How to Activate UAN Number Online: Full Guide in Tamil
தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்பொழுது தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியும் இணைந்துள்ளது. இதன் எதிரொலியாக தொழிலாளர்களின் அனைத்து PF கணக்குகளும் தற்போது Online மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதக்கணக்கில் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் தற்போது சில நாட்களில் முடிந்துவிடுகிறது.
தொழிலாளர்கள் தங்களின் PF கணக்குகளை ஆன்லைனில் இயக்குவதற்கு முதலில் UAN Number யை Activate செய்வது முக்கியமாகும். இந்த UAN என்றால் என்ன? மற்றும் அதை Online இல் எவ்வாறு Activation செய்வது போன்றவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
What is UAN Number?
UAN (Universal Account Number) என்பது ஒவ்வொரு தொழிலாளிக்கும் EPFO ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ எண்ணாகும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியான UAN எண்கள் வழங்கப்படும். இதன் மூலம் தொழிலாளர்கள் அவர்களின் PF கணக்குகளை ஆன்லைன் மூலம் நிர்வகிக்க முடியும்.
இந்த ஆன்லைன் வசதியின் மூலம் பணியாளர்கள் தங்களின் PF கணக்கில், Bank Account எண்ணை மாற்றுதல், PAN Card யை Update செய்தல், Aadhaar எண்ணை லிங்க் செய்தல், PF Passbook யை Download செய்தல், பழைய PF கணக்கில் இருக்கும் பணத்தை புதிய PF கணக்கிற்கு Transfer செய்தல் மற்றும் Claim செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் ஆன்லைன் மூலமாக செய்ய முடியும்.
ஒரு தொழிலாளி எத்தனை PF கணக்குகளை வைத்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே UAN Account இல் நிர்வகிக்கலாம்.
How to Activate UAN Number in Online
நீங்கள் மேற்கண்ட EPF வசதிகளை பெறுவதற்கு முதலில் UAN நம்பரை Activate செய்ய வேண்டும்.
பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி உங்களின் UAN நம்பரை Activate செய்துகொள்ளலாம்.
Step 1: முதலில் நீங்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற UAN Portal யை அணுக வேண்டும்.
Step 2: தற்போது Login பக்கம் திறக்கும். அதில் Activate UAN என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: பின்வரும் அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.
(i) உங்களின் UAN Number, PF Member ID, Aadhaar Number மற்றும் PAN Number இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நிரப்ப வேண்டும்.
அனைவரிடமும் நிச்சயமாக PF Account Number இருக்கும். எனவே PF Member ID யை தேர்வு செய்வதே சிறந்ததாகும்.
(ii) Name என்ற இடத்தில் நீங்கள் உங்களின் பி.எப் கணக்கிற்கு எப்படி பெயர் கொடுத்தார்களோ அதே போல் இங்கே Enter செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக: நீங்கள் S Sivakumar என்று கொடுத்திருந்தால் இங்கேயும் S Sivakumar என்றே கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவல்கள் 100% சதவீதம் பொருந்தினால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
(iii) Date of Birth என்ற இடத்தில் உங்களின் பிறந்த தேதியை Type செய்ய வேண்டும்.
(iv) Mobile Number என்ற இடத்தில் நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஏதாவது ஒரு மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் Email id யையும் கொடுக்கலாம்.
(v) அதில் உள்ள Captcha வை Type செய்க.
Step 4: பிறகு Get Authorization Pin என்ற பட்டனை கிளிக் செய்க.
Step 5: தற்போது நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், அவை அனைத்தும் திரையில் தெரியும். மேலும் உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும்.
Step 6: உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை உள்ளிட்டு Validate OTP and Activate UAN என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இப்பொழுது உங்களின் UAN வெற்றிகரமாக ஆக்டிவேட் செய்யப்படும். மேலும் Login செய்வதற்கான UAN Number மற்றும் Password ஆனது மொபைல் எண்ணிற்கு SMS மூலமாக அனுப்பப்படும்.
How to Login UAN Account
Step 1: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: உங்களுக்கு அனுப்பப்பட்ட SMS இல் உள்ள UAN மற்றும் Password யை Enter செய்து Sign in என்பதை கிளிக் செய்க.
Step 3: இப்பொழுது உங்களின் PF கணக்கு திறக்கப்படும்.
Step 4: இப்பொழுது உங்களுக்கு தேவையான சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.
How to Change UAN Password
Step 1: உங்களின் PF கணக்கை Login செய்யவும்.
Step 2: Account > Change Password என்பதை கிளிக் செய்க.
Step 3: இப்பொழுது உங்களின் OLD Password யை Enter செய்யவும்.
Step 4: பிறகு புதிய Password யை உள்ளிட்டு Update என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது உங்களின் UAN Password வெற்றிகரமாக Change செய்யப்படும்.
முடிவுரை
இந்த பதிவில் பணியாளர்களின் UAN கணக்கை எப்படி activate செய்வது மற்றும் Login செய்து Password யை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் எங்களின் இணையதளத்தின் பயனுள்ள புதிய பதிவுகளின் அறிவிப்புகளை பெறுவதற்கு, எங்களின் Facebook மற்றும் Instagram பக்கங்களை Follow செய்யவும்.
FAQ
UAN Number யை ஆன்லைன் மூலம் தான் Activate செய்ய முடியுமா?
ஆம். UAN யை ஆன்லைன் மூலம் மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும்.
UAN Activate செய்வதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. இலவசமாக Activate செய்யலாம்.
PF உறுப்பினரே UAN Number யை Activate செய்துகொள்ள முடியுமா?
கண்டிப்பாக முடியும். யார் வேண்டுமானாலும் Activate செய்யலாம்.
எனக்கு UAN எண்ணை Activate செய்ய தெரியவில்லை. நான் என்ன செய்வது?
உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நெட் சென்டருக்கு சென்று Activate செய்யுங்கள்.
Sir..என்னுடைய UAN number Deactivate ஆகிவிட்டது. ஏனெனில் PF account open பண்ண பிறகு, சமீபத்தில் என்னுடைய ஆதார் திருத்தம் செய்துவிட்டேன்.. இப்போது என்னால் UAN number Activate செய்ய முடியவில்லை. இப்போது எப்படி மீண்டும் Activate செய்வது…
உங்களின் PF அலுவலகத்திற்கு சென்று ஆதார் கார்டில் இருப்பதை போன்று UAN கணக்கில் திருத்தம் செய்யவும்