What is UAN Account & How to Check PF Balance
நிறுவனங்களில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு தங்களுடைய துல்லியமான மாத சம்பளம் எவ்வளவு என்று தெரியாமல் இருக்கும். தங்களுடைய மாத சம்பளத்தில் பிடித்தம் போக, கையில் இவ்வளவு கிடைக்கும் என்று தான் சொல்வார்கள். சம்பளத்தில் இருந்து எதற்காக பிடித்தம் செய்கிறார்கள், எவ்வளவு தொகை பிடித்தம் செய்கிறார்கள் என்று தெரிவதில்லை.
அனைத்து தொழிலாளர்களும் வருங்கால வைப்பு நிதியை (Provident Fund) பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது பிற்காலத்தில் தொழிலாளர்களுக்கு மிகுந்த நன்மையை தரக்கூடியது.
முதலில் PF என்றால் என்ன என்பதை பற்றி காண்போம்.
PF (Provident Fund) என்றால் என்ன?
மாத சம்பளம் பெரும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் PF என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட EPFO (Employees’ Provident Fund Organization) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமம் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன்படுகிறது.
PF திட்டத்தை பற்றிய அடிப்படை தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
சம்பளத்தில் எவ்வளவு PF தொகை பிடித்தம் செய்கிறார்கள் ?
அனைத்து தொழிலாளர்களும் ஒரே விதமான சம்பளத்தை பெறுவதில்லை. சிலர் அதிகமான சம்பளத்தையும், சிலர் குறைவான சம்பளத்தையும் பெறுவார்கள். அவர்கள் பெரும் சம்பளத்தில் 12% சதவீதத்தை PF தொகையாக பிடித்தம் செய்வார்கள். அதே அளவு 12% தொகையை உங்கள் நிறுவனத்தின் (Employer) சார்பிலும் PF கணக்கில் செலுத்தப்படும்.
நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33% பென்ஷன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த தொகைகளை சேர்த்து வருங்கால வைப்பு ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். மேலும் ESI என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு தொழிலாளர் சார்பில் 1% (20.02.2019 அன்று 1.75% லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டது), நிறுவனம் சார்பில் 4% (20.02.2019 அன்று 4.75% லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டது) செலுத்த வேண்டும்.
EDLI என்ற Insurance திட்டத்திற்கு நிறுவனத்தின் சார்பிலேயே 0.50 சதவீதம் தொகையை செலுத்துவார்கள். இதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தில் எந்த ஒரு தொகையையும் பிடித்தம் செய்யமாட்டார்கள்.
What is UAN Account Number
PF கணக்கை ஆன்லைன் மூலம் நிர்வகிக்க கொண்டுவரப்பட்டது தான் UAN என்ற Universal Account Number ஆகும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு UAN எண் வழங்கப்படும். இந்த எண் மூலம் தங்களுடைய PF தொடர்புடைய அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் பெறலாம்.
நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அடிக்கடி வேலை மாறும்போது, PF கணக்கை பற்றி நினைப்பதில்லை. இதனால் பல கோடி பணம் கேட்பாரற்று கிடக்கிறது.
இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு UAN எண் பயன்படுகிறது. நீங்கள் வேலை மாறியபின் புதிய நிறுவனத்தில் சேரும்போது, அங்கு உங்களின் UAN எண்ணை கொடுக்க வேண்டும். இதனால் ஒரே UAN Account இல் ஒன்றுக்கும் மேற்பட்ட PF கணக்குகள் இருக்கும்.
ஒரு தொழிலாளிக்கு ஒரே UAN எண் தான் வழங்கப்படும். உங்களுக்கு எத்தனை PF கணக்குகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே UAN எண்ணில் இணைக்கப்படும்.
PF Account இல் உள்ள Balance-யை Check செய்வது எப்படி?
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு தொழிலாளி தன்னுடைய PF Account இல் உள்ள Balance-யை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்பொழுது இணையம் வந்த பிறகு அனைத்துமே எளிதாகிவிட்டது. UAN என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு, PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் நம்முடைய PF கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அதற்க்கு வட்டி எவ்வளவு, பழைய PF கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது போன்றவற்றையும் பார்க்கலாம்.
EPFO இணையதளத்தில் உங்களின் முழு PF Passbook-யையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இணையதளம் மட்டும் இல்லாமல் இதை நிர்வகிக்க மொபைல் செயலிலும் உள்ளது. Google Play store-ல் UMANG என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியில் பல்வேறு அரசாங்க சேவைகள் இருக்கும். EPFO என்பதை தேர்வு செய்து, தங்களின் PF Balance யை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் PF-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு Missed call கொடுத்தால், அந்த மொபைல் எண்ணிற்கு PF Balance பற்றிய SMS வரும்.
PF Withdrawal Online Facility
உங்களின் PF தொகையை எடுப்பதற்கான வசதிகள் Online இல் உள்ளன. எனவே ஸ்மார்ட் போன் அல்லது கணினியின் மூலம் PF Withdrawal செய்ய முடியும்.
இருப்பினும், முடிந்தவரை அதை எடுக்காமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில், தங்கள் ஒய்வு பெரும் காலத்திற்கு பணம் சேமிப்பது என்பது கடினமான ஒன்றாகும். மேலும் மற்ற முதலீடுகளில் முதலீடு செய்வதை விட, PF முதலீட்டில் வட்டி அதிகமாக இருக்கும். எனவே இதிலிருந்து பணம் எடுக்காமல் இருப்பது உங்களுக்கு நன்மையை பயக்கும்.
நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை Claim செய்வதற்கு, உங்களின் UAN கணக்கை Open செய்து அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களின் விண்ணப்பமானது முதலில் நீங்கள் வேலை செய்யும்/ செய்த நிறுவனத்திற்கு போகும். அங்கு அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு PF அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். விண்ணப்பித்த பின் 15 நாட்களுக்குள் உங்களின் பணம் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் முன் உங்களின் UAN Account இல் ஆதார் எண் மற்றும் Bank Account Number போன்ற KYC தகவல்களை Update செய்ய வேண்டும்.
இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.