PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி?

How to Claim PF Amount in Tamil: நீங்கள் உங்களின் PF பணத்தை எடுக்க விரும்புகிறீர்களா? உங்களின் பதில் ஆம் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். வீட்டில் இருந்தே PF பணத்தை எப்படி எடுப்பது? அதற்க்கு என்ன ஆவணங்கள் தேவை மற்றும் அதற்கான செயல்முறை என்ன போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

PF பணம் என்றால் என்ன?

PF பணம் என்பது, ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகளால் செலுத்தப்படும் வழக்கமான பங்களிப்புகளின் மூலம் காலப்போக்கில் குவிந்து வரும் பணமாகும். இது பணியாளர்களுக்கு ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

PF பணமானது, மாதாந்திர பங்களிப்புகள் மூலம் வளர்ச்சியடைந்து, அதற்க்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டியைப் பெறுகிறது. தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அல்லது சில தகுதிச் சூழ்நிலைகளில் PF பணத்தில் ஒரு பகுதி அல்லது மொத்த PF தொகையையும் எடுக்க அனுமதிக்கிறது. அவசரநிலைகள், கல்வி அல்லது மருத்துவச் செலவுகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தனிநபர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பு தங்கள் PF பணத்தை எடுக்கலாம்.

PF பணத்தை எடுக்க தேவையான ஆவணங்கள் 

ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுக்கும்போது அதிகமான ஆவணங்கள் தேவைப்படுவதில்லை. ஏனெனில் அனைத்து செயல்முறைகளும் ஆதார் அட்டையின் அடிப்படையில் நடைபெறுகிறது. உங்களின் அடையாளத்தை சரிபார்க்க வெறும் ஆதார் OTP மட்டும் போதுமானது ஆகும்.

இருப்பினும் நீங்கள் PF Claim செய்யும்போது உங்களின் வங்கிக்கணக்கின் Bank Passbook அல்லது Cheque Leaf இவற்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் ஸ்கேனர் சாதனம் இல்லையென்றால் மொபைல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். பேங்க் பாஸ்புக் அல்லது காசோலையில் உங்களின் பெயர், வங்கிக்கணக்கு எண் மற்றும் IFSC Code இவை மூன்றும் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.  

Read  PF Withdrawal Form 19 and 10C Free Download Word Format

அடுத்து உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அருகில் வைத்துக்கொள்ளவும். ஏனெனில் கடைசி ஸ்டேப்பில் OTP Verification செய்ய வேண்டும். அவ்வளவு தான் இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதுமானது ஆகும். 

UAN Account இல் KYC சரிபார்த்தல் 

நீங்கள் உங்களின் UAN கணக்கில் உள்ள KYC பிரிவில் ஆதார் எண், வங்கிக்கணக்கு தகவல்கள் போன்றவற்றை இணைத்துள்ளீர்களா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை KYC இல் ஒருமுறை இணைத்தாலே போதுமானது ஆகும். நீங்கள் ஏற்கனவே இந்த தகவல்களை இணைத்து இருந்தால், நேரடியாக PF Claim க்கு Apply செய்யலாம்.

நீங்கள் இணைத்துள்ளீர்களா அல்லது இல்லையா என்று சந்தேகம் இருந்தால் KYC பிரிவில் சரிபாருங்கள். அதை எப்படி பார்ப்பது என்று காண்போம்.

உங்களின் UAN Account யை Login செய்யவும். பிறகு Manage > KYC என்பதை கிளிக் செய்யவும். 

Check KYC in UAN Account

இப்பொழுது Currently Active KYC என்பதற்கு கீழே ஆதார், பேங்க் அக்கௌன்ட்  தகவல்கள் மற்றும் பான் அட்டை போன்ற தகவல்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் PF பணம் எடுத்தால் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

Active KYC in PF Account Tamil

KYC பிரிவில் அனைத்தும் சரியாக இருந்தால் மகிழ்ச்சி. ஒருவேளை வங்கிக்கணக்கு எண்ணை மாற்ற வேண்டும் அல்லது பான் எண்ணை சேர்க்க வேண்டும் போன்ற திருத்தங்கள் செய்வது இருந்தால், அதற்க்கு மேலே உள்ள Add KYC இல் சென்று KYC Update செய்யலாம். அப்படி சேர்த்த பிறகு அது KYC இல் Add ஆகுவதற்கு ஒரு வாரம் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Read  EPFO KYC New Update: PF KYC இல் புதிய அப்டேட்

Add KYC for PF Claim

PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? | How to Claim PF Amount in Tamil

இப்பொழுது PF பணத்தை ஆன்லைன் மூலம் எப்படி எடுப்பது என்பதை பற்றி காணலாம். நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்றி PF Amount யை Claim செய்யலாம்.

Step 1: ,முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களின் UAN Account யை Login செய்யவும்.

UAN Portal Login 

Step 2: Login செய்த பிறகு Online Services என்பதற்கு கீழே உள்ள Claim (Form 31, 19, 10C & 10D) என்பதை கிளிக் செய்யவும்.

PF Claim Form 31-19-10C and 10D

Step 3: Bank Account No என்ற இடத்தில் உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை உள்ளிட்டு Verify என்பதை அழுத்தவும். பிறகு Yes என்பதை கிளிக் செய்தால் கணக்கு சரிபார்க்கப்படும்.

EPFO-Bank Account Verify - PF Claim in Tamil

Step 4: பிறகு கடைசியில் உள்ள Proceed for Online Claim என்பதை அழுத்தவும்.

Proceed for Online PF Claim

Step 5: இப்பொழுது நீங்கள் Claim செய்ய விரும்பும் படிவத்தை தேர்வு செய்யவும்.

நீங்கள் வேலையில் இருக்கும்போது Form 31 யை Claim செய்து Advance PF Amount யை மட்டுமே பெற முடியும். வேலையில் இருந்து வெளியேறிய பிறகு Form 19 யை Claim செய்து Full PF Amount யை Withdrawal செய்யலாம்.

இங்கு நான் படிவம் 31 யை தேர்வு செய்துள்ளேன். தேர்வு செய்து நீங்கள் பணம் எடுப்பதற்கான காரணம் மற்றும் எடுக்க விரும்பும் பணத்தின் அளவு போன்றவற்றை Type செய்ய வேண்டும்.

PF Advance Form 31

Step 6: Employee Address என்ற இடத்தில் உங்களின் ஆதார் அட்டையில் உள்ளது போன்ற முகவரியை Type செய்யவும். பிறகு அதற்க்கு கீழே உங்கள் வங்கிக்கணக்கின் பாஸ்புக் அல்லது காசோலையை Upload செய்யவும்.

Upload Bank Passbook for PF Claim Tamil

Step 7: பிறகு கடைசி படியாக Check Box யை டிக் செய்து Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number யை உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Read  Form 31: PF Advance பணம் எடுப்பது பற்றிய முழு தகவல்கள்

Get Aadhaar OTP for PF Amount Claim in Tamil

இப்போது உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக Submit செய்யப்பட்டது. இப்பொழுது தோன்றும் PDF ஆவணத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதை நீங்கள் எங்கும் கொடுக்க தேவையில்லை. நீங்கள் PF Claim செய்ததற்கு ஆதாரமாக அதை வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் Claim செய்த பிறகு உங்களின் கோரிக்கை நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு (Employer) அனுப்பப்படும். அங்கு சரிபார்க்கப்பட்டு சம்மந்தப்பட்ட PF Office க்கு அனுப்பப்படும். பிறகு PF Office இல் சரிபார்க்கப்பட்டு உங்களின் PF பணம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். PF பணம் உங்களின் வங்கிக்கணக்கிற்கு வருவதற்கு சராசரியாக 20 நாட்கள் வரை ஆகும்.

FAQ – PF தொடர்பான கேள்விகள் 

1. PF பணத்தை நானே ஆன்லைன் மூலம் Claim செய்ய முடியுமா?

முடியும். UAN Portal இல் உங்களின் UAN கணக்கை Login செய்து PF பணத்தை Claim செய்யலாம்.

2. PF கணக்கில் வங்கிக்கணக்கு எண்ணை மாற்ற முடியுமா?

Manage > KYC பிரிவில் சென்று வங்கிக்கணக்கு எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

3. PF கணக்கில் வங்கிக்கணக்கு எண்ணை எத்தனை முறை மாற்றலாம்?

இதற்க்கு வரம்பு இல்லை. நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.

4. படிவம் 31 யை எப்பொழுது விண்ணப்பிக்கலாம்?

உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க படிவம் 31 யை பயன்படுத்தலாம்.

4. படிவம் 19 யை எப்பொழுது விண்ணப்பிக்கலாம்?

நீங்கள் பணியை விட்டு வெளியேறிய பிறகு மொத்த PF பணத்தை எடுக்க படிவம் 19 யை உபயோகிக்கலாம்.

5. படிவம் 10C என்பது என்ன?

படிவம் 10C என்பது பென்ஷன் திட்டத்தில் உள்ள பணத்தை எடுக்கவோ அல்லது திட்டச்சான்றிதழை பெறவோ விண்ணப்பிக்க பயன்படும் படிவம் ஆகும்.

6. PF கிளைம் செய்தபிறகு பணம் எத்தனை நாட்களில் வங்கிக்கணக்கிற்கு வரும்?

நீங்கள் கிளைம் செய்த 20 நாட்களுக்குள் உங்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest