How to Apply Digital Health ID Card Online 2023: NDHM
NDHM இணையதளத்தில் Digital Health ID Card க்கு Online மூலம் எவ்வாறு Apply செய்வது என்பதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம். மேலும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு என்றால் என்ன? அதனுடைய பயன்கள் என்ன போன்றவற்றை பற்றியும் இந்த இடுகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை 27 செப்டம்பர் 2021 அன்று வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் Digital Health ID Card முறையை அறிமுகம் செய்தார்.
இந்த ID Card யை இணையதளத்தில் ஒருசில நிமிடங்களில் Register செய்து உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்கான முழு செயல்முறையை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன். இந்த கட்டுரையின் மூலம் இந்த சுகாதார அட்டையை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
Table of Contents
What is Digital Health ID Card
Digital Health ID Card என்பது உங்களின் சுகாதார தகவல்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க NDHM ஆல் உருவாக்கிய 14 இலக்கங்களை கொண்ட ஒரு தனித்துவ எண் ஆகும். இதன் மூலம் தனிநபர்கள் எந்த ஒரு மருத்துவமனையிலும் பெரும் சிகிச்சை குறித்த விவரங்கள் இந்த Health ID கார்டில் சேமிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் சுகாதார தகவல்களை தனித்து அடையாளம் காண்பது இதன் நோக்கமாகும்.
இந்திய பிரதமர் அறிமுகர் செய்தார்
சமீபத்திய செய்திகளின் படி, இந்திய பிரதமர் 27-09-2021 இல் ஒரு சுகாதார அட்டையை வெளியிட்டார். இதற்கான அறிவிப்பு சிறப்பு நாளான சுதந்திர நாளில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிநபருக்கு ஒரு தனி சுகாதார அட்டை வழங்கப்படும். இந்த அட்டையில் அதை வைத்திருக்கும் நபரின் சுகாதார தகவல்களை கொண்டிருக்கும்.
இந்த அட்டையை விண்ணப்பிப்பதற்க்கான அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளது. அந்த அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பித்த பிறகு அவர்களுக்கான சுகாதார அட்டையை பெறுவார். நீங்கள் பதிவு செய்த பிறகு உடனடியாக Generate ஆகிவிடும். பிறகு இதை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அட்டை உருவாக்கப்பட்ட பிறகு அந்த நபரின் சுகாதார தகவல்களை அவரால் மட்டுமே அணுக முடியும். மூன்றாம் தரப்பு நபர்களோ அல்லது வேறு நபர்களோ அவரின் மருத்துவம் குறித்த தகவல்களை அணுக உரிமை இல்லை. எனவே அட்டைதாரர் மட்டுமே Digital Health ID Card 2021 இல் உள்ள மருத்துவ தகவல்களை அணுக முடியும்.
Digital Health ID Card இல் என்னென்ன தகவல்கள் இருக்கும்
சுகாதார அடையாள அட்டையில் பின்வரும் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
- உங்களின் Photo
- Health ID Number
- PHR Address
- Year of Birth
- Gender
- Mobile Number
- QR Code
சுகாதார அடையாள அட்டை (Digital Health ID) முக்கிய தகவல்கள்
அதிகாரத்தின் பெயர் | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் |
மிஷன் பெயர் | National Digital Health Mission(NDHM) |
திட்டத்தின் பெயர் | ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ABDAM) |
அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார அடையாள அட்டையை வெளியிட்ட தேதி | 27-09-2021 |
தேவையான ஆவணங்கள் | ஆதார் அட்டை |
சுகாதார அடையாள எண்ணின் இலக்கங்கள் | 14 இலக்கங்கள் |
கட்டணங்கள் | கட்டணங்கள் இல்லை முற்றிலும் இலவசம் |
எந்த தகவல்கள் சேமிக்கப்படுகிறது | அனைத்து வகையான நோய், மருத்துவ சோதனைகள், நீங்கள் சிகிச்சை கொண்ட மருத்துவர்களின் எண்ணிக்கை, எடுத்துக்கொண்ட மருந்துகள் போன்றவை |
தகவலின் பாதுகாப்பு | வலுவான பாதுகாப்பு மற்றும் Encryption களுடன் கட்டமைக்கப்பட்டது. உங்களின் அனுமதி இன்றி எந்த தகவலும் பகிரப்படாது. |
சுகாதார அட்டையை விண்ணப்பிப்பதற்கான லிங்க் | https://healthid.ndhm.gov.in/ |
Benefit of Health ID Card – சுகாதார அட்டையின் பலன்கள்
- பொதுவாக ஒருவரின் மருத்துவம் தொடர்பான அனைத்து Report களையும் காகிதம் வடிவில் செல்ல வேண்டும். சில நேரங்களில் அந்த ஆவணங்கள் தொலைந்து விடலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். இதனால் மக்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
- மக்கள் இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டை பெற்றுவிட்டால், அவர்களின் மருத்துவ தகவல்கள் அனைத்தும் அதில் சேமிக்கப்படும். இதன் மூலம் உங்களின் மருத்துவம் தொடர்பான தகவல்கள் எவ்வளவு இருந்தாலும், அவை அனைத்தும் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படும். இதை எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திற்கும் டிஜிட்டல் முறையில் எடுத்துச்செல்லலாம்.
- இந்த சுகாதார அட்டையில் குடிமகனின் சுகாதார தகவல்கள், மருத்துவ செலவுகள் மற்றும் அவரின் பிற தொடர்புடைய தகவல்கள் இருக்கும். இதன் முக்கிய நன்மை என்னவென்றால், சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கயிருக்கும்.
- நீங்கள் சுகாதார அட்டைக்கு பதிவு செய்த பிறகு அதன் தனித்துவமான நன்மைகளை அறிந்து கொள்வீர்கள்.
- உங்களின் சிகிச்சை (Treatment), சிகிச்சை முடிந்து வெளியேற்றம் (Discharge), மருத்துவ சோதனைகள் (Test) மற்றும் மற்ற மருத்துவ அறிக்கைகள் (Medical Reports) போன்ற விவரங்கள் சுகாதார அட்டையில் குறிப்பிடப்படும்.
- நீங்கள் எந்த ஒரு மருத்துவமனைக்கு செல்லும்போதும், இந்த டிஜிட்டல் தகவல்களை அந்த மருத்துவருக்கு பகிரலாம்.
- நீங்கள் சுகாதார அட்டையை பயன்படுத்தி உங்களின் விவரங்களை பெறுவதற்கான அணுகலை வழங்கும்போது, உங்களின் மருத்துவ சிகிச்சை விவரங்களை எந்த நேரத்திலும் மருத்துவரால் பார்க்க முடியும்.
How to Apply For Digital Health ID Card Online 2023
உங்களுக்கான தனித்துவமான Health ID Card யை Registration செய்ய நீங்கள் எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை. உங்களின் கணினி அல்லது ஸ்மார்ட் மொபைல் மூலமாகவே ஒருசில நிமிடங்களில் Apply செய்து, உங்களுக்கான Digital Health ID Card யை Download செய்யலாம்.
பின்வரும் படிகளை பின்பற்றி உங்களின் சுகாதார அடையாள அட்டையை பெறலாம்.
Step 1: நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://healthid.ndhm.gov.in/ என்ற தளத்திற்கு செல்லவும்.
Step 2: Generate ID என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: Generate Via Aadhaar என்பதை அழுத்தவும்.
Step 4: இந்த பக்கத்தில் உங்களின் ஆதார் எண்ணை Enter செய்யவும். பிறகு I Agree என்ற டிக் Box யை டிக் செய்து Submit என்பதை கிளிக் செய்க.
Step 5: இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP Number யை Type செய்து Submit செய்யவும்.
Step 6: உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 7: நீங்கள் Enter செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Submit செய்யவும்.
Step 8: இப்பொழுது உங்களின் Profile பக்கம் திறக்கும். அதில் உங்களின் ஆதார் கார்டில் இருப்பதை போன்று Name, Date of Year, Gender, State மற்றும் District போன்ற தகவல்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
இப்பொழுது நீங்கள் அதில் விடுபட்டுள்ள உங்களின் Photo, PHR Address மற்றும் Email ID போன்றவற்றை நிரப்புக. இதில் PHR Address என்பது Email ID யை போன்று நீங்களே உருவாக்க வேண்டும்.
உதாரணமாக, PHR Address என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான ஒன்றை Type செய்யவும். எடுத்துக்காட்டாக, suresh987 அல்லது sureshklm போன்ற வடிவங்களில் Type செய்யவும்.
நீங்கள் Type செய்யும் ID ஆனது ஏற்கனவே யாராவது பயன்படுத்திக்கொண்டு இருந்தால் Error செய்தி வரும். ஒருவேளை யாரும் பயன்படுத்தவில்லை என்றால் Error செய்தி வராது.
உங்களின் பிறந்த தேதி, மாதம் மற்றும் Address போன்றவை காலியாக இருக்கும். மேலும் அதில் உங்களால் Type செய்ய முடியாது. இதற்கான தீர்வை அடுத்து வரும் படிகளில் காண்போம்.
விடுபட்ட தகவல்களை நிரப்பிய பிறகு Submit செய்யவும்.
Step 9: இப்பொழுது உங்களுக்கான Digital Health ID Generate ஆகிவிடும். அதற்க்கு கீழே உள்ள Download Health ID Card என்ற பட்டனை அழுத்தி Health ID Card யை Download செய்துகொள்ளலாம்.
Re – KYC Verification
Step 10: My Account இல் உள்ள Re-Kyc Verification என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 11: இப்பொழுது உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit செய்யவும். தற்போது வெற்றிகரமாக Re Kyc செய்யப்படும்.
Step 12: My Account இல் உள்ள Edit Profile என்பதை கிளிக் செய்க.
Step 13: இப்பொழுது ஏற்கனவே காலியாக இருந்த பிறந்த தேதி, மாதம் மற்றும் Address போன்றவை நிரப்பப்பட்டிருக்கும்.
தற்போது உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நீங்கள் ஏற்கனவே Download செய்து Digital Health ID யை Print எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
முடிவுரை
சுகாதார அடையாள அட்டைக்கு Apply செய்வது மிகவும் எளிதாகும். எனவே இதற்காக நீங்கள் எங்கும் போக வேண்டிய அவசிமில்லை. ஹெல்த் அடையாள அட்டை பல நன்மைகளை கொண்டிருப்பதால் அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் மருத்துவமனைக்கு செல்லும்போது Digital Health ID Card முக்கியமானதாக கருதப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கட்டுரையில் சுகாதார அடையாள அட்டையை எவ்வாறு Registration செய்து அதை Download செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.