UAN and Aadhaar If you do not link PF Amount will Not Credited

பணியாளர்கள் தங்களின் UAN Account இல் Aadhaar Number யை Link செய்யாவிட்டால், ஜூன் மாதத்திலிருந்து PF பங்களிப்பை பெற முடியாது. இதை பற்றிய தகவல்களை இந்த இடுகையில் காணலாம்.

UAN Number யை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கு தங்களின் PF கணக்கை அணுகுவது மிகவும் எளிதாகிவிட்டது.

PF தொடர்புடைய அனைத்து சேவைகளும் படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர்கள் பி.எப் பணத்தை திரும்பப்பெறுதல்,  கணக்கில் அப்டேட் செய்தல் போன்ற சேவைகளை பெறுவதற்கு எங்கும் அலைய வேண்டிய தேவையில்லை.

இதற்க்கு முன்பு வரைக்கும் PF பணத்தை Withdrawal செய்ய, பி.எப் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் பி.எப் கணக்கில் பங்களிப்பை பெறுவதற்கும், ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும் என்று EPFO அறிவித்துள்ளது.

UAN கணக்குடன் Aadhaar யை Link செய்தல்

தற்போது சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142 ஆவது பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின் படி நிறுவனங்களின் ECR முறையில், Aadhaar எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் UAN கணக்கிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

ECR என்பது Electronic Challan cum Return ஆகும். இந்த ECR யை ஓவ்வொரு மாதமும் முதலாளியால் PF Office க்கு அனுப்பப்படும். இந்த ECR ஆனது பணியாளர்களின் UAN Number, மாத சம்பளம், PF பங்களிப்பு போன்ற விவரங்களை கொண்டிருக்கும். 

ஜூன் 1 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத UAN கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று EPFO ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே PF கணக்கை வைத்திருக்கும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

ஜூலை 1 க்கு பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத அனைத்து UAN கணக்குகளிலும் PF பங்களிப்பு செலுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போது இணைக்கிறார்களோ அப்போது தான் PF பங்களிப்பை செலுத்துவார்கள்.

How to Link UAN Account With Aadhaar

நீங்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் ஆதார் எண்ணை Link செய்துவிடலாம்.

Read  How to Claim Form -10C | PF Pension Withdrawal in Tamil

UAN மற்றும் Aadhaar யை Link செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன.

மேலும் படிக்க – EPFO: UAN Portal இல் UAN Activation, KYC தகவல்களை Update செய்வது எப்படி?

வழிமுறை 1: UAN கணக்கை திறந்து Link செய்தல்

Step 1: உங்களின் UAN கணக்கை Login செய்யவும்.

Login UAN Account

Step 2: Manage என்ற Menu Bar இல் KYC என்பதை கிளிக் செய்யவும்.

Select Manage & KYC

Step 3: Aadhaar என்பதை கிளிக் செய்து ஆதார் எண்ணை Type செய்யவும். பிறகு Save என்பதை கிளிக் செய்க.

Enter Aadhaar Number For Link UAN

Step 4: இப்பொழுது உங்களின் ஆதார் நம்பர் வெற்றிகரமாக Save செய்யப்படும். பிறகு உங்களின் முதலாளி Approve செய்த பிறகு UAN கணக்குடன் Link செய்யப்படும்.

வழிமுறை 2: UAN கணக்கு இல்லாமல் Link செய்தல் 

Step 1: நீங்கள் முதலில் https://iwu.epfindia.gov.in/eKYC/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Link UAN Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.

Read  How to Solve Name,DOB,Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி

Click Link UAN Aadhaar - EKYC-Portal

Step 3: இந்த பக்கத்தில் UAN நம்பரை Type செய்தவுடன் அதனுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பர் தானாகவே வந்துவிடும். 

இப்போது Generate OTP என்பதை கிளிக் செய்தவுடன் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து அதற்கு கீழே உள்ள ஆதார் நம்பரை Type செய்யவும்.

Enter UAN and Aadhaar Number

கடைசியாக உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: Proceed For Verification என்ற பட்டனை கிளிக் செய்க.

Click Proceed for Verification

Step 5: Check Box யை டிக் செய்து Generate OTP என்பதை அழுத்தவும்.

Generate OTP and Submit

Step 6: இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit செய்தால் UAN எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிடும்.

இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி EPF உடன் Aadhaar யை லிங்க் செய்யலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *