PF Passbook யை ஆன்லைன் மூலம் Download செய்வது எப்படி?
உங்களின் PF Account இல் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? மேலும் இதில் தொழிலாளியின் பங்களிப்பு எவ்வளவு மற்றும் முதலாளியின் பங்களிப்பு எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இவற்றை PF Passbook மூலம் தெரிந்துகொள்ளலாம். அதை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
EPF Passbook | PF E-Passbook
PF Passbook என்பது ஒரு பணியாளரின் PF கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்புகள் (Share), ஈட்டப்படும் வட்டி (Interest), திரும்பப்பெறப்படும் தொகை (Withdrawal) போன்ற பல்வேறு விவரங்களை அடங்கிய ஒரு மின்னணு பாஸ்புக் ஆகும். ஒவ்வொரு PF உறுப்பினரும் இதை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதில் பங்களிப்பு என்பது, PF இல் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒவ்வொரு தொழிலாளியின் மாத சம்பளத்தில் இருந்தும், ஒரு குறிப்பிட்ட சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு, அது தொழிலாளியின் பங்களிப்பாக (Employee Share) PF Account இல் Deposit செய்யப்படும். மேலும் அதே அளவு தொகையை முதலாளியின் தரப்பில் (Employer Share) இருந்தும் டெபாசிட் செய்யப்படும். இந்த இரண்டு பங்களிப்புகளின் கூட்டுத்தொகையே ஒரு தொழிலாளியின் மொத்த PF Balance ஆகும்.
வட்டி என்பது ஒவ்வொரு வருடமும் PF கணக்கில் உள்ள பணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி செலுத்தப்படும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடலாம். இது ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.
திரும்பபெறப்படும் தொகை (Withdrawal) என்பது, PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் செயலாகும். இது போன்ற PF பணம் பற்றிய பல்வேறு விவரங்களை PF Passbook மூலம் தெரிந்துகொள்ளலாம்.
PF Passbook யை ஆன்லைன் மூலம் Download செய்வது எப்படி?
PF உறுப்பினர்களின் தங்களின் PF Passbook மொபைல் அல்லது மடிக்கணினியில் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான செயல்முறைகள் என்ன என்பதை காணலாம்.
Step 1: உங்களின் Browser யை திறந்து அதில் EPF Passbook என்பதை Type செய்து Search செய்யவும்.
Step 2: முதலாவதாக உள்ள Member Passbook என்ற இணைய இணைப்பை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது EPF Passbook யை Sign in செய்வதற்க்கான பக்கம் திறக்கும். அதில் உங்களின் UAN Number மற்றும் Password யை உள்ளிட்டு Sign in செய்யவும்.
Step 4: இப்பொழுது உங்களின் பாஸ்புக் கணக்கின் Home page திறக்கப்படும். இதில் தொழிலாளியின் பங்களிப்பு, முதலையின் பங்களிப்பு மற்றும் மொத்த PF தொகை போன்ற விவரங்கள் இருக்கும்.
Step 5: இப்பொழுது Passbook என்பதை தேர்வு செய்யவும்.
Step 6: கிளிக் செய்த பிறகு Passbook பக்கம் திறக்கும். இதில் Select Member Id என்ற இடத்தில், நீங்கள் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய விரும்பும் PF Account யை தேர்வு செய்யவும்.
Step 7: இப்பொழுது சுட்டியை கீழே உருட்டவும். அங்கு Download as PDF என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 8: இப்போது தோன்றும் Popup திரையில் Download File என்பதை அழுத்தவும். இப்பொழுது உங்களின் PF Passbook ஆனது PDF வடிவத்தில் பதிவிறக்கம் ஆகும். அதை கிளிக் செய்து உங்களின் PF தொகையை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களின் PF Passbook யை Download செய்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.