்? மேலும் PF கணக்கில் உள்ள Balance-யை எப்படி தெரிந்துகொள்வது என்பதை பற்றிய முழுமையான தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
PF Contribution
PF Contribution ஆனது பணியாளரின் பங்களிப்பு (Employee) மற்றும் முதலாளியின் பங்களிப்பு (Employer) என இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
Employee Contribution of PF
ஒரு பணியாளரின் மாத சம்பளத்தில் 12% அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படியில் (Dearness Allowance) இருந்து பங்களிப்பு செலுத்தப்படுகிறது. ஒருசில நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு கமிஷன் போன்ற கொடுப்பனவுகளை (Allowance) கூடுதலாக சேர்க்கின்றனர்.
Employer Contribution of PF
முதலாளியின் சார்பில் (Employee Contribution) அதே அளவு 12% தொகையை பணியாளரின் PF கணக்கில் செலுத்துவார்கள். இது தவிர EDLI, ESI போன்றவற்றிற்கு முதலாளியின் சார்பிலேயே பங்களிப்பு செலுத்தப்படும்.
சில நிறுவனங்கள் பணியாளர்களின் மாத சம்பளத்தில் 12% க்கு பதிலாக 10% பிடிப்பார்கள். அதேபோல் முதலாளியின் சார்பிலும் அதே 10% மட்டுமே பங்களிப்பு செலுத்தப்படும். ஒரு நிறுவனத்தில் 20 பணியாளர்களுக்கும் குறைவாக இருத்தல் மற்றும் Employee Provident Fund Organisation (EPFO) அமைப்பால் பரிந்துரை செய்யப்பட்ட நிறுவங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
முறையான துறையில் பெண்கள் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தை அதிகரிப்பத்திற்கும் மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பெண்களின் பணியாளர் பங்களிப்பை (Employee Contribution) நிறுவனத்தை பொறுத்து 12%/10% லிருந்து 8% ஆக குறைத்தது.
ஆனால் முதலாளியின் பங்களிப்பு தொடர்ந்து 12% / 10% ஆக இருக்கும். இந்த முறையானது பெண் பணியாளர்களின் முதல் 3 வருடங்களுக்கு மட்டும் பொருந்தும்.
How to Calculate PF Amount From Salary
ஒரு பணியாளரின் மாத சம்பளத்தில் இருந்து பி.எப் தொகையை எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி கீழே விளக்கியுள்ளேன்.
பொதுவாக PF கணக்கில் EPF மற்றும் EPS என்ற இரண்டு வகையான திட்டங்களில் பணம் செலுத்தப்படுகிறது.
இதில் EPF (Employee Provident Fund) என்பது தொழிலாளர் வைப்பு நிதி ஆகும். இதில் செலுத்தப்படும் பணமானது, நமக்கு தேவைப்படும் நேரத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை எடுத்துக்கொள்ளும் வசதியை தருகிறது.
மேலும் EPF-ல் செலுத்தப்படும் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி (தற்போது 2020-2021 – 8.50%) செலுத்தப்படுகிறது. இந்த வட்டியானது ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.
EPS (Employee Pension Scheme) என்பது தொழிலாளர் ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டமானது தொழிலாளர்களின் ஓய்வூதிய காலத்தில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஓய்வூதிய தொகை பெற வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு எந்த வட்டியும் கிடைக்காது. அதற்கு பதிலாக தான் ஓய்வூதிய பலன் கிடைக்கிறது.
பணியாளரின் பங்களிப்பான 12% தொகையை EPF திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகின்றன. முதலாளியின் பங்களிப்பான 12% சதவீதத்தில் 8.33% EPS திட்டத்திலும், மீதமுள்ள 3.67% EPF திட்டத்திலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த EPF மற்றும் EPS பங்களிப்பை இன்னும் எளிமையாக புரிந்து கொள்வதற்கு கீழே எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி இவை இரண்டும் சேர்ந்து Rs.18,000 என்று வைத்துக்கொள்வோம்.
- தொழிலாளியின் அடிப்படை சம்பளம் (Basic Pay) + அகவிலைப்படி (DA) = Rs. 18,000
- தொழிலாளியின் சார்பில் EPF திட்டத்திற்க்கான பங்களிப்பு (12%) = Rs. 18,000-ல் 12% = Rs. 2160
- முதலாளியின் சார்பில் EPF திட்டத்திற்கான பங்களிப்பு (3.67%) = Rs. 18,000-ல் 3.67% = Rs. 660
- முதலாளியின் சார்பில் EPS திட்டத்திற்கான பங்களிப்பு (8.33%) = Rs.18,000-ல் 8.33% = Rs. 1500
- ஆனால் EPS திட்டத்தில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக Rs. 1250 (ஒரு வருடத்திற்கு Rs. 15,000) என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- எனவே இந்த 1500 ரூபாயில் EPS பங்களிப்பு Rs. 1250 மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
- இந்த 1500 ரூபாயில் Rs. 1250 கழிக்கப்பட்ட பிறகு (1500-1250) மீதித்தொகை Rs. 250 இருக்கும். இந்த மீதிப்பணமானது மீண்டும் EPF திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும்.
How to Check PF Balance
தொழிலாளர்களின் PF Balance-யை கீழ்கண்ட ஏதாவது ஒரு வழிமுறையின் மூலம் சரிபார்க்கலாம்.
- PF Passbook
- Mobile App
- Missed Call Service
- SMS Service
1. How to Check PF Balance Through Passbook
- நீங்கள் முதலில் https://passbook.epfindia.gov.in/MemberPassBook/passbook என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களின் UAN நம்பர், Password மற்றும் Captcha Code போன்றவற்றை Enter செய்து Login பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்களின் Passbook பக்கம் திறக்கும்.
- அதில் உங்களின் Passbook-யை தேர்வு செய்து பிறகு View Passbook என்பதை கிளிக் செய்தால், உங்களின் Passbook ஆனது Open ஆகும்.
- இந்த Passbook-ல் ஒவ்வொரு மாதத்தின் EPF மற்றும் EPS பங்களிப்பை பற்றிய தகவல்கள் இருக்கும்.
2. How to Check PF Balance Through Umang Mobile App
Umang Mobile App மூலமாகவும் உங்களின் PF Balance-யை தெரிந்துகொள்ளலாம்.
- முதலில் Google Play Store-ல் Umang App-யை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- நீங்கள் புதியவராக இருந்தால் அந்த மொபைல் செயலியில் Register செய்ய வேண்டும். இந்த செயலியில் ஏற்கனவே Register செய்து இருந்தால், அந்த மொபைல் எண் மற்றும் அதற்கான MPIN-யை Enter செய்து Login செய்ய வேண்டும்.
- Umang App-ல் பல தரப்பட்ட அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும்.
- அந்த mobile App-ல் EPFO என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் Employee Centric Services > View Passbook என்பதை கிளிக் செய்ய செய்ய வேண்டும்.
- இப்பொழுது UAN எண்ணை Enter செய்து Get OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு வரும் OTP எண்ணை உள்ளிட்டு Login செய்தால், உங்களின் PF Balance-யை Check செய்யலாம்.
3. PF Missed Call Number
PF–ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011 229 01 406 என்ற எண்ணிற்கு Missed Call கொடுத்தால், கடைசியாக பிடிக்கப்பட்ட EPF பங்களிப்பு மற்றும் EPF-ல் உள்ள மொத்த Balance போன்ற தகவல்களை SMS மூலமாக பெற முடியும்.
4. PF Balance Check Via SMS
SMS Short Code மூலமாகவும் PF Balance-யை Check செய்ய முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள SMS Short Code-யை 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.
” EPFOHO UAN “ என்று Enter செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
இதில் உங்களுக்கு குறுந்செய்தி மூலமாக கிடைக்கும் தகவல்கள் எந்த மொழியில் வேண்டுமோ அதையும் சேர்த்து குறிப்பிடலாம்.
எடுத்துக்காட்டாக Tamil மொழியில் வேண்டுமென்றால் ” EPFOHP UAN TAM “ என்று Type செய்ய வேண்டும். பத்து மொழிகளுக்கான குறியீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. English – Default
2. Hindi – HIN
3. Punjabi – PUN
4. Gujarati – GUJ
5. Marathi – MAR
6. Kannada – KAN
7. Telugu – TEL
8. Tamil – TAM
9. Malayalam – MAL
10.Bengali – BEN
பொதுவாக எந்த மொழி குறியீடும் இல்லாமல் Type செய்தால் ஆங்கிலத்தில் வரும். அதுவே நீங்கள் மொழிக்கு உண்டான குறியீடையும் சேர்த்து Type செய்தால், குறியீட்டுக்கு உண்டான மொழியில் தகவல்கள் வரும்.
இந்த கட்டுரையில் உங்களின் PF பங்களிப்பை எவ்வாறு கணக்கிடுவது மற்றும் PF Balance எவ்வாறு Check செய்வது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகங்களுக்கு கீழே பதிவிடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்
- PF (வருங்கால வைப்பு நிதி) என்றால் என்ன, அதன் அடிப்படை தகவல்கள்
- EPFO-UAN Portal-லில் UAN Activation, KYC தகவல்களை Update செய்வது எப்படி?
- How to Solve Name, DOB, Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி