Gmail

How to Send Email in Gmail: மின்னஞ்சல் அனுப்புவது எப்படி

ஒரு மின்னஞ்சலை எப்படி அனுப்புவது என்பதை பற்றி தெரிந்துகொள்ள வந்துள்ளீர்களா? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஒரு மின்னஞ்சலை எவ்வாறு அனுப்புவது, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன, மின்னஞ்சலில் Image, PDF File போன்ற கோப்புகளை எவ்வாறு இணைப்பது போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

மின்னஞ்சலின் முக்கியத்துவம் 

How to send email in Tamil

Email என்பது இன்று அனைவரும் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையாகும். ஒவ்வொருவருக்கும் எப்படி மொபைல் நம்பர் முக்கியமானதோ அதே போன்று Email Account ம் முக்கியமாகும். வங்கிக்கணக்கு, தொழில்துறை, நிறுவனம் மற்றும் அரசாங்க சேவை போன்ற அனைத்து இடங்களிலும் Email ID யை கேட்கிறார்கள்.

ஏனெனில் Email ஆனது உங்களை தொடர்பு கொள்ளும் மிக எளிய வழியாகும். சில நேரங்களில் உங்களின் மொபைல் எண் வேலை செய்யவில்லை என்றால், உங்களை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் செய்தியை எப்பொழுது வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். நீங்கள் அந்த மின்னஞ்சல் செய்தியை அழிக்கும் வரை தொடர்ந்து இருக்கும்.

Read  Gmail Meaning in Tamil | ஜிமெயில் என்றால் என்ன?

இப்படி பல நன்மைகளை வழங்கும் Email Account யை ஓபன் செய்வது மிகவும் எளிதாகும்.  இலவசமாகவே மின்னஞ்சல் கணக்கை திறக்கலாம். மின்னஞ்சல் கணக்கை திறப்பது குறித்து அறிந்துகொள்ள How to Create New Gmail Account என்ற கட்டுரையை கிளிக் செய்து படிக்கவும்.

How to Send Email in Gmail

பொதுவாக Email சேவையை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் Google நிறுவனம் வழங்கும் Gmail சேவையையே அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஜிமெயில் கணக்கில் அதிகபட்சமாக 15GB வரை கோப்புகளை சேமிக்க முடியும். 

சரி இப்பொழுது மின்னஞ்சலை எவ்வாறு அனுப்புவது என்று பார்க்கலாம்.

Step 1: முதலில் உங்களின் Gmail Account யை ஓபன் செய்யவும்.

Step 2: மின்னஞ்சலை அனுப்புவதற்கு Compose என்பதை கிளிக் செய்யவும்.

Gmail Compose in Tamil

Step 3: இப்பொழுது மின்னஞ்சலை தட்டச்சு செய்வதற்கு ஒரு Pop Up திரை திறக்கும். அதில் To  என்ற இடத்தில் நீங்கள் யாருக்கு மின்னஞ்சலை அனுப்புகிறீர்களோ அவர்களின் Email ID யை Type செய்யவும். இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் Email ID களை Type செய்யலாம். 

Read  Gmail Meaning in Tamil | ஜிமெயில் என்றால் என்ன?

Subject என்ற இடத்தில் நீங்கள் எது தொடர்பாக Email அனுப்புகிறீர்களோ அதற்க்கு ஒரு தலைப்பை கொடுக்கலாம்.

அடுத்து நீங்கள் மின்னஞ்சலை Type செய்ய தொடங்கலாம் அல்லது ஏற்கனவே தயாராக வைத்துள்ள செய்தியை Copy செய்து இங்கு Past செய்யலாம்.

How to Send Email in Tamil

Step 4: உங்களுக்கு தேவையான உரையை Type செய்தவுடன், அதற்க்கு கீழே உள்ள வசதிகளை பயன்படுத்தி உரையை மெருகேற்றலாம். அதில் Font வகை, உரையை அளவை அதிகரித்தல் அல்லது குறைதல், Bold, Italy, Underline, Paragraph Align, Number and Bullet List போன்ற பல்வேறு வசதிகள் இருக்கும்.

How to Send Gmail in Tamil

Step 5: Attach Files என்பதை கிளிக் செய்து உங்களின் கோப்புகளை பதிவேற்றம் செய்யலாம். Insert link என்பதை பயன்படுத்தி Website link யை சேர்க்கலாம். மேலும் Emoji களை சேர்த்தல், Photo சேர்த்தல் போன்ற வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Add Files and Photos in Email

Step 6: நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் தயாரானவுடன் Send என்பதை கிளிக் செய்தால், உங்களின் மின்னஞ்சல் அனுப்பட்டுவிடும். அல்லது Schedule Send வசதியின் மூலம் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை அமைக்கலாம்.

Read  Gmail Meaning in Tamil | ஜிமெயில் என்றால் என்ன?

Send Email

ஒருவேளை நீங்கள் மின்னஞ்சலை தயாரிக்கும்போது பாதியிலேயே வெளியேறினால் கவலைப்பட வேண்டாம். அது Drafts இல் தானாகவே சேமிக்கப்படும். பிறகு Drafts இல் சென்று அந்த மின்னஞ்சலை தொடரலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole