EPFO

How to Download & Fill Form 15G for PF Withdrawal in Tamil

PF உறுப்பினர்கள், அவர்கள் செய்யும் வேலையில் இருந்து வெளியேறிய பின்பு, PF பணத்தை Withdraw செய்ய நினைக்கலாம். அப்படி Withdrawal செய்யும்போது சிலர் Form 15G யை Fill செய்து Upload செய்ய வேண்டியதிருக்கும். படிவம் 15G யை நிரப்பும் தொழிலாளர்களுக்கு அதை பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழலாம். அதற்கான விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

What is Form 15G?

Form 15G என்பது வருமான வரி துறைக்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு தெரிவிப்பு படிவம் (declaration form) ஆகும். 

வருமான வரித்துறையானது (Income Tax Department) சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிச்சலுகைளை அளிக்கிறது. நாம் அந்த வரிசலுகைகளை பெறுவதற்கு இந்த declaration form யை நிரப்பி கொடுக்க வேண்டும்.

உங்களின் வருமானம் ஒரு நிதியாண்டிற்கு 2,50,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வருமான வரித்துறையில் இந்த Form 15G யை பயன்படுத்தி வரிசலுகையை பெறலாம்.

Who Needs to Upload Form 15G in PF

PF பணத்தை Withdrawal செய்யும்போது யாரெல்லாம் இந்த படிவத்தை கொடுக்க வேண்டும்?

வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை திரும்பப்பெறும் பயனாளிகளில், யாரெல்லாம் இந்த படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

PF பணத்தை Withdrawal செய்யும் அனைவரும் படிவம் 15G யை நிரப்பி Upload செய்ய தேவை இல்லை. 

PF இல் இருந்து எடுக்கும் பணமானது, 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்போது மற்றும் அதே நேரத்தில் உங்களின் மொத்த சேவை காலம் (Service Years) 5 வருடங்களுக்கும் குறைவாக இருக்கும்போது மட்டுமே இந்த படிவத்தை நிரப்பி பதிவேற்ற வேண்டும்.

யாரெல்லாம் இந்த படிவத்தை கொடுக்க தேவையில்லை?

Read  How to Change Mobile Number in EPF Account Online: UAN Portal

நீங்கள் Withdraw செய்யும் PF பணமானது, 50,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், Form 15G யை சமர்ப்பிக்க தேவையில்லை.

உங்களின் மொத்த சேவைக்காலம் (Service Years) 5 வருடங்களுக்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் எவ்வளவு பணத்தை எடுத்தாலும் அதற்க்கு படிவம் 15G யை கொடுக்க தேவையில்லை.

மேற்சொன்ன இரண்டு காரணங்களில் ஏதாவது ஒன்று பொருந்தினாலும் நீங்கள் 15G படிவத்தை கொடுக்க தேவையில்லை.

படிவம் 15G யை கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?

நீங்கள் பி.எப் கணக்கில் எடுக்கும் பணத்திற்கு படிவம் 15ஜி யை சமர்ப்பிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.

ஒருவேளை நீங்கள் மேற்கண்ட படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் 34.608% சதவீதம் Tax பிடிப்பார்கள்.

உதாரணமாக நீங்கள் உங்களின் PF Account இல் இருந்து எடுக்கும் பணம் 1,00,000 ரூபாயாக வைத்துக்கொள்வோம். இதில் முதல் 50,000 ரூபாய்க்கு Tax பிடித்தம் செய்யமாட்டார்கள். ஏனெனில் முதல் ஐம்பதாயிரம் ரூபாயானது வருமான வரி விலக்கில் வந்துவிடுகிறது. எனவே மீதம் இருக்கும் 50,000 ரூபாய்க்கு மட்டும் 34.608% வரி பிடித்தம் செய்வார்கள். 

நீங்கள் மேற்கண்ட படிவத்தை சமர்ப்பிக்காமல் PAN Number யை மட்டும் Update செய்திருந்தால் 10% வரைக்கும் Income Tax பிடிப்பார்கள்.

எனவே நீங்கள் முழு வரிவிலக்கை பெறுவதற்கு படிவம் 15ஜி யை சமர்ப்பிப்பது அவசியம் ஆகும்.

How to Download Form 15G

இந்த படிவத்தை வருமான வரித்துறையின் இணையதளத்திலிருந்து இலவசமாக Download செய்துகொள்ளலாம். மேலும் அனைத்து வங்கிகளின் இணையதளங்களிலும் இந்த படிவம் காணப்படுகின்றன.

Click Here to Download Form 15G For PF

Sample Form 15G for PF Withdrawal

EPF பணத்திற்க்காக நிரப்பப்படும் படிவம் 15ஜி இன் Sample Form கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து Download செய்து கொள்க.

Download Sample Filled Form 15G

How to Fill Form 15G For PF Withdrawal

இந்த படிவத்தை நிரப்புவது அவ்வளவு கடினமான செயல் அல்ல. பின்வரும் செயல்முறைகளின் மூலம் எளிதாக படிவத்தை நிரப்பலாம்.

How to fill form 15g for pf withdrawal - Tamil

இந்த படிவத்தில் Part 1 மற்றும் Part 2 என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். இதில் நாம் Part 1 யை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

Read  How to Check PF Balance Online in Tamil

Field 1: Name of the Assessee (Declarant) – உங்களின் பெயர் PAN Card இல் எப்படி இருக்கிறதோ அதே போல் இங்கு நிரப்ப வேண்டும்.

Field 2: PAN of the Assessee – உங்களின் PAN Card எண்ணை நிரப்ப வேண்டும்.

Filed 3: Status – வருமான வரி நிலையில் Individual என்று எழுதுக. Individual என்றால் தனி நபர்

 ஆகும்.

Filed 4: Previous Year – சில பேர் இந்த இடத்தில் தவறு செய்கிறார்கள். அதாவது இதில் இதற்க்கு முந்தைய நிதியாண்டை எழுதிவிடுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு எழுதுவது முற்றிலும் தவறாகும். இவ்வாறு எழுதுவது Fixed Deposit க்கு மட்டுமே பொருந்தும்.

EPF பணத்திற்கு பயன்படுத்தும்போது, நீங்கள் எந்த நிதியாண்டிற்காக இந்த படிவத்தை சமர்ப்பிக்கிறீர்களோ அந்த நிதியாண்டை எழுத வேண்டும். அதாவது இதில் தற்போதைய நிதியாண்டை நிரப்ப வேண்டும்.

Field 5: Residential Status – இதில் Resident என்று நிரப்புங்கள். NRI நபர்களுக்கு இந்த படிவம் பொருந்தாது.

Field 6-12: Address – இவற்றில் உங்களின் முழுமையான தொடர்பு முகவரியை (Communication Address) Fill செய்க.

Field 13-14: Contact Details – உங்களின் Email ID மற்றும் Mobile Number யை நிரப்ப வேண்டும்.

Field 15: Tax – முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரித்துறைக்கு நீங்கள் ஏதேனும் வரி செலுத்தி இருந்தால் Yes என்பதை டிக் செய்து, நீங்கள் கடைசியாக வரி செலுத்திய மதிப்பீட்டு ஆண்டை எழுதவும்.

ஒருவேளை நீங்கள் வருமான வரித்துறைக்கு வரி ஏதும் செலுத்தவில்லை என்றால் No என்பதை டிக் செய்க.

Field 16-17: Field 16 இல் நீங்கள் அறிவிக்கும் மதிப்பிடப்பட்ட வருமானத்தை குறிப்பிட வேண்டும்.  Filed 17 இல் நிதியாண்டிற்கான மொத்த மதிப்பிடப்பட்ட வருமானத்தை குறிப்பிட வேண்டும்.

PF பணத்திற்காக இந்த படிவத்தை பயன்படுத்துவதாக இருந்தால், Field 16 மற்றும் 17 யை காலியாக விட்டு விடுங்கள். ஏனெனில் PF இல் இருந்து வரும் முழு வருமானமும் நமக்கு தொல்லியமாக தெரியாது என்பதால், இதை காலியாக விட்டுவிடுவது சிறந்ததாகும்.

Read  EPFO KYC New Update: PF KYC இல் புதிய அப்டேட்

Field 18:  தற்போதைய நிதியாண்டில் வேறு வருமானத்திற்காக ஏற்கனவே படிவம் 15G யை சமர்ப்பித்திருந்தால், அதை பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே இந்த படிவத்தை கொடுக்கவில்லை என்றால் Nill என்று நிரப்புக. 

Field 19: Details of income for which the declaration is filed –  இதில் Account என்ற இடத்தில் PF Account Number, Nature of Income என்ற இடத்தில் PF Withdrawal மற்றும் Section என்ற இடத்தில் 192A என்று நிரப்ப வேண்டும். Amount of Income என்னும் இடத்தில் காலியாக விட்டுவிடுங்கள்.

பிறகு உங்களின் Signature மற்றும் அதற்கு கீழே உள்ள Declaration பத்தியை நிரப்பினால் போதுமானது ஆகும். தற்போது நீங்கள் படிவத்தை வெற்றிகரமாக நிரப்பிவிட்டீர்கள்.

நான் ஏற்கனவே கூறியது போல் Part 2 பிரிவை நீங்கள் நிரப்ப தேவையில்லை. இருந்தாலும் Part 1 உடன் Part 2 வையும் சேர்த்து Upload செய்ய வேண்டும்.

How to Upload Form 15G When PF Withdrawal

நீங்கள் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு, அதை Scan செய்து PDF வடிவத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்க்கு ஆன்லைனில் ஏராளமான இலவச இணையதளங்கள் உள்ளன. 

PDF வடிவத்திற்கு மாற்றிய பிறகு அந்த Document இன் அளவு 1MB கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 1MB க்கும் அதிகமாக இருந்தால் அதை Compress செய்து அதனின் அளவை குறைக்க வேண்டும்.

ஆவணத்தை Upload செய்வதற்கு தயாராக வைத்துக்கொண்ட பிறகு, EPF பணத்திற்கு Claim செய்ய வேண்டும். அதில் Form 19 யை தேர்வு செய்யும்போது Form 15G யை Upload செய்யும் தேர்வு வரும். அதில் நீங்கள் Fill செய்து தயாராக வைத்திருக்கும் Form 15G யை Upload செய்யலாம்.

இந்த பதிவில் படிவம் 15ஜி யை பதிவிறக்கம் செய்து அதை எவ்வாறு நிரப்பி Upload செய்வது என்பதை தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

தொடர்புடைய கட்டுரைகள்:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole