EPF Claim FormsEPFO

How to Withdraw PF Pension Amount Online in Tamil

தொழிலாளர்கள் அவர்கள் பணி புரியும் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு தங்களின் PF Amount யை Withdrawal செய்ய நினைக்கலாம். அப்படி Withdraw செய்யும் போது இரண்டு படிவங்களை (Forms) நிரப்ப வேண்டியதிருக்கும். முதலில் Final Settlemet க்கான Form யையும், இரண்டாவதாக Pension Amount யை எடுப்பதற்கான Form யையும் நிரப்ப வேண்டும். இந்த கட்டுரையில் EPS Amount அதாவது Pension Amount யை எடுப்பதற்கான முழு செயல்முறையையும் காணலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு (Employees) PF Account யை திறக்கிறது. பிறகு ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து 12% பணத்தை பிடித்து அதை PF கணக்கில் செலுத்துகிறது. மேலும் அதே அளவு 12% பணத்தை நிறுவனமும் தொழிலாளர்களின் கணக்கில் செலுத்துகிறது.

தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இது கட்டாயம் இல்லை. மற்றொரு நிறுவனத்தில் சேர்ந்த பிறகு பழைய PF கணக்கில் இருந்து புதிய PF கணக்கிற்கு பணத்தை Transfer செய்துகொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் பணத்தை எடுக்கும் எண்ணத்தில் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். மேலே கூறியபடி முழு Final PF Settlement யை எடுக்க Form 19 யையும், Pension Amount யை எடுக்க Form 10C யையும் நிரப்ப வேண்டும்.

இந்த பதிவில் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கான Form 10C யை எவ்வாறு Claim செய்து பணத்தை Withdrawal செய்வது என்பது பற்றிய முழு விவரத்தையும் காணலாம். 

Steps to Withdraw PF Pension Amount Online

PF Pension Amount யை உங்களின் கணினி அல்லது மொபைல் மூலமாகவே Withdrawal செய்ய முடியும். இதற்கான செயல்முறையை Step by Step ஆக பார்ப்போம்.

Read  EPFO : How to Claim Form 31 in Online - PF Advance

Step 1: முதலில் உங்களின் Browser இல் EPFO இன் இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

Step 2: உங்களின் UAN Number மற்றும் Password யை உள்ளிட்டு UAN Account யை Sign in செய்யவும்.

UAN Login

Step 3: இப்பொழுது உங்களின் UAN Account இன் முகப்பக்கம் திறக்கும். அதில் Online Services என்பதை கிளிக் செய்க.

Online Services PF withdrawals

Step 4: கிளிக் செய்தவுடன் முதலாவதாக இருக்கும் Claim (Form-31,19,10C&10D) என்பதை தேர்வு செய்யவும்.

Form 10C Pension claim

Step 5: Member Details பக்கத்தில் உங்களின் Bank Account Number யை Enter செய்து Verify என்ற பட்டனை அழுத்தவும். அதாவது ஏற்கனவே உங்களின் PF கணக்கில் இணைத்துள்ள வங்கிக்கணக்கு எண்ணை மட்டுமே என்டர் செய்ய வேண்டும்.

Bank Account Number Verify

Step 6: நீங்கள் என்டர் செய்த Bank Account Number சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு Popup திரை திறக்கும். அதில் Yes என்பதை அழுத்தவும்.

Read  Form 31: PF Advance பணம் எடுப்பது பற்றிய முழு தகவல்கள்

Click Yes

Step 7: பிறகு கீழே உள்ள Proceed for Online Claim என்பதை கிளிக் செய்யவும்.

Proceed for Online pf claim

Step 8: இந்த பக்கத்தில் நீங்கள் PF Form யை தேர்வு செய்ய வேண்டும். I want to apply for என்ற இடத்தில் Only Pension Withdrawal (Form- 10C) என்பதை தேர்வு செய்க.

Select form 10c pf withdrawal

Step 9: நீங்கள் படிவத்தை தேர்வு செய்தவுடன், அதற்க்கு கீழே ஆதார் அட்டையில் உள்ளது போன்று Address யை Type செய்ய வேண்டும்.

பிறகு உங்களின் Bank Account Passbook இன் முதல் பக்கத்தை போட்டோ எடுத்து Upload செய்ய வேண்டும். நீங்கள் போட்டோ எடுக்கும் போது பாஸ்புக்கில் உள்ள Account Number மற்றும் IFSC Code போன்றவை நன்கு தெரியும் படி எடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் கோரிக்கை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

Enter Address for pf claim

Step 10: அதற்க்கு கீழே இருக்கும் Check Box யை டிக் செய்தால் Get Aadhaar OTP என்ற பட்டன் தோன்றும். அந்த பட்டனை அழுத்த வேண்டும்.

Aadhaar OTP For pf form apply

Step 11: தற்போது உங்களின் ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Validate OTP and Submit Claim Form என்ற பட்டனை அழுத்தவும்.

Read  EPF Passbook: How to Login & Download UAN Passbook in Online

pf pension amount claim successfully apply

Step 12: இப்பொழுது eKYC updated and Pension Withdrawal Claim form submitted successfully on Unified Portal என்ற செய்தி வருவதை காண்பீர்கள். மேலும் Click Here என்பதை அழுத்தி நீங்கள் Apply செய்த படிவத்தை Download செய்துகொள்ளலாம்.

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் இந்த படிவம் வெறும் தகவலுக்காக மட்டுமே ஆகும். இதை உங்களின் நிறுவனத்திலோ அல்லது PF அலுவலகத்திலோ அளிக்க வேண்டிய தேவை இல்லை.

நீங்கள் Claim செய்த 20 நாட்களில் Pension Amount உங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

How to Track Pension Claim Status 

நீங்கள் பென்ஷன் பணத்திற்கு Apply செய்த பிறகு அதன் Status யை Track செய்யலாம். அதை எப்படி பார்ப்பது என்று காண்போம்.

Step 1: Online Services என்பதை அழுத்தவும்.

Step 2: மூன்றாவதாக உள்ள Track Claim Status என்பதை தேர்வு செய்யவும்.

Step 3: இப்பொழுது உங்களின் Claim Status யை காண்பீர்கள்.

முடிவுரை 

இந்த பதிவில் பென்ஷன் பணத்தை எவ்வாறு எடுப்பது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். நீங்கள் Form 19 யையும் இதே போன்று தான் Apply செய்ய வேண்டும். இரண்டு Form களையும் விண்ணப்பிக்க கிட்டத்தட்ட ஒரே செயல்முறை ஆகும். படிவத்தை தேர்வு செய்யும் இடத்தில் Form 19 என்று தேர்வு செய்ய வேண்டும்.

இந்த கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole