PMSBY Scheme Details in Tamil | பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டம்
குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு செய்து உங்களின் குடும்பத்தை பாதுகாத்திட வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தை (PMSBY Scheme) பற்றி தெரிந்துகொள்வது முக்கியமாகும். அதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
உங்களுக்கு பிறகு உங்களின் குடும்பத்தை பாதுகாக்க விபத்து காப்பீட்டு திட்டங்கள் (Accidence Insurance Scheme) உதவுகின்றன. ஆனால் விபத்து காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக பிரீமியம் தொகையை வசூலிப்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கும். இந்த அதிக பிரீமியம் தொகையால் ஏழை எளிய மக்கள் காப்பீட்டு திட்டங்களில் சேர தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் குறைந்த பிரீமியம் தொகையை செலுத்தி Rs.2,00,000 ரூபாய் வரையிலான விபத்து காப்பீட்டை பெறலாம்.
Table of Contents
PMSBY Scheme Details in Tamil
PMSBY என்று அழைக்கப்படும் Pradhan Mantri Suraksha Bima Yojana என்ற விபத்து காப்பீட்டு திட்டமானது 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மத்திய அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் விபத்து காப்பீட்டு திட்டமாகும்.
இத்திட்டத்தில் சேரும் பயனாளி விபத்தின் போது இறந்துவிட்டால் அவரின் நியமனதாரருக்கு Rs.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒருவேளை விபத்தின் போது உறுப்புகள் நிரந்தர இயலாமை ஏற்பட்டால் இரண்டு லட்சம் ரூபாய் முழுமையாக வழங்கப்படும். பகுதி இயலாமையாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு சிறப்பான திட்டமாகும். ஏனெனில் இதற்கான பிரீமியம் தொகை மிகக்குறைவு ஆகும். இந்த தொகை வங்கிக்கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்படும் என்பதால், இதை தனியாக வங்கியில் செலுத்த தேவையில்லை.
Department | Department of Financial Services |
Name of Scheme | Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) |
Launched Date | 09 May 2015 |
Benefit | Accident Insurance |
Worth | Rs.2 Lacs |
Official Website | https://www.jansuraksha.gov.in |
Toll Free Number | 1800-180-1111 / 1800-110-001 |
PMSBY திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
18 வயது முதல் 70 வயதுள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள் அனைவரும் தபால் நிலையம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு வங்கிக்கணக்கை வைத்திருக்க வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் ஏதாவது ஒன்றில் கணக்கை வைத்திருக்க வேண்டும்.
Nationalised Banks – தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் | |
Name of Bank | Headquarter |
1. State Bank of India | Mumbai |
2. Punjab National Bank | New Delhi |
3. Bank of Baroda | Gujarat |
4. Canara Bank | Bengaluru |
5. Union Bank of India | Mumbai |
6. Bank of India | Mumbai |
7. Indian Bank | Chennai |
8. Central Bank of India | Mumbai |
9. Indian Overseas Bank | Chennai |
10. UCO Bank | Kolkata |
11. Bank of Maharashtra | Pune |
12. Punjab & Sind Bank | New Delhi |
பிரீமியம் தொகை
PMSBY திட்டத்திற்கான பிரீமியம் தொகையானது ஆண்டிற்கு Rs.12 ரூபாய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இறுதியில் பயனாளரின் வங்கிக்கணக்கில் இருந்து தானாகவே (Auto debit) 12 ரூபாய் கழிக்கப்படும்.
எனவே நீங்கள் வங்கிக்கணக்கில் போதுமான அளவு இருப்பை வைத்திருக்க வேண்டும்.
PMSBY திட்டத்தின் பயன்கள்
பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைத்த பயனாளி விபத்தில் இறந்தால், அவரின் நியமனதாரருக்கு (Nominee) 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
விபத்தில் முழுமையான ஊனம் அடைந்தால் முழு தொகையான 2 லட்சம் அளிக்கப்படும். பகுதி இயலாமை அடைந்தால் 1 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டம் உங்களுக்கு பிறகு உங்களின் குடும்பத்தை பாதுகாக்கிறது. மேலும் விபத்தில் ஊனமடைந்தாலும் இந்த திட்டத்தின் பண பலன்களை பயனாளர் பெற முடியும்.
காப்பீட்டு நன்மைகளின் அட்டவணை | காப்பீட்டு தொகை | |
1 | இறப்பு | Rs.2 லட்சம் |
2 | இரண்டு கண்களின் மொத்த மற்றும் மீள முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது கால்களின் பயன்பாடு இழப்பு அல்லது ஒரு கண்ணின் பார்வை இழப்பு மற்றும் கை அல்லது கால் பயன்பாடு இழப்பு | Rs.2 லட்சம் |
3 | ஒரு கண்ணின் முழுமையான மற்றும் மீளமுடியாத பார்வை இழப்பு அல்லது ஒரு கை அல்லது காலின் பயன்பாடு இழப்பு | Rs.1 லட்சம் |
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் விதிமுறைகள்
இந்த திட்டத்தில் இணைவதற்கு முன்பு இதன் விதிமுறைகளை தெரிந்துகொள்வது அவசியமாகும். அவற்றை கீழே காணலாம்.
- இந்த திட்டத்திற்கான ஒரு ஆண்டு ஜூன் 1 முதல் மே 31 வரை கணக்கில் கொள்ளப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் கட்டண தொகை மே 31 க்குள் செலுத்த வேண்டும்.
- திட்டத்திற்கான பிரீமியம் தொகையை செலுத்தாத பயனாளிகளின் கணக்குகள் செயலிழந்துவிடும்.
- இந்த திட்டத்தில் இருந்து வெளியேறும் நபர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இத்திட்டத்தில் சேரலாம்.
- இயற்கை மரணம் அடைந்தால் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது. ஏனெனில் இது விபத்து காப்பீட்டு திட்டம் மட்டுமே ஆகும்.
எவ்வாறு இத்திட்டத்தில் இணைவது?
சில வங்கிகள் Internet Banking மூலம் PMSBY திட்டத்தில் இணையும் வசதியை வழங்குகின்றன. எனவே இந்த வசதியின் மூலம் நீங்கள் ஆன்லைன் வழியாகவே இத்திட்டத்தில் இணைய முடியும்.
நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று PMSBY Form யை நிரப்புவதன் மூலமும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்திற்கான படிவத்தை வங்கியில் பெறலாம். அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தும் PMSBY Form யை Download செய்யலாம்.
Pradhan Mantri Suraksha Bima Yojana Form SBI
முடிவுரை
இந்த பதிவின் மூலம் PMSBY விபத்து காப்பீட்டு திட்டத்தின் விவரங்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் சேர விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்று தொடங்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.