EPFO

PF Withdrawal: EPFO Allows Second COVID-19 Advance Withdrawal

தற்போது PF Advance இல் Covid-19 காரணத்திற்காக இரண்டாம் முறை பணத்தை Withdrawal செய்வதற்கான அனுமதியை EPFO வழங்கியுள்ளது. இதை சமீபத்தில் தொழிலார் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

கடந்த ஆண்டு முதல் கரோனா பிரச்சனையின் காரணமான பல்வேறு தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்கள் நிதி பிரச்சனையை எதிர்கொண்டனர்.

இதற்காக கடந்த ஆண்டு Covid-19 காரணத்திற்காக தொழிலாளர்கள் தங்களின் PF தொகையில் இருந்து Advance தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று நிதி அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் பல தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

இருப்பினும் Covid -19 காரணத்திற்காக ஒரு முறை மட்டுமே PF பணத்தை Withdrawal செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்றின் அதிகரிப்பு காரணமாக தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தங்களின் அடிப்படை செலவுகளை கூட சமாளிக்க முடியாத சிக்கல்களை எதிர்கொண்டு வீட்டிற்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் மக்களின் சுமையை குறைக்கும் பொருட்டு, PF கணக்கில் இருந்து மீண்டும் Advance பணத்தை திரும்ப பெறுவதற்கு EPFO அனுமதி அளித்துள்ளது.

Read  How to Check PF Balance Online in Tamil

அதாவது, தற்போது Covid-19 காரணத்தை கொண்டு இரண்டாவது முறையும் PF Advance பணத்தை திரும்பபெறலாம். இதற்காக வருங்கால வைப்பு நிதி ஆணையம் PF விதிகளை தளர்த்தியுள்ளது. 

மேலும் பி.எப் முன்பணத்திற்கு விண்ணப்பிக்கும் உரிமைக்கோரல்களுக்கு (Claim) விரைவாக Settle செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, முதலாவது Covid-19 ற்கு முன்பணத்தை பெற்ற உறுப்பினர்கள், தற்போது இரண்டாவது முறையும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

How to Apply For Second Covid-19 PF Advance Withdrawal

Online மூலம் Second Covid-19 PF Advance Withdrawal செய்வதற்கான செயல்முறை பற்றி விரிவாக காணலாம்.

Step 1: Unifiedportal இணையதளத்திற்கு சென்று UAN Account யை Login செய்யவும்.

Step 2: நீங்கள் PF Advance பணத்திற்கு Apply செய்வதற்கு முன் KYC பிரிவிற்கு சென்று வங்கிக்கணக்கு எண் மற்றும் IFSC Code சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

Step 3: Online Services > Claim (Form-31, 19, 10 & 10D) என்பதை கிளிக் செய்யவும்.

Read  Form 31: PF Advance பணம் எடுப்பது பற்றிய முழு தகவல்கள்

Select PF Claim Option

Step 4: உங்களின் Bank Account Number யை Enter செய்து Verify என்பதை அழுத்தவும்.

Enter Bank Account Number & Click Verify

Step 5: இப்பொழுது தோன்றும் Pop Up திரையில் Yes என்பதை கிளிக் செய்க.

Click Yes - Second COVID-19 Advance Withdrawal

Step 6: Proceed for Online Claim என்பதை அழுத்தவும்.

Click Proceed Claim

Step 7: Select Claim Option இல் PF ADVANCE (FORM – 31) என்பதை தேர்வு செய்க.

Select PF Advance Form 31

Step 8: Service யை தேர்வு செய்த பிறகு Purpose for which advance is required என்ற இடத்தில் OUTBREAK OF PANDEMIC (COVID-19) என்ற காரணத்தை Select செய்யவும்.

Outbreak of covid 19 pandemic

Step 9: நீங்கள் திரும்பப்பெற நினைக்கும் பணத்தை Enter செய்யவும். பிறகு Address யை உள்ளிட்டு Bank Passbook யை Upload செய்யவும்.

Enter Address for PF Claim - Second COVID-19 Advance Withdrawal

Step 10: Check Box யை டிக் செய்து Get Aadhaar OTP என்பதை அழுத்தவும். இப்பொழுது உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit செய்தால் உங்களின் Claim வெற்றிகரமாக அனுப்பட்டுவிடும்.

Read  How to Download & Fill Form 15G for PF Withdrawal in Tamil

Click Get Aadhaar OTP

மேலும் படிக்க – EPF Form 31: Details & Instructions on PF Advance

இன்று நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இது போன்ற பயனுள்ள தகவல்களை அறிவிப்புகளாக பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest