EPF New Rules: PF Advance Withdrawal Non-Refundable
தற்போது இந்தியாவில் Lockdown-ஆல் ஏற்பட்டுள்ள கஷ்டங்களை தடுப்பதற்கு Employee Provident Fund Organisation (EPFO) விதிகள் (Rules) தளர்த்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் EPF விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழலை தடுப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.70 லட்சம் கோடி அளவிற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்புகளில் EPF பற்றிய இரண்டு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை PF Advance Withdrawal மற்றும் மத்திய அரசின் 3 மாத PF பங்களிப்பை பற்றியது ஆகும்.
EPFO உறுப்பினர்கள் அவசர காலங்களில் தங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த Advance பணத்தை எடுப்பதற்கு Form 31-யை பயன்படுத்துகின்றனர். தற்போது திருமணம், மின்சார கட்டணம், கல்வி, வீட்டு கட்டுமானம் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
ஆனால் தற்போது EPF-ல் New Rules கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி PF Advance-ல் புதியதாக Outbreak of Pandemic (Covid-19) என்ற Option சேர்க்கப்பட்டுள்ளது. இந்த Covid -19 என்ற Option-யை பயன்படுத்தி Employees நிலுவைத்தொகையில் 75% அல்லது மூன்று மாத ஊதிய அளவு வரை Withdrawal செய்யலாம்.
மேலும் இதற்க்கு முன்பு வரை EPF பணத்தை Claim செய்தால், அந்த பணம் Employee வங்கிக்கணக்கிற்கு Credit ஆக சராசரியாக 20 நாட்கள் வரை ஆகலாம்.
ஆனால் தற்போது அவசர காலத்தினை கருத்தில் கொண்டு EPF Amount-யை Claim செய்த 3 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் தொழிலாளியின் சம்பளத்தில் 12% மற்றும் முதலாளியின் சார்பில் 12% சேர்த்து தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும்.
மத்திய அரசாங்கம் அடுத்த 3 மாதத்திற்கு தொழிலாளியின் சார்பில் செலுத்த வேண்டிய 12% பங்களிப்பு மற்றும் முதலாளியின் சார்பில் செலுத்தப்படும் 12% பங்களிப்பு என மொத்தம் 24% தொழிலாளியின் PF கணக்கில் செலுத்தும்.
இந்த சலுகையினை பெறுவதற்கு கீழ்காணும் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் 100 பணியாளர்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் 90% பணியாளர்களின் மாத சம்பளம் Rs.15,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களின் கணக்கிற்கு மாதம் Rs.500 வீதம் மூன்று மாதத்திற்கு பெறுவார்கள். இதன் மூலம் சுமார் 20 கோடி பேர் பயன் பெறுவார்கள்.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
விவசாயிகள் தற்போதுள்ள சூழ்நிலையை சமாளிப்பதற்காக இத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் Rs.2000 செலுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு தற்போது மூன்று மாதத்திற்கான சமையல் எரிவாயு இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.