EPF Claim FormsEPFO

How to Transfer PF Online Using UAN

UAN எண்ணை பயன்படுத்தி Online மூலமாக பழைய PF Account-ல் உள்ள பணத்தை புதிய PF Account-க்கு Transfer செய்யலாம். EPFO ஆணையமானது PF Money-யை Transfer செய்ய  எளிய வழிகளை உருவாக்கியுள்ளது.

What is UAN Number?

UAN Number என்பது EPFO ஆணையத்தால், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவ எண் (Unique Number) ஆகும். ஒவ்வொரு தொழிலாளியும் தங்களின் PF கணக்கை Online மூலமாக அணுகுவதற்கு இந்த UAN எண் பயன்படும்.

PF-ல் உள்ள பலதரப்பட்ட சேவைகளை இணையத்தில் பெறுவதற்கும் இந்த தனித்துவ அடையாள எண் தேவைப்படுகிறது. பணியாளர்களின் PF நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இதன் தரவுகளை மையப்படுத்தவும் அரசாங்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

PF Money Transfer 

பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது, அவர்களுக்கு PF கணக்கு திறக்கப்பட்டு அதில் PF பணம் செலுத்தப்படும். பணியாளர் மற்றும் முதலாளியின் சார்பில் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பு இதில் வரவு வைக்கப்படும்.

தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினால், Provident Fund-ம் அதே PF கணக்கில் செலுத்தப்படும். ஒருவேளை தொழிலாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும்போது, அந்த புதிய நிறுவனத்திலும் ஒரு புதிய PF கணக்கு திறக்கப்படும். 

தொழிலாளி ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும்போது, இரண்டு மாதங்கள் வரை வேறு எந்த நிறுவனத்திலும் சேரவில்லை என்றால் PF பணத்தை திரும்பப்பெறலாம்.

Read  PF (Provident Fund) என்றால் என்ன? | PF Meaning in Tamil

ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வேறு நிறுவனத்தில் சேர்ந்தால் அந்த PF பணத்தை Withdraw செய்ய முடியாது.

அதற்கு பதிலாக பழைய PF கணக்கில் இருந்து புதிய PF கணக்கிற்கு Money Transfer செய்துக்கொள்ளலாம். பிறகு வேலையை விட்டு வெளியேறிய பின்பு முழு பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

PF Transfer Form Online

EPF பணத்தை பழைய PF கணக்கில் இருந்து, புதிய கணக்கிற்கு Transfer செய்ய Form 13-யை விண்ணப்பிக்க வேண்டும். இதற்க்கு முன்பாக Form 13-யை, Offline-ல் நிரப்பி PF Office-ல் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது Online மூலமாக PF Transfer Form-யை விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பழைய PF கணக்கில் உள்ள பணத்தை புதிய PF கணக்கிற்கு Transfer செய்துவிடுவார்கள். 

PF Fund-யை Online-ல் Transfer செய்யும் முன் தயாராக இருக்க வேண்டிய ஆவணங்கள் 

ஆன்லைன் மூலமாக PF Transfer ஆனது சாத்தியம் என்றாலும், அதற்கு கீழ்கண்ட ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

  • உறுப்பினர் தனது UAN கணக்கை UAN Portal-லில் Activate செய்திருக்க வேண்டும். மேலும் UAN-ல் பதிவு செய்த மொபைல் எண்ணை தற்போது வைத்திருக்க வேண்டும்.
  • UAN கணக்கில் ஆதார் எண்ணை பதிவு செய்து அதனை Verify செய்திருக்க வேண்டும்.
  • முந்தைய PF கணக்கில் Date of Joining மற்றும் Resignation Date போன்ற தகவல்களை Update செய்திருக்க வேண்டும்.
  • ஒரு ஊழியரின் முந்தைய மற்றும் தற்போதைய PF Account Number-யை EPFO தரவுத்தளத்தில் உள்ளிடப்பட வேண்டும்.
  • தனிப்பட்ட தகவல்கள் மற்றும் PF கணக்கில் உள்ள தகவல்கள் இவை இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
Read  EPFO : How to Claim Form 31 in Online - PF Advance

How to Transfer PF Online Using UAN

ஆன்லைன் வழியாக EPF Transfer செய்வதால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் தேவையில்லாத அலைச்சலும் இருக்காது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் அல்லது கணினியின் மூலம் PF Transfer Form-யை Apply செய்யலாம்.

கீழ்கண்ட படிகளின் மூலம் PF பணத்தை Online மூலம் Transfer செய்யலாம். 

Step 1: உறுப்பினர் EPFO -ன் (Employee Provident Fund Organisation) UAN Portal-லில் தன்னுடைய Username மற்றும் Password-யை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.

pf money transfer Step (1)

Step 2: UAN Account-யை Login செய்தவுடன் Online Services > One Member – One EPF Account (Transfer Request) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

pf money transfer Step (2)

Step 3: Personal Information மற்றும் Present PF Account Details போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

pf money transfer Step (3)

Step 4: பிறகு Previous Employer என்பதை தேர்வு செய்து, அதற்க்கு கீழே Member ID அல்லது UAN Number-யை Enter செய்து Get Details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

pf money transfer Step (4)

Step 5: இப்பொழுது நீங்கள் வேலை செய்த நிறுவனங்களின் பெயர்கள் வரும். அதில் முந்தைய நிறுவனத்தை ( Previous Company ) தேர்வு செய்யவும்.

pf money transfer Step (5)

Step 6: தேர்வு செய்த பிறகு Authenticate OTP & Submit என்ற பகுதியில் உள்ள Get OTP என்பதை கிளிக் செய்யவும். தற்போது UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit என்பதை கொடுக்கவும்.

Read  How to Update Date of Exit on Employees Online: EPF Portal

pf money transfer Step (6)

தற்போது Form 13 ஆனது வெற்றிகரமாக Apply செய்யப்பட்டுவிட்டது. சராசரியாக ஒரு மாதத்திற்குள் உங்களின் EPF பணமானது Transfer செய்யப்படும். 

How to Check EPF Form 13 Claim Status

Step 1: UAN Portal-ல் Login செய்து Online Services > Track Claim Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

Step 2: தற்போது Transfer Claim Status என்பதின் கீழ் EPF Form 13-ன்  Claim Status-யை அறியலாம். மேலும் Printable Form 13 என்னும் இடத்தில் Apply செய்த Form-யை Download செய்து கொள்ளலாம்.

pf money transfer Step (8)

EPF Transfer Benefits 

 PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு பதிலாக, அதை Transfer செய்துகொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • EPFO ஆனது உங்களின் EPF பணத்திற்கு கூட்டு வட்டியினை வழங்குகிறது. எனவே பணத்தை திரும்ப பெறாமல் Transfer செய்து கொள்வதால் வட்டியினை தொடர்ந்து பெற முடியும்.
  • உறுப்பினரின் சேவைக்காலம் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் இருப்பின், அவர் 58 வயதில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். நீங்கள் EPS திட்டத்தில் உள்ள பணத்தை திரும்ப பெற்றால், உங்களின் சேவையை இழக்க நேரிடும்.
  • உங்களின் சேவை 5 வருடங்களுக்கும் குறைவாக இருக்கும்போது, பணத்தை திரும்ப பெற்றால் TDS பிடித்தம் செய்வார்கள். சேவையானது 5 வருடங்களுக்கும் மேலாக இருந்து, பணத்தை திரும்ப பெறும்போது வரிவிலக்கை பெற தகுதியுடையவராவீர்கள்.
  • EPF பணத்தை நீண்ட காலத்திற்கு பிறகு திரும்ப பெறும்போது, ஒரு பெரும் தொகையாக கிடைக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள் 

  1. How to Solve Name, DOB, Gender Mismatch & Authentication in EPF Portal
  2. EPF Calculator – Employee Provident Fund Balance-யை கணக்கிடுதல்
  3. EPF Form 31: Details & Instructions on PF Advance 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest