How to Solve Name,DOB,Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி
Solve Name, DOB, Gender Mismatch |PAN Authentication | EPF Portal | Aadhaar Authentication Error
உங்களின் UAN கணக்கில் Aadhaar Card, PAN Card, Bank Details போன்ற KYC தகவல்களை கண்டிப்பாக Update செய்ய வேண்டும். அவ்வாறு Aadhaar Card மற்றும் PAN Card தகவல்களை Update செய்யும்போது Authentication Failed அல்லது Mismatch என்ற செய்தி வரலாம். இந்த மாதிரியான Problem எதற்காக வருகிறது மற்றும் அதை எவ்வாறு சரி செய்வது போன்றவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
UAN Portal-ல் ஏன் KYC தகவல்களை Update செய்ய வேண்டும் ?
EPFO என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடிய அனைவருக்கும் UAN (Universal Account Number) என்ற கணக்கு இருக்கும். இந்த கணக்கின் மூலம் ஒரு தொழிலாளி தனது PF கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்கவோ மற்றும் எடுக்கவோ முடியும்.
PF கணக்கில் உள்ள பணத்தை Claim செய்ய வேண்டுமென்றால், அதற்க்கு UAN கணக்கில் Aadhaar Card, PAN Card மற்றும் Bank Details போன்ற KYC தகவல்களை Update செய்ய வேண்டும். அப்படி Update செய்தால் மட்டுமே பணத்தை Claim செய்து எடுக்க முடியும்.
பொதுவாக சில தொழிலாளர்கள் தங்களின் KYC தகவல்களை Update செய்யும்போது இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
- Aadhaar Authentication Failed. (Aadhaar Number, Name, DOB or Gender mismatch with registered data)
- PAN Verification Failed. (Name against UAN does not match with the NAME in Income Tax Department)
இந்த இரண்டு பிரச்சனைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை தீர்க்கும் வழிகளை காணலாம்.
1. Aadhaar Authentication Failed இதற்கான காரணங்கள்
- உங்களின் Aadhaar Card-ல் உள்ள தகவல்களும் மற்றும் UAN கணக்கில் உள்ள தகவல்களும் சரியாக பொருந்தவில்லை என்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
- Aadhaar தகவல்களை UAN கணக்கில் Update செய்யும்போது, உடனடியாக உங்கள் UAN கணக்கில் உள்ள Name, Date of Birth, Gender போன்ற தகவல்களை, ஆதார் தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கும். அவ்வாறு ஓப்பீடு செய்யும்போது பொருந்தவில்லை என்றால் ஆதார் எண் Update ஆகாது.
- அதாவது தகவல்கள் இரண்டிலும் 100% சதவீதம் பொருந்தியிருந்தால் மட்டுமே Update செய்ய முடியும்.
- எடுத்துக்காட்டாக UAN கணக்கில் G Velmurugan என்று இருந்தால், ஆதார் அட்டையிலும் G Velmurugan என்று தான் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டையில் Velmurugan G என்று இருந்தால் கூட Update ஆகாது.
இந்த பிரச்னையை தீர்க்கும் வழிகள்
- முதலில் உங்கள் ஆதார் மற்றும் UAN இவற்றில் எதில் தவறு உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். இதற்க்கு உங்களின் பள்ளிச்சான்றிதழ் உள்ள Name, Date of Birth போன்ற தகவல்களை ஆதார் மற்றும் UAN-ல் ஓப்பிட்டு பாருங்கள்.
- அவ்வாறு பார்க்கும்போது UAN கணக்கில் சரியாக இருந்து, Aadhaar Card-ல் தவறாக இருந்தால் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆதாரில் உள்ள தகவல்களை திருத்திக்கொள்ளலாம்.
- ஒருவேளை ஆதாரில் சரியாக இருந்து, UAN கணக்கில் தவறாக இருந்தால் அதை UAN Portal–லில் நீங்களே Online மூலமாக மாற்றிக்கொள்ளலாம். பெரும்பாலும் UAN கணக்கில் தான் தவறாக இருக்கும். எனவே அதை நீங்களே Online-ல் எளிமையாக மாற்றலாம்.
UAN கணக்கில் Name, Date of Birth, Gender மாற்றுதல்
உங்கள் UAN கணக்கில் உள்ள தகவல்கள் தவறாக இருக்கும்போது அதை கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி மாற்றலாம்.
Step 1: முதலில் உங்களின் UAN கணக்கை Sign in செய்யவும்.
Step 2: பிறகு Manage என்பதில் Basic Details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இங்கு உங்களின் Name, Date of Birth மற்றும் Gender போன்ற தகவல்களை Edit செய்யும் வசதி இருக்கும். அதில் உங்களின் Aadhaar Card-ல் இருப்பதை போன்று மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு Update Details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: இப்பொழுது உங்களின் Request-யை நீங்கள் வெற்றிகரமாக அனுப்பிவிட்டீர்கள்.
இந்த Request ஆனது முதலில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு போகும். அங்கு சரிபார்க்கப்பட்டு பிறகு PF அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்களின் நிலையை அறிய மீண்டும் Manage > Basic Details-க்கு சென்று பார்க்கலாம். UAN கணக்கில் உங்களின் பெயர் மாறுவதற்கு சராசரியாக 15 நாட்கள் ஆகும்.
PAN Verification Failed இதற்கான காரணங்கள்
- PAN Card-ல் உள்ள பெயர் மற்றும் UAN கணக்கில் உள்ள பெயர், இவை இரண்டும் ஒரே மாதிரியாக இல்லாத போது, இந்த மாதிரியான Error செய்தி வருகிறது.
- இதில் பல பேருக்கு ஒரு குழப்பம் இருக்கும். அது என்னவென்றால் பெரும்பாலும் PAN Card–ல் உள்ள பெயரும், UAN-ல் உள்ள பெயரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால் இருந்தாலும் அவர்களுக்கு இந்த Error செய்தி வரும்.
- இதற்கான காரணம் என்னவென்றால் உங்களின் PAN-ன் மேல் இருக்கும் பெயரானது Printed பெயராகும். அதாவது நீங்கள் PAN Card-க்கு விண்ணப்பிக்கும்போது Printed Name என்ற இடத்தில் என்ன பெயர் கொடுத்தீர்களோ, அதே பெயர் தான் PAN Card-ன் மேல் Print ஆகும்.
- ஆனால் PAN Verification செய்யும்போது, நீங்கள் விண்ணப்பிக்கும் போது கொடுத்த First Name,Middle Name, Last Name ஆகிய இவற்றுடன் தான் ஓப்பிடு செய்யும். அவ்வாறு செய்யும்போது பெரும்பாலான அனைவருக்கும் Match ஆகாது. எனவே தான் PAN Verification Failed என்ற செய்தி வருகிறது.
இந்த பிரச்னையை தீர்க்கும் வழிகள்
- உங்களின் PAN Card-ல் உள்ள பெயரை, UAN கணக்கில் இருக்கும் பெயரை போன்று மாற்ற வேண்டும்.
- இல்லையென்றால் PAN Card-யை நீங்கள் Offline-ல் அதாவது PF அலுவலத்திற்கு சென்று Update செய்ய வேண்டும்.
- UAN Portal-ல் அனைவரும் PAN எண்ணை Update செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- உங்களின் சேவை 5 வருடங்களுக்கும் அதிகமாக இருந்தால் PAN-யை Update செய்ய தேவை இல்லை. மேலும் உங்களின் PF பணம் 50,000-க்கும் குறைவாக இருந்தாலும் PAN-யை Update செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இன்று நீங்கள் PF பற்றிய ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால் கீழே பதிவிடவும்.
thanks i transalte your post in english then i got the info.
Hello Sir,
I forgot my UAN login password. I tried to do forgot password, but Aadhar details are not matching with the EPF details. I shared the details to my company HR and they said changes was done. Now, i left the company.
Currently , i am unable to reset the password in the EPFO and already left the company.
In Aadhar card my surname is t first position and in PAN card my surname is at last position.
How can i resolve this issue.
The Name, Gender, and Date of Birth you enter while resetting your password should match the information in the EPFO Records. Only then you can reset the password. For More Details Contact Instagram Page.