EPF Passbook: How to Login & Download UAN Passbook in Online
EPF இல் உறுப்பினராக இருக்கக்கூடிய தொழிலாளர்கள், தங்களின் Name, PF Account Number, Establishment, Employee & Employer Share, Pension Scheme என அனைத்து தகவல்களையும் UAN Passbook மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த PF Passbook-யை பெறுவது மிகவும் எளிதாகும். எந்த நேரத்திலும் மொபைல் அல்லது கணினியில் Online மூலமாக பாஸ்புக்கை Download செய்ய முடியும்.
ஒரு பி.எப் பாஸ்புக்கை Login செய்து, அதை பதிவிறக்கம் செய்வது எப்படி ? அந்த பாஸ்புக்கில் என்னென்ன தகவல்கள் இருக்கும்? போன்ற கேள்விகளுக்கான விரிவாக பதில்களை இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
What is EPF Passbook?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) அனைத்து EPF உறுப்பினர்களுக்கும் Universal Account Number (UAN) என்ற தனித்துவ எண்ணை வழங்கியுள்ளது. இதன் மூலம் PF சம்மந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் Online மூலமாக பெற முடியும். ஆன்லைன் மூலம் பெறப்படும் பல சேவைகளில் இந்த Passbook சேவையும் ஒன்றாகும்.
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபருக்கு வரவு செலவு விவரங்களை தெரிந்து கொள்ள, வங்கி தரப்பில் இருந்து பாஸ்புக் வழங்குவார்கள். அதே போலத்தான் பி.எப் கணக்கில் செலுத்தப்படும் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு, Pension Scheme, ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் தொகை மற்றும் Claim செய்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் UAN Passbook இல் இருக்கும்.
பி.எப் பாஸ்புக் ஆனது ஒரு e-Passbook ஆகும். அதாவது இதை ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பெற முடியும்.
Passbook Details
EPF Passbook இல் பின்வரும் விவரங்கள் இருக்கும்:
- நிறுவனத்தின் ID மற்றும் பெயர்
- உறுப்பினரின் ID மற்றும் பெயர்
- ஊழியர், முதலாளியின் பங்களிப்பு
- பென்ஷன் பங்களிப்பு
- PF இல் Withdrawal செய்த தொகை
- PF இன் வட்டி விவரம்
- அடிப்படை சம்பளம் (Basic Pay)
- பாஸ்புக்கை அச்சடித்த தேதி
How to Download EPF Member Passbook
நீங்கள் பி.எப் பாஸ்புக்கை ஆன்லைன் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளவும்.
- UAN Registration-யை நிறைவு செய்த PF உறுப்பினர்களுக்கு மட்டுமே பாஸ்புக் வசதி கிடைக்கும்.
- நீங்கள் UAN Registration அல்லது Activation செய்த 6 மணி நேரத்திற்கு பிறகு தான் பாஸ்புக்கை திறக்க முடியும்.
- Portal இல் செய்யப்படும் மாற்றங்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு தான் Update செய்யப்படும்.
- விலக்கு பெற்ற உறுப்பினர்கள் / Settled Members / InOperative Members போன்றவர்கள் பாஸ்புக் வசதியை பெற முடியாது.
- பாஸ்புக்கை Login செய்வதற்கு, UAN Portal இல் கொடுத்து Login செய்யும் Password-யை பயன்படுத்த வேண்டும்.
EPF பாஸ்புக்கை திறந்து பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. முதலில் உறுப்பினர் https://passbook.epfindia.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
2. உங்களின் UAN Number, Password மற்றும் Capcha இவற்றை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்க.
3. இப்பொழுது உங்களின் பெயர் மற்றும் UAN நம்பர் தெரிவதை காண்பீர்கள்.
4. Select Member ID என்ற இடத்தில் உங்களின் உறுப்பினர் எண்ணை தேர்வு செய்யவும்.
5. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்தால், அதன் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உறுப்பினர் எண்கள் தோன்றும்.
6. முதலாவதாக உள்ள View Passbook [New: Yearly] என்பதை கிளிக் செய்க.
7. இப்பொழுது தற்போதைய நிதியாண்டின் பாஸ்புக் பக்கம் திறக்கும். இதில் தேவையான நிதியாண்டை தேர்வு செய்து அதற்கான பாஸ்புக்கை பெறலாம்.
8. Download Passbook என்பதை கிளிக் செய்து, உங்களின் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம்.
9. நீங்கள் ஏற்கனவே பி.எப் பணத்தை Claim செய்திருந்தால், அதன் Status-யை View Claim Status என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்.
10. View Passbook [Old: Full] என்பதை அழுத்துவதால் பழைய Model பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம்.
11. இந்த வகை பாஸ்புக்கில் அனைத்து நிதியாண்டுகளுக்கான தகவல்களும் ஒரே பாஸ்புக்கில் இருக்கும்.
பாஸ்புக்கை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். உங்களின் PF Account இல் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பங்களிப்பு தொடர்ச்சியாக Update செய்யப்படும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- UAN Registration
- How to Update Date of Exit in EPF Portal
- PF Withdrawal Forms
- PF Online Transfer
- EPF Calculator
- Claim Form 10C