UAN Portal

PF கணக்கில் UAN Activation, KYC Update செய்வது எப்படி?

உங்களின் PF கணக்கில் ஆன்லைன் மூலமாக எவ்வாறு UAN Activation மற்றும் KYC தகவல்களை Update செய்வது என்பது பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

PF செயல்முறைகள் ஆன்லைனுக்கு கொண்டு வந்தவுடன், வருங்கால வைப்பு நிதியுடன் தொடர்புடைய அனைத்து செயல்முறைகளும் எளிமையாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் மாறிவிட்டன. PFல் உள்ள அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலமாக பெறவும், KYC Update செய்யவும் முடியும். அதற்க்கான வசதிகள் EPFO ஆணையம் வழங்கியுள்ளது.


What is UAN Number 

UAN (Universal Account Number) என்பது 12 இலக்க எண்களை கொண்ட ஒரு தனித்துவ நம்பர் ஆகும்.  EPFO இல் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு UAN நம்பர் கொடுக்கப்படும். அதை பயன்படுத்தி தொழிலாளர்கள் தங்களின் PF கணக்கில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலம் பெறலாம்.

இந்த UAN Number என்ற தனித்துவ எண்ணானது 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தொழிலாளியின் அனைத்து PF கணக்குகளும் இந்த ஒரே UAN கணக்கில் இணைக்கப்படும். இதன் மூலம் ஒரு பணியாளர் தன்னுடைய பழைய PF கணக்கின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெற முடியும்.

மேலும் உங்களின் PF Account இல் ஆன்லைன் மூலம் மொபைல் நம்பர், மின்னஞ்சல் போன்றவற்றை மாற்றவும் மற்றும் PF Withdrawal செய்யவும்  முடியும்.

How to Activate UAN Number Online  

நீங்கள் PF கணக்கின் ஆன்லைன் சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் UAN எண்ணை Activate செய்ய வேண்டும். பெரும்பாலும் இது அவரவர் நிறுவனங்களே Activate செய்துவிடுவார்கள். ஒருவேளை உங்கள் UAN Activate செய்யவில்லை என்றால் நீங்களே ஆன்லைன் மூலம் செய்யலாம். 

Read  How to Add / Change Nomination in PF Account Online

நீங்கள் UAN Activate செய்வதற்கு முன்பு பின்வரும் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

  • நீங்கள் Enter செய்யும் UAN, Aadhaar Number, Name, Date of Birth போன்றவை EPFO பதிவுகளில் இருப்பதை போன்று இருக்க வேண்டும்.
  • ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • உறுப்பினரின் ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி ஆகியவை ஆதாரில் உள்ள விவரங்களுடன் பொருந்த வேண்டும்.

பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி உங்களின் UAN எண்ணை Activate செய்யலாம்.

Step 1: முதலில் UAN இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface  என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.   

Step 2: அதில் Activate UAN என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

How to Activate UAN Account

Step 3: இந்த பக்கத்தில் UAN அல்லது Member Id ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதற்கான எண்ணை உள்ளிட வேண்டும். 

பிறகு அதற்கு கீழே உள்ள Aadhaar Number, Name, Date of Birth, Mobile Number ஆகியவற்றை Enter செய்து Get Authorization Pin என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

UAN Number Activation Process

Step 4: இப்பொழுது நீங்கள் PF இல் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும்.

அந்த OTP எண்ணை Enter செய்த பிறகு Validate OTP and Activate UAN என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

EPFO Activate UAN Tamil (3)

Step 5: இப்போது UAN எண் Activate ஆகிவிடும். ஒருவேளை உங்களின் UAN ஏற்கனவே Activate செய்யப்பட்டு இருந்தால், UAN is already activated என்ற செய்தி வரும்.

Already Activate UAN Number

How to Know UAN Number

சில தொழிலாளர்களுக்கு அவர்களின் UAN Number தெரியாமல் இருக்கலாம்.  அவ்வாறு தெரியாமல் இருந்தால் கவலை வேண்டாம்.  ஏனெனில் UAN நம்பரை தெரிந்துகொள்ளும் வசதியை UAN Portal வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் UAN எண்ணை எப்படி தெரிந்துகொள்வது என்பதை பற்றி காணலாம்.

Read  How to Activate UAN Number Online: Full Guide in Tamil

தொழிலாளர்கள் மூன்று  வழிமுறைகளில்  தங்களின் UAN எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

1. Know UAN Number Through Online (UAN Portal)

Step 1: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface  என்ற UAN Portal இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.  

Step 2: அதில் Know your UAN என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Know Your UAN Number

Step 3: UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட Mobile Number யை உள்ளிட்டு Request OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

OTP For UAN Number

Step 4: கிளிக் செய்த பிறகு நீங்கள் ஏற்கனவே PF-ல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP-யை இதில் Enter செய்தவுடன் Validate OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

How to Activate UAN Account

Step 5: இப்பொழுது உங்களின் Name, Date of Birth மற்றும் Aadhaar Number ஆகியவற்றை உள்ளிட்டு Show My UAN என்பதை அழுத்தவும்.

Show UAN Number

Step 6: தற்போது உங்களின் UAN Number தெரிவதை காண்பீர்கள்.

Get UAN Number Online

2. Know UAN Number Through Mobile Number (Missed Call Service)

Step 1: PF-ல் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 011 229 01 406 என்ற எண்ணிற்கு Miss call கொடுக்க வேண்டும்.

Step 2: நீங்கள் மேற்கண்ட எண்ணிற்கு Dial செய்தவுடன், சிறிதுநேரத்தில் உங்களின் Call அதுவாகவே துண்டித்துக்கொள்ளும்.

Step 3: இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு SMS வரும். அதில் உங்களின் UAN Number, Name, Date of Birth, Total PF Balance போன்ற தகவல்கள் இருக்கும்.

UAN எண்ணை எப்படி தெரிந்துகொள்வது (5)

3. Know UAN Number Through Company 

நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்திடம் உங்களின் அனைத்து PF தகவல்களையும் வைத்திருப்பார்கள். எனவே நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் சென்று UAN எண்ணை பெறலாம்.

How to Create (Reset) UAN Password

உங்களின் UAN எண்ணை தெரிந்துகொண்டாலும், அதை Sign in செய்வதற்கு Password தேவைப்படுகிறது. ஒருவேளை Password யை நீங்கள் மறந்துவிட்டால் அதை Reset செய்துகொள்ளலாம்.

Read  How to Solve Name,DOB,Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி

பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி புதிய Password-யை உருவாக்கலாம்.

Step 1: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface  என்ற UAN Portal இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

Step 2: அதில் Forgot Password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Create (Reset) UAN Password (1)

Step 3: உங்களின் UAN எண்ணை Enter செய்து, Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Create (Reset) UAN Password (2)

Step 4: ஏற்கனவே PF-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருந்தால் Yes என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Create (Reset) UAN Password (3)

 

Step 5: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை Enter செய்தவுடன், Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Create (Reset) UAN Password (3)

 

Step 6: இந்த பக்கத்தில் புதிய Password-யை Set செய்யும் தேர்வு வரும். அதில் உங்களுக்கு வேண்டியவாறு Password-யை Set செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களின் புதிய Password Update ஆகிவிடும்.

Create (Reset) UAN Password (3)

 

How to Update KYC in PF Account 

UAN Account-ல் KYC தகவல்களை எப்படி Update செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

Step 1: முதலில் உங்களின் UAN Account-யை Sign in செய்ய வேண்டும்.

UAN KYC Update

Step 2: Sign in செய்த பிறகு அதில் Manage என்பதில் உள்ள KYC என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

UAN KYC Update

Step 3: இப்போது நீங்கள் Update செய்ய நினைக்கும் தேர்வுகளை டிக் செய்து, அவற்றின் தகவல்களை நிரப்ப வேண்டும்.

UAN KYC Update

Step 4: நிரப்பிய பிறகு Save என்பதை கிளிக் செய்தால் Save ஆகிவிடும்.

நீங்கள் Save செய்த பின் அந்த தகவல்களானது, KYC Pending for Approval  என்ற இடத்திற்கு வந்துவிடும்.

சில நாட்களுக்கு பிறகு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அவற்றை சரிபார்த்து Approve செய்து விடுவார்கள்.

UAN KYC Update

Step 5: அவர்கள் Approve செய்த பின்னர், உங்கள் KYC தகவல்கள் Digitally Approved KYC என்ற இடத்திற்கு மாறிவிடும். 

மேற்கண்ட செயல்முறைகளை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும், உங்களின் KYC தகவல்களை புதுப்பித்து கொள்ளலாம்.

முடிவுரை 

இன்று நீங்கள் PF பற்றிய ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். அதாவது UAN யை Activate செய்வது, Password யை மீட்டெடுப்பது மற்றும் UAN எண்ணை தெரிந்துகொள்வது போன்ற விவரங்களை அறிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole