EPFO KYC New Update: PF KYC இல் புதிய அப்டேட்
தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பானது, PF Account இல் KYC தகவல்களை Update செய்வதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவெனில், இனிமேல் KYC Update செய்யும் அனைத்து பி எப் உறுப்பினர்களும், இந்த New Update முறையில் தான் ஆவணங்களை Add செய்ய முடியும். இதை பற்றிய முழுமையான தகவல்களை தான் இந்த கட்டுரையில் விவரிக்கிறேன்.
இப்பொழுது ஒரு பணியாளர் தன்னுடைய பி எப் பணத்தை Claim செய்ய வேண்டுமென்றால், அதை Online மூலமாக மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் நேரிடையாக பி எப் அலுவலகத்திற்கு சென்றாலும், அங்கு உங்களின் உரிமை கோரலை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்க்கு மாறாக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்குமாறு கூறுவார்கள்.
அவ்வாறு நீங்கள் ஆன்லைன் மூலமாக PF Claim செய்ய வேண்டுமென்றால், அதற்க்கு கண்டிப்பாக KYC Details யை அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் PF பணத்தை Withdrawal செய்ய முடியாது.
எனவே உங்களின் UAN Account இல் KYC ஆவணங்களை கட்டாயமாக சேர்க்க வேண்டும்.
Table of Contents
What is KYC in EPF
KYC என்பது Know Your Customer ஆகும். அதாவது வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் ஒரு சரிபார்ப்பு முறையாகும்.
EPF இல் Aadhaar Card, Pan Card மற்றும் Bank Details ஆகிய மூன்றும் கட்டாயமாக சேர்க்க வேண்டிய KYC ஆவணங்களாகும். இதில் PAN Card மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் Update செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது, ஒரு உறுப்பினரின் PF Withdrawal தொகை Rs.50,000 க்கும் குறைவாக இருந்தாலோ அல்லது மொத்த சேவை காலம் 5 வருடங்களை பூர்த்தி செய்திருந்தாலோ, பான் அட்டையை அப்டேட் செய்ய தேவையில்லை.
PF KYC புதிய அப்டேட் | EPFO KYC New Update
பழைய KYC அப்டேட் செய்யும் முறையில், உங்களுக்கு வேண்டிய Option யை தேர்வு செய்து அதன் தகவல்களை Enter செய்ய வேண்டும். பிறகு Save செய்தால் சேமிக்கப்பட்டுவிடும்.
ஆனால் இப்பொழுது கொண்டுவந்திருக்கும் புதிய முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது என்ன என்பதை காணலாம்.
உங்களின் UAN Account யை Login செய்து Manage > KYC என்பதை கிளிக் செய்யவும். தற்போது புதிய KYC மாற்றங்களை காண்பீர்கள்.
இதற்க்கு முன்பு இருந்த KYC இல் தேவையில்லாத பல ஆவண வகைகள் இருந்தன. எடுத்துக்காட்டாக, Votter ID, Driving Licence மற்றும் Ration Card போன்ற பல தேவையில்லாத ஆவண வகைகள் இருந்தன.
ஆனால் தற்போது அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு தேவையான ஆவண வகைகளை மட்டும் கொடுத்துள்ளனர். அதாவது Aadhaar, Pan Card, Bank Details மற்றும் Passport ஆகிய நான்கு ஆவணங்களை மட்டும் அப்டேட் செய்யும் வசதியை கொடுத்துள்ளனர்.
புதிய அப்டேடில் கொடுக்கப்பட்டுள்ள ஆவண வகைகளில் Passport என்பது கட்டாயம் இல்லை. உங்களிடம் பாஸ்போர்ட் இருந்தால் அப்டேட் செய்யலாம் அல்லது அதை அப்படியே விட்டுவிடலாம்.
PF KYC இன் புதிய வழிகாட்டுதல்கள்
- தற்போது KYC ஆவணங்களாக Bank Details, PAN Card, Aadhaar மற்றும் Passport ஆகியவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
- இனிமேல் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் நீங்கள் எதை Add செய்தாலும், ஏற்கனவே UAN Account இல் உள்ள உங்களின் பெயரை நீங்கள் அப்டேட் செய்யும் ஆவணத்தின் பெயராக தானாகவே எடுத்துக்கொள்ளும்.
- அவ்வாறு தானாக எடுத்துக்கொள்ளும் ஆவணத்தின் பெயரை உங்களால் மாற்ற முடியாது.
- Bank Details யை Add செய்யும் போது, உங்களின் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Submit செய்தால் மட்டுமே, வங்கித்தகவல்களை சேர்க்க முடியும்.
- நீங்கள் KYC பிரிவில் ஆவணங்களை Add செய்த பிறகு, அதை முதலாளி (Employer) 60 நாட்களுக்குள் Approve செய்யாவிட்டால், தானாகவே செல்லாததாகிவிடும். பிறகு நீங்கள் மீண்டும் புதிய கோரிக்கையை செய்ய வேண்டியதிருக்கும்.
இதற்க்கு பிறகு PF Account இல் KYC Update செய்யும் அனைத்து PF Member களும், இந்த புதிய வழிமுறையின் படி தான் அப்டேட் செய்ய முடியும்.
இந்த புதிய அப்டேட் வருவதற்கு முன்பு, நீங்கள் ஏற்கனவே பிஎப் பணத்திற்கு Claim செய்திருந்தால் அது Settle ஆகிவிடும். அதை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
PF இல் கொண்டுவரப்பட்ட புதிய புதுப்பிப்புகளை பற்றி இன்று தெரிந்து கொண்டீர்கள். இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதைப்பற்றிய கேள்விகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள உங்களின் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
நான் ஆறு மாதங்கள் வேலை செய்து பிடித்த பி.எப் பணம்5700ரூ வாங்கி விட்டேன் ஆனால் பேமிலி பென்சன்2700ரூபாய் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை எனது வயது59.
நீங்கள் Form 10C யை Apply செய்யுங்கள். இந்த படிவத்தை விண்ணப்பித்தால் உங்களின் பென்ஷன் திட்டத்தில் உள்ள பணத்தை திரும்பபெறலாம்.