EPFO

How to Update Date of Exit on Employees Online: EPF Portal

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, பணியாளர்களின் EPFO Portal-ல் Date of Exit தேதியை Update செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இதனால் EPF உறுப்பினர்கள் தங்களின் வேலையை மாற்றிய பின்பு வெளியேறும் தேதியை அவர்களே Update செய்யலாம். இதற்கான செயல்முறையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

முந்தைய காலங்களில் ஒரு தொழிலாளர் Date of Exit-யை Update செய்ய முதலாளிகளை (Employer) சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஏனெனில் வெளியேறும் தேதியை Online-ல் புதுப்பிக்கும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

ஒவ்வொரு EPF உறுப்பினருக்கும் Universal Account Number (UAN) என்ற கணக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த UAN கணக்கின் மூலம் தொழிலாளர்கள் தங்களின் PF குறித்த விவரங்களை Online-ல் பார்வையிடலாம்.

தற்போது UAN கணக்கில் Mark Exit என்ற Option வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி முதலாளி மற்றும் EPFO-வின் உதவி இல்லாமல் Date of Exit-யை Update செய்யலாம்.

EPF Date of Exit – Terms and conditions

நீங்கள் வெளியேறும் தேதியை புதுப்பிப்பதற்கு முன்பாக அதன் விதிமுறை மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும்.

Read  How to Activate UAN Number Online: Full Guide in Tamil

விதிமுறை மற்றும் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • உங்களின் வெளியேறும் தேதியானது கடைசியாக பெறப்பட்ட பங்களிப்பின் (Contribution) மாதமாக இருக்கும். ஒருவேளை முதலாளி பங்களிப்பை செலுத்த தவறியிருந்தால், நீங்கள் வெளியேறும் தேதி பிற்கால தேதியாக இருக்கும்போது, முதலாளியிடம் சென்று தான் வெளியேறும் தேதியை புதுப்பிக்க வேண்டும்.
  • நீங்கள் தவறான தேதியை உள்ளிட்டால் அதை திருத்த முடியாது. தவறாக உள்ளிட்ட தேதியை திருத்த வேண்டுமென்றால், முதலாளியின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் EPFO-ன் சம்பந்தப்பட்ட Field Office-ன் மூலமாக மட்டுமே திருத்த முடியும். இருப்பினும் வெளியேறும் தேதியை Settlement செய்யப்பட்ட பிறகு திருத்த முடியாது.
  • நீங்கள் Date of Exit-யை உள்ளிட்டு பணத்தை Withdrawal செய்திருந்தால், திட்டத்தின் கீழ் சேவைகளின் நீளம் குறைந்துவிடும். மேலும் அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளில் Pension மற்றும் Advance-க்கான எந்தஒரு தகுதிக்கும் சேவை நீளம் புதிதாக தொடங்கும்.

How to Update Date of Exit on EPFO Portal

பின்வரும் செயல்முறைகளின் மூலம் தொழிலாளர்களின் PF கணக்கில் வெளியேறும் தேதியை புதுப்பிக்கலாம்.

Step 1: முதலில் unifiedportal-mem.epfindia.gov.in என்ற Portal-யை அணுக வேண்டும்.

Step 2: உங்களின் UAN நம்பர் மற்றும் Password-யை உள்ளிட்டு Sign In செய்ய வேண்டும்.

Read  How to Claim Form -19: Final PF Settlement in Tamil

SIgn in - Epf Date of Exit

Step 3: இப்பொழுது UAN கணக்கு திறக்கும். அதில் Manage என்ற Menu-வில் உள்ள MARK EXIT என்பதை கிளிக் செய்க.

Select Manage & Mark Exit

Step 4: Select Employment என்ற இடத்தில் நீங்கள் Date of Exit-யை Update செய்ய நினைக்கும் நிறுவனத்தின் Member Id-யை தேர்வு செய்க.

Select Employment

Step 5: உங்களின் Date of Exit-யை இரண்டு இடங்களில் குறிக்க வேண்டும். நீங்கள் தேதியை குறிக்கும் இடத்தில், PF கணக்கில் கடைசியாக செலுத்தப்பட்ட பங்களிப்பின் மாதம் மட்டும் திறக்கும். அதில் அந்த மாதத்தின் கடைசி தேதியை குறிக்க வேண்டும்.

Select & Reselect Date

Step 6: Select Reason of Exit என்ற இடத்தில் நீங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Step 7: சாதாரணமாக வெளியேறும்போது Cessation (Short Service) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Select Reason of exit & OTP Request

Step 8: Request OTP என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

Step 9: I Have read the below points carefully என்ற CheckBox-யை டிக் செய்க.

Step 10: பிறகு கடைசியாக உள்ள Submit என்பதை கிளிக் செய்தல் உங்களின் Date of Exit தேதி Update ஆகிவிடும்.

Read  EPF Passbook: How to Login & Download UAN Passbook in Online

Enter OTP & Submit - EPF Date of Exit

 

EPF-ல் Date of Exit-யை Update செய்யும்போது வரும் பிழைகள் (Errors)

நீங்கள் EPF-ல் Date of Exit-யை புதுப்பிக்கும் போது ” Processing your request please wait ” என்ற செய்தி வரலாம்.

Mark Exit என்பது UAN கணக்கில் சேர்க்கப்பட்ட புதிய அம்சமாகும்.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்தும் போது இந்த மாதிரியான Error வரலாம். அதாவது சர்வர் பிசியாக இருக்கும்.

நீங்கள் சிறிது நேரம் காத்திருந்து மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும். அல்லது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் Traffic குறைவாக இருக்கும். எனவே அந்த நேரங்களிலும் முயற்சி செய்யலாம்.

 Benefits of Mark Exit 

  • இதற்க்கு முன்னர் வரைக்கும் வெளியேறும் தேதியை புதுப்பிக்க முதலியை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது பணியாளர்களே வெளியேறும் தேதியை Update செய்யலாம்.
  • தொழிலாளர்களின் வெளியேறும் தேதியை Online மூலமாகவே Update செய்யலாம்.
  • இந்த வசதி முதலாளிகளிடம் மட்டும் இருந்ததால் அவர்கள் புதுப்பிக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் EPF பணத்தை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
  • பணியாளர்கள் Date of Exit-யை செய்த உடனே பணத்தை Claim செய்யலாம்.

மேலும் படிக்க –  How to Claim Form 19 PF Final Settlement

Mark Exit என்ற வசதியை தொழிலாளர்களின் UAN Account-ல் சேர்த்தது மிகவும் பயனுள்ளதாகும். இதனால் பணியாளர்கள் தேவையில்லாத அலைச்சல்களை தவிர்கலாம். மேற்கூறிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் கருத்துக்களை Comments பிரிவில் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole