அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி?
Amaippu Sara Tholilalar Nala Variyam: நீங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. தற்போது ஆன்லைன் மூலமாகவே அதை பதிவு செய்ய முடியும். இந்த கட்டுரையில் அதற்கான முழு விவரங்களையும் பார்க்கப்போகிறோம். இதை முழுமையாக படித்த பிறகு நீங்களே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் அளவுக்கு அதை பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
Table of Contents
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் என்றால் என்ன?
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் என்பது தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) நலன் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியம் ஆகும்.
இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருபவர்களுக்கு அரசாங்கத்தால் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
விபத்தால் ஏற்படும் இறப்பு (Death) அல்லது இயலாமை (Disability), மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சிக்கான கல்வி உதவி, 10,11,12 ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி, உயர் கல்விக்கான கல்வி உதவி, இயற்கை மரணத்திற்கான இறுதிச்செலவுகள், திருமணம், மகப்பேறு / கருச்சிதைவு / கர்ப்பத்தை நிறுத்துதல், ஓய்வூதியம், கண்ணாடி வாங்குவதற்கான செலவு போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அட்டையில் என்னென்ன தகவல்கள் இருக்கும்
நீங்கள் நல வாரியத்தில் Register செய்த பிறகு அதற்கான அடையாள அட்டையினை பெறுவீர்கள். இதை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே Download செய்துகொள்ளலாம்.
கட்டுமான தொழிலாளர் அட்டையில் கீழ்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
- புகைப்படம்
- பதிவு எண் (Registration Number)
- தொழிலாளியின் பெயர் (Name)
- பிறந்த தேதி (Date of Birth)
- தந்தை / கணவர் பெயர் (Father / Husband Name)
- சமூகம் (Community)
- பதிவு செய்யப்பட்ட தேதி (Date of Registration)
- புதுப்பித்தல் தேதி (Date of Renewal)
- வாரியம் (Board)
- நியமானதாரர் (Nominee)
- முகவரி (Address)
Information Table of Tholilalar Nala Vaariyam
Welfare Board | Tamil Nadu Unorganised Workers Welfare Board |
Name of Statement Government | Tamilnadu |
Service Category | New Registration For Amaippu Sara Tholilalar Nala vaariyam |
Required Documents | Employment Certificate, Identity card, Ration Card, Front Page of Bank Passbook, Aadhaar Card, Nominee Details. |
Official Website Link | https://tnuwwb.tn.gov.in/renewalhistories/login |
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
நீங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு முன்பு கீழ்கண்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருந்தால் Kattumana Tholilalar Nala Vaariyathil எளிதாக Apply செய்யலாம்.
சரி வாருங்கள் என்னென்ன ஆவணங்கள் தேவை என்று பார்ப்போம்.
1. பணிச்சான்றிதழ்
தொழிலாளி சம்மந்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர், கட்டிட தொழிலில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள், கட்டுமான தொழிலில் வேலையளிப்பவர், கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஆகியோரில் ஒருவரிடம் பணிச்சான்றிதழை பெற்று வர வேண்டும். அந்த பணிச்சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்ற வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட பணிச்சான்றிதழின் படிவம் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து Download செய்துகொள்ளலாம்.
பணிச்சான்றிதழ் படிவம் Download செய்ய கிளிக் செய்யவும்.
மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்த பிறகு ஒரு படிவம் பதிவிறக்கம் ஆகும். அந்த படிவத்தை Print எடுத்து நிரப்ப வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு அந்த படிவத்தை நிரப்ப தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள். அதற்கான செயல்முறையையும் உங்களுக்கு சொல்கிறேன்.
பணிச்சான்றிதழ் படிவத்தை எப்படி நிரப்புவது?
படிவத்தில் உங்களின் பெயர், தந்தை / கணவன் பெயர், பிறந்த தேதி, தொழிலின் தன்மை, பணி செய்யும் காலம், முகவரி, மதம், ஜாதி, உட்பிரிவு போன்றவற்றை நிரப்பவேண்டும்.
அதற்க்கு கீழே உள்ள விண்ணப்பதாரரின் உறுதிமொழி என்பதில் உங்களின் பெயரை எழுதி கீழே கையெழுத்து போட வேண்டும். பிறகு உங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை Box இல் ஒட்ட வேண்டும். நீங்கள் நிரப்ப வேண்டியது அவ்வளவு தான்.
இந்த படிவத்தை கிராம நிர்வாக அலுவலர் (VAO) அல்லது ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளவர்களில் ஒருவரிடம் எடுத்து செல்ல வேண்டும். அவர் சரிபார்த்து அந்த படிவத்தில் சீல் மற்றும் கையெழுத்தை போட்டு கொடுப்பார்.
கீழே Employement Certificate யை நிரப்பிய மாதிரி படிவம் (Sample Form) கொடுத்துள்ளேன்.
2. அடையாள சான்றிதழ்
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ் அல்லது பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றை அடையாள சான்றிதழாக பயன்படுத்தலாம்.
3. குடும்ப அட்டை
4. வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்
5. ஆதார் அட்டை
6. வாரிசாக பரிந்துரைக்கப்படும் நபரின் ஆவணம்
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் Register செய்வதற்கான செயமுறை
Amaippu Sara Tholilalar Nala Vaariyathil பதிவு செய்ய என்னென்ன தேவை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இப்பொழுது அந்த ஆவணங்களை கொண்டு ஆன்லைன் மூலம் எவ்வாறு Register செய்வது என்பதை பற்றி காண்போம்.
Step 1: முதலில் https://tnuwwb.tn.gov.in/ என்ற Tamilnadu Unorganised Workers Welfare Board என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: இப்பொழுது முகப்பக்கம் திறக்கும். அதில் புதிய விண்ணப்பப் பதிவு / New Registration என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழைக / Login என்பதை அழுத்தவும்.
Step 4: OTP Number யை பெறுவதற்கு Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: தற்போது நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP நம்பரை Enter செய்து சமர்ப்பிக்க / Submit என்ற பட்டனை அழுத்தவும்.
Step 6: இந்த பக்கத்தில் விண்ணப்பப்படிவம் திறக்கும். அதில் முதலில் இரண்டு விதமான தேர்வுகள் இருக்கும். அதில் முதலாவதாக உள்ள Your Mobile Number is Linked to the aadhaar number / தங்களின் கைபேசி எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற தேர்வை Select செய்யவும்.
Step 7: உங்களின் ஆதார் நம்பரை Enter செய்து Verify Aadhaar என்பதை கிளிக் செய்க.
Step 8: இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்க்கு OTP Number வரும். அந்த OTP Number யை உள்ளிட்டு Verify செய்யவும்.
1. Personal Details
Step 9: நல வாரியத்தின் (Welfare Board) வகையை தேர்வு செய்யவும். இதில் மூன்று விதமான நல வாரியங்கள் இருக்கும். அவற்றில் உங்களுக்கான நல வாரியத்தை தேர்வு செய்யவும்.
பிறகு வாரியத்தின் பெயரை (Board Name) தேர்வு செய்யவும்.
Step 10: உங்களின் பெயர், தந்தையின் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் Type செய்ய வேண்டும். பிறகு மொபைல் நம்பர், பாலினம், பிறந்த தேதி போன்றவற்றை சரியாக உள்ளிட வேண்டும்.
பிறகு வயதுக்கான சான்று ஆவணம் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும். குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை Upload செய்யலாம்.
Upload செய்த பிறகு View என்ற பட்டனை அழுத்தி அந்த ஆவணத்தை நீங்கள் பார்க்கலாம்.
குறிப்பு:
நீங்கள் இந்த இணையதளத்தில் Upload செய்யும் அனைத்து ஆவணங்களும் அதிகபட்சமாக 2 MB க்குள் இருக்க வேண்டும். மேலும் அந்த ஆவணங்கள் JPEG, JPG, PNG மற்றும் PDF ஆகிய வடிவங்களில் இருக்கலாம்.
Step 11: ஜாதி, மதம், திருமண நிலை போன்றவற்றை தேர்வு செய்யவும்.
நீங்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் இரண்டாவது Option யை தேர்வு செய்யவும். பிறகு உங்களின் குடும்ப அட்டையின் ஸ்மார்ட் கார்டு எண்ணை Type செய்யவும். மேலும் ரேஷன் கார்டை Upload செய்யவும்.
Step 12: கடைசியாக உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
2. Address
Step 13: Permanant Address என்ற இடத்தில் உங்களின் நிரந்தர முகவரியை Enter செய்யவும். அதாவது கதவு எண், தெரு, கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் பின்கோடு நம்பர் போன்றவற்றை நிரப்பவும்.
Step 14: அதற்க்கு கீழே உங்களின் Present Address அதாவது தற்போதைய முகவரியை Enter செய்யவும். உங்களின் நிரந்தர முகவரியும் தற்போதைய முகவரியும் ஒன்று என்றால் Same as Permanent Address என்ற Check Box யை டிக் செய்யவும்.
அப்படி Tick செய்தவுடன் நிரந்தர முகவரியில் உள்ள தகவல்கள் தற்போதைய முகவரிக்கு நகலெடுத்துக்கொள்ளும்.
இப்பொழுது Next என்ற பட்டனை அழுத்தவும்.
3. Employment Details
Step 15: நீங்கள் வேலை செய்பவரா (Employed) அல்லது சொந்த தொழில் செய்பவரா (Self Employed) என்பதை தேர்வு செய்யவும்.
Step 16: நீங்கள் எத்தனை வருடங்களாக பணி புரிந்து வருகிறீர்கள் மற்றும் வேலையின் இயல்பு போன்றவற்றை நிரப்புக. பிறகு Next என்ற பட்டனை அழுத்தவும்.
4. Bank Details
Step 17: உங்களின் Bank Account Details யை நிரப்ப வேண்டும். வங்கியின் பெயர், கிளையின் பெயர், வங்கிக்கணக்கு எண், IFSC Code, MICR Code போன்றவற்றை Enter செய்யவும்.
பிறகு உங்களின் அசல் Bank Account Passbook இன் முதல் பக்கத்தை தெளிவாக தெரியும்படி Scan செய்து Upload செய்யவும். Upload செய்த பிறகு View என்ற பட்டனை அழுத்தி நீங்கள் Upload செய்த பாஸ் புத்தகம் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும்.
கடைசியாக உள்ள Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5. Other Details
Step 18: உங்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் தகவல்களை சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவுமுறை, திருமணநிலை போன்ற விவரங்களை சேர்க்க வேண்டும்.
புதிதாக நபரை சேர்க்க வலதுபுறம் கடைசியில் உள்ள + என்ற சிகப்பு பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நபரையும் சேர்ப்பதற்கு அதை அழுத்தவும்.
பிறகு மனைவி / கணவர் வேலை செய்கிறார்களா என்பதை தேர்வு செய்க.
Step 19: Nominee Details (நியமானதாரரின் விவரம்)
நீங்கள் உங்களின் குடும்பத்தில் யாரை நியமானதாரராக நியமிக்க விரும்புகிறீர்களோ அவர்களின் பெயர், கதவு எண், முகவரி, மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு, உறவுமுறை, பிறந்த தேதி, தொகையின் சதவீதம் மற்றும் அவரின் அசல் ஆவணத்தை Upload செய்ய வேண்டும்.
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நியமனதாரர்களை நியமிக்கலாம். நீங்கள் ஒரே நியமனதாரரை நியமித்தால் தொகையின் சதவீதம் என்ற இடத்தில் 100 என்று Enter செய்ய வேண்டும்.
ஒருவேளை நீங்கள் இரண்டு Nominee களை நியமித்தால் அந்த 100% தொகையை இரண்டாக பிரித்து இருவருக்கும் அதை பங்கிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் (Unorganised Workers Welfare Board) பதிவு செய்யும் போது இரண்டு நாமினிதாரர்களை சேர்த்தால், அவர்களுக்கு 50%, 50% என்றோ அல்லது 60%, 40% போன்ற சதவீதங்களில் பங்கிடலாம்.
Step 20: உங்களின் புகைப்படம் (Photo), கையெழுத்து (Signature) போன்றவற்றை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
Step 21: பணிச்சான்று (Employment Certificate)
நீங்கள் யாரிடம் பணிச்சான்றை பெற்றீர்களோ அந்த வேலையளிப்பவர் / அதிகாரியின் வகையை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அவரின் பெயர், முகவரி போன்றவற்றை நிரப்ப வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் நீங்கள் பெற்ற பணிச்சான்றில் இருக்கும்.
உங்களுக்கு சான்றிதழ் அளித்தவர் அந்த அலுவலகத்தில் எந்த தேதியில் இருந்து பணியாற்றுகிறார் என்பதை தேர்வு செய்க.
பிறகு அசல் ஆதார் அட்டை மற்றும் அசல் பணிச்சான்றிதழை Scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Step 22: பிறகு கடைசியில் உங்கள் கணினியின் வெப் கேமரா மூலம் நேரடியாக போட்டோவை எடுக்க வேண்டியதிருக்கும். சரியாக அமர்ந்து Take Photo என்பதை கிளிக் செய்தால், உங்களை போட்டோ எடுத்து அதை பக்கத்தில் காண்பிக்கும்.
ஒருவேளை நீங்கள் எடுத்த போட்டோ சரியில்லை என்றால் மீண்டும் Take Photo என்ற பட்டனை அழுத்தி போட்டோ எடுத்துக்கொள்ளலாம்.
பிறகு கடைசியில் உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
Step 23: இப்பொழுது Preview பக்கம் திறக்கும். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து Enter செய்த அனைத்து விவரங்களும் இந்த ஒரே பக்கத்தில் இடம் பெற்றிருக்கும்.
நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். ஒருவேளை ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் அதை திருத்திக்கொள்ளலாம்.
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Declaration by the Applicant என்பதற்கு கீழே உள்ள Check Box களை டிக் செய்துகொள்ளவும்.
பிறகு Submit என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் Submit செய்தவுடன் உங்களின் மொபைல் எண்ணிற்கு SMS மூலமாக TNUWWB00000XXXXXX என்ற வடிவத்தில் Application Number வந்திருக்கும். அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் ஏனெனில் அந்த எண்ணை வைத்து தான் உங்களின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய விண்ணப்பத்தின் நிலையை (Application Status) அறிந்துகொள்ள முடியும்.
நீங்கள் இப்பொழுது வெற்றிகரமாக விண்ணப்பித்துவிட்டீர்கள். அதிகாரிகள் அதை சரிபார்த்து Approve செய்யும் வரையில் காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதாவது பிழை இருப்பின் அதை உங்களுக்கு தெரிவிப்பார்கள். அதிகாரிகள் Approve செய்தாலோ அல்லது விண்ணப்பத்தில் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டினாலோ அதை SMS மூலம் நீங்கள் பெறுவீர்கள். அந்த பிழையை நீங்கள் சரிசெய்து பிறகு மீண்டும் Submit செய்ய வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் விண்ணப்ப நிலையை எப்படி தெரிந்துகொள்வது?
நீங்கள் விண்ணப்பித்த பிறகு Amaippu Sara Tholilalar Nala Vaariyam Application Status யை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதை பற்றி பார்ப்போம். அதற்கான படிகள் பின்வருமாறு:
Step 1: https://tnuwwb.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடவும்.
Step 2: விண்ணப்பத்தின் நிலை (Application Status) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
Step 3: இதில் உங்களின் Application Number மற்றும் பதிவு செய்யும் போது கொடுத்த மொபைல் நம்பர் ஆகியவற்றை உள்ளிட்டு Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது உங்களின் Application Status தெரிவதை காண்பீர்கள்.
உங்களின் Application Number மறந்துவிட்டதா?
நீங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் Registraion செய்தவுடன் அதற்கான Aknowledgement Number அதாவது Application Number உங்களின் மொபைல் எண்ணிற்கு SMS வழியாக வந்துவிடும்.
இருப்பினும் சில காரணங்களால் விண்ணப்ப எண்ணை நீங்கள் தொலைத்துவிட்டிருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் கவலை கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த விண்ணப்ப எண்ணை உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.
அதற்க்கான செயல்முறை என்ன என்பதை பார்ப்போம்.
Step 1: Know Your Application Number / Registration என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்த மொபைல் எண்ணை Type செய்து Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 3: இப்பொழுது உங்களின் Application Number தெரிவதை காண்பீர்கள்.
முடிவுரை
இந்த கட்டுரையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் மூலமாக எவ்வாறு பதிவு செய்வது, அதற்கு தேவையான ஆவணங்கள், விண்ணப்பத்தின் நிலை போன்றவற்றை பற்றி அறிந்துகொண்டீர்கள். உங்களிடம் கேமராவுடன் கூடிய கணினி அல்லது மடிக்கணினி இருந்தால் நீங்கள் வீட்டில் இருந்தவாறு விண்ணப்பித்து கொள்ளலாம். ஒருவேளை உங்களின் கணினியில் கேமரா இல்லையென்றால், வெப் கேமராவை வாங்கி அதை கணினில் இணைத்து பயன்படுத்தலாம்.
இந்த கட்டுரையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் அதை கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.