EPFOUAN Portal

How to Add / Change Nomination in PF Account Online

தொழிலாளர்கள் தங்களின் PF Nomination Details-யை Online மூலமாகவே Add / Change செய்துக்கொள்ளலாம். இதற்கான வசதியை EPFO-ஆணையத்தின்  UAN Portal வழங்குகிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டிருக்கும் UAN Account-யை Login செய்து இந்த E-Nomination வசதியை பெறலாம்.

EPF நியமனத்தின் முக்கியத்துவமானது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை. அனைத்து தொழிலாளர்களும் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதில் உள்ள பல சேவைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

EPF Nomination-ன் முக்கியத்துவத்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நியமனத்தின் விதிகளை தெரிந்துகொள்வதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

PF Nomination என்றால் என்ன?

நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைபார்க்கும் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து, ஒரு சிறு பகுதியை தொழிலாளர் வைப்பு நிதியில் வரவு வைப்பார்கள். உறுப்பினரின் ஓய்வூதிய காலத்தில் அந்த பணத்தை திரும்ப பெறும்போது, ஒரு பெரும் தொகை கிடைக்கும்.

ஒருவேளை ஓய்வூதிய காலத்திற்கு முன்பாகவே PF உறுப்பினர் இறந்துவிட்டால், அவரின் PF சலுகைகளை (Benefits) யார் பெற வேண்டும் என்பதை PF உறுப்பினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதே PF Nomination ஆகும். 

PF நாமினேஷன் விதிகள் 

  • ஒவ்வொரு EPF கணக்கிற்கும் நியமானதாரர் (Nominee) இருக்க வேண்டும். ஏனெனில் உறுப்பினருக்கு திடீரென்று அகால மரணம் ஏற்படும்போது, நியமனதாரருக்கு நிதி பரிமாற்றம் செய்வது எளிதாக இருக்கும்.
  • நீங்கள் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட Nominee-களை பரிந்துரைக்க முடியும். மேலும் அவர்களுக்கான பகிர்வினை (Share) உங்களால் நிர்ணயிக்க இயலும்.
  • உறுப்பினர் Nominee-யை நியமிக்கும்போது அவர் உங்களின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும். அவ்வாறு குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரை நியமனதாரராக நியமிக்க முடியாது.
  • ஒருவேளை உறுப்பினருக்கு குடும்பம் இல்லையென்றால், அவருக்கு விருப்பமுள்ள ஒருவரை நியமிக்கலாம்.
  • உறுப்பினரானவர்  திருமணத்திற்கு முன்பாக Nominee -யை  நியமனம் செய்திருந்தாலும், திருமணம் செய்துகொண்ட பின் அவருடைய  மனைவியை தான் நியமிக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு செய்த நியமனம் செல்லாது  என்று கருதப்படும். எனவே திருமணத்திற்கு பின் நிச்சயமாக Nomination-யை Update செய்ய வேண்டும்.
  • நியமனம் செய்யும் நியமனதாரர் ஒரு மைனராக இருந்தால், அந்த மைனருக்கு பாதுகாப்பாளராக அவருடைய குடும்பத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும்.  ஒருவேளை பாதுகாப்பாளராக குடும்பத்தில் யாரும் இல்லையெனில், வெளிக்குடும்பத்தில் இருந்து ஒருவரை பாதுகாப்பாளராக நியமிக்கலாம்.
  • Nomination தகவல்களை நியமிக்காத பட்சத்தில் EPF தொகை குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்படும். முதிர்ச்சி அடைந்த மகன்கள், திருமணமான மகள்கள் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாக கருத்தப்படமாட்டார்கள்.
  • நியமனங்கள் எத்தனை முறை மாற்ற வேண்டும் என்ற வரையறை இல்லை. எனவே நீங்கள் விரும்பிய நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம்.
Read  How to Activate UAN Number Online: Full Guide in Tamil

PF Nominee விவரங்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பார்ப்பது?

EPFO Portal மூலம் எளிமையாக உங்களின் Nominee Details-யை Online-ல் Check செய்யலாம். 

  • முதலில் unifiedportal என்ற தளத்தில் UAN Account-யை Login செய்யவும்.
  • பிறகு Manage > E-Nomination என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • தற்போது Nomination History என்னும் இடத்தில் Nominee தகவல்களை Check செய்துக்கொள்ளலாம்.

How to Add / Update EPF Nominee Details Online 

UAN Number வருவதற்கு முன்னர் நியமனதாரரை Update செய்ய வேண்டுமென்றால் Form-2-யை பயன்படுத்தி Offline-ல் தான் செய்ய வேண்டும். ஆனால் தற்போது அனைத்து PF உறுப்பினர்களுக்கும் UAN கணக்கை கொடுத்திருப்பதால் Online மூலம் எளிதாக Update செய்யலாம்.

EPF Nominee Details-யை Online-ல் Update செய்வதற்கான படிகள்: 

Step 1: unifiedportal-ல் உங்களின் UAN Number மற்றும் Password-யை கொண்டு Login செய்யவும்.

EPF Nomination Step1 (1)

Step 2: இப்போது Manage என்னும் தேர்வில் E-Nomination என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Read  How to Check PF Balance Online in Tamil

EPF Nomination Step 2

Step 3: Family Declaration என்னும் இடத்தில் Yes / No என்று இரண்டு தேர்வுகள் இருக்கும். அதில் Yes என்பதை கிளிக் செய்யவும்.

EPF Nomination Step 3

Step 4: தற்போது உங்களின் குடும்ப  தகவல்களை சேர்க்கும் பக்கம் திறக்கும். அதில் Aadhaar, Name, Date of Birth, Gender, Relation, Address, Bank Account Details, Photo போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.

EPF Nomination Step 4

Step 5: ஒரு Nominee-யை மட்டும் நீங்கள் Add செய்யும்போது Save Family Details என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட Nominee-களை Add செய்ய வேண்டுமென்றால் Add Row என்பதை கிளிக் செய்து அவர்களின் தகவல்களை கொடுக்க வேண்டும்.

EPF Nomination Step 5

Step 6: Nominee தகவல்களை கொடுத்தவுடன் Save Family Details என்பதை கிளிக் செய்து சேமிக்க வேண்டும்.

Step 7: இப்பொழுது EPF Nomination என்பதின் கீழ் நீங்கள் சேமித்த நியமன தகவல்கள் வரும். அதில் கடைசியில் Total Amount என்ற பகுதி இருக்கும்.

Step 8: ஒரே நியமனதாரரை நீங்கள் சேமித்து இருந்தால் அதில் 100% என்று கொடுக்க வேண்டும். இதற்க்கு என்ன அர்த்தம் என்றால் முழு தொகையையும் ஒரே Nominee-க்கு கொடுக்க வேண்டும் என்பது பொருள்.

EPF Nomination Step 6

Step 9: பல நியமனதாரர்களை நியமித்து இருந்தால் அவர்களின் பங்கை உறுப்பினர் நிர்ணயிக்க இயலும்.

Step 10: அதேபோல் அதற்கு கீழே உள்ள EPS Nomination தகவல்களையும் நிரப்ப வேண்டும். 

EPF Nomination Step 7

E Sign Verification 

நியமன தகவல்களை சேமித்தாலும் அது Pending-ல் தான் இருக்கும். இதை முழுமையாக முடிக்க E Sign Verification செய்ய வேண்டும். அவ்வாறு E Sign செய்யும் வரை அது தொடர்ந்து Pending-ல் இருக்கும்.

E Sign Verification செய்ய தேவையானவை 

  1.  Aadhaar Number 
  2.  Aadhaar Card-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் Number
Read  PF Withdrawal: EPFO Allows Second COVID-19 Advance Withdrawal

Step 1: e-sign என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

EPF Nomination Step 8

Step 2: கிளிக் செய்தவுடன் Aadhaar Based e-Authentication பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

Step 3: அதில் Aadhaar அல்லது Virtual Number-யை உள்ளிட்டு Get OTP என்பதை கிளிக் செய்க.

EPF Nomination Step 9

Step 4:  இப்பொழுது ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit கொடுத்தால் PDF Signed Successfully என்ற செய்தி வரும்.

EPF Nomination Step 10

Nomination History-ல் நீங்கள் Add செய்த Nominee தகவல்கள் இருப்பதை காணலாம். மேலும் Nominee Details என்பதை கிளிக் செய்தால் ஒரு PDF File பதிவிறக்கம் ஆகும். அந்த File-யை திறக்கும்போது அதில் உறுப்பினர் மற்றும் நியமனதாரரின் தகவல்கள் இருக்கும். 

இதையும் படியுங்கள்:

Frequently Asked Questions (FAQ) 

நாமினேஷன் என்றால் என்ன?

ஒரு PF உறுப்பினர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், அவரின் பண பலன்கள் யார் பெற வேண்டும் என்று உறுப்பினர்  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகும்.


EPF கணக்கில் யாரை நாமினியாக நியமிக்கலாம்?

தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை நியமிக்க முடியும். ஒருவேளை குடும்ப உறுப்பினர் யாரும் இல்லாதபட்சத்தில், வேறு ஒருவரை நியமனம் செய்யலாம்.


PF தொகை நாமினிக்கு எப்போது வழங்கப்படும்?

PF உறுப்பினர் இறந்தால், முழு தொகையும் நாமினேஷனில் நியமிக்கப்பட்ட நாமினிக்கு வழங்கப்படும்.


PF கணக்கில் நாமினேஷன் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

உறுப்பினர் நாமினியை நியமிக்காமல் இறந்தால், PF தொகை சட்டப்படியான வாரிசுக்கு வழங்கப்படும்.


அனைத்து PF உறுப்பினர்களும் கட்டாயம் நாமினியை நியமிக்க வேண்டுமா?

ஆம். அனைவரும் கட்டாயம் நாமினியை நியமிக்க வேண்டும் என்று EPFO தெரிவித்துள்ளது.


நாமினேஷன் செய்ய கடைசி தேதி ஏதாவது நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

இல்லை. Nomination யை தாக்கல் செய்வதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 


One thought on “How to Add / Change Nomination in PF Account Online

  • Thank you for your valuable comment

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole