How to Reduce Body Heat in Tamil | உடல் சூட்டை குறைக்கும் உணவுகள்

How to Reduce Body Heat in Tamil: இந்தியா வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலைக்கு பெயர் பெற்றது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உடல் சூடும் அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. வெயில் காலங்களில் சோர்வு, அதிக வியர்வை வெளியேறுதல், தலை சுற்றல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே நம்முடைய உடலை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கோடை காலங்களில் வெப்பம் உக்கிரமாக இருந்தாலும், அதை சமாளிக்க இயற்கை பல அற்புத உணவுகளை வழங்கியுள்ளது. இந்த உணவுகளை உண்பதன் மூலம் நம்முடைய உடல் சூட்டை (Body heat) குறைக்கலாம். இந்த கட்டுரையில் உடல் சூட்டை குறைக்கும் பல்வேறு உணவு பொருட்களை காணலாம்.

தேங்காய் நீர் (Coconut Water)

Coconut Water for body heat reduce in tamil

தேங்காய் நீர் அல்லது இளநீர் ஒரு இயற்கை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வெப்பமான கோடை மாதங்களில் உடல் சூட்டை குறைக்க உதவும். இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. தேங்காய் நீரானது உடலின் திரவங்களை நிரப்பி நீரேற்றமாக வைத்திருக்கும்.

தேங்காய் நீரில் குளிர்ச்சியான பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் நீரிழப்பு அபாயத்தை குறைக்கிறது. மேலும் தேங்காய் நீரைக் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Read  Stress Management: மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்

தர்பூசணி (Watermelon)

Watermelon fruit

தர்பூசணி ஆனது அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழமாகும். இது உடல் வெப்பநிலையைக் குறைக்க சிறந்த தேர்வாகும். தர்பூசணி பழத்தில் அதிகளவு நீர்உள்ளது. அதாவது இது 92% நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே  இது ஒரு சிறந்த நீரேற்ற உணவாக அமைகிறது.

தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. தர்பூசணியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இது எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. சூடான கோடை மாதங்களில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க தர்பூசணி பழங்களை சாப்பிடுங்கள்.

மோர் (Buttermilk)

Buttermilk for reduce body heat

மோர் ஆனது அனைவரின் வீடுகளிலும் எளிதாக கிடைக்கும் ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும். கோடை வெயிலின் போது உடல் சூட்டை குறைக்க மோர் ஒரு பிரபலமான தேர்வாகும். இது தயிரில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகிறது. சிலர் மோரில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்தும் பருகுவார்கள்.

மோர் உடல் சூட்டைக் குறைத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது வெப்ப சோர்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்கவும் உதவுகிறது. மோர் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மையுடையது. 

Read  How to Increase Memory Power in Tamil | நினைவாற்றல் அதிகரிக்க

வெள்ளரிக்காய் (Cucumber)

Cucumber - Reduce body heat in tamil

வெள்ளரிக்காய் ஆனது வெயில் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படும் காய்களில் ஒன்றாகும் . இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் காய்கறியாகும். வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகவும் வெள்ளரி உள்ளது.

வெள்ளரிக்காயின் குளிர்ச்சியான பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலின் தாக்கம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் வெள்ளரிக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது. 

புதினா (Mint)

Mint leaves for body heat reduce

புதினா ஒரு புத்துணர்ச்சியூட்டும் மூலிகையாகும். இது கோடை மாதங்களில் உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்விக்க உதவும். இது மெந்தோல் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களால் நிரம்பியுள்ளது. இது உடலில் குளிர்ச்சியான விளைவைக் ஏற்படுத்துகிறது. புதினா ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களின் வளமான மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணைபுரிகிறது. மேலும் துர்நாற்றத்தை குறைக்கவும், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுவாசத்தை புத்துணர்ச்சி பெறவும் புதினா உதவும். 

வெந்தயம் (Fenugreek)

Fenugreek for body heat reduce in tamil

வெந்தயம் இந்திய உணவு வகைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நறுமண விதையாகும். வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவும். வெந்தயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கனிம சத்து போன்றவை அடங்கியுள்ளன. 

Read  How to Control Anger in Tamil: அதிக கோபம் வருகிறதா

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் டீ குடித்து வந்தால் உடல் சூடு குறையும். வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் இது  மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். 

நுங்கு (Palm Fruit)

Palm Fruit for body heat reduce food

பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சுவையான உணவு பனை நுங்காகும். இது கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது ஆகும். நுங்கில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் அது மிகவும் சுவையானதாக இருக்கும். மேலும் அதில் கிடைக்கும் வெள்ளை நிற உணவு மென்மையான தன்மையை கொண்டிருக்கும். வெயில் காலம் என்றால் நினைவுக்கு வரும் முக்கிய உணவுகளில் பனை நுங்கும் ஒன்றாகும்.

நுங்கை சாப்பிடும் போது நம் உடலுக்கு குளிர்ச்சியை (Reduce Body Heat) ஏற்படுத்தும். பனை நுங்கில் நார்சத்து மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

முலாம் பழம் (Melon)

Melon - Best food for body heat reduce

வெயில் காலத்தில் சாப்பிடவேண்டிய முக்கிய பழங்களில் முலாம் பழமும் ஒன்றாகும். முலாம் பலம் தன்னகத்தே அதிக சத்துக்களை கொண்டுள்ளது. இது உடல் உஷ்ணத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.  

இது உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடும்போது சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மேற்கூறிய உணவுப்பொருள்கள் அனைத்தும் Body heat யை Reduce செய்யும் உணவுகளாகும். இவை கோடை காலத்தை சமாளிக்க உதவும் நீர்சத்துக்களை கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest