How to Activate Indian Bank New ATM Card: Step by Step Guide
நீங்கள் Indian Bank இல் New ATM Card க்கு விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றிருக்கலாம். அந்த ATM Card யை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கு முதலில் அதை Activate செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை Step by Step ஆக இந்த கட்டுரையில் விளக்குகிறேன்.
தற்போது ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளருக்கும் டெபிட் கார்டு என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஏனெனில் தங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமென்றால், முதலில் ATM Machine யை தான் நாடுகிறார்கள். ATM இயந்திரத்தில் பணம் எடுப்பது மிகவும் எளிதாகும். எனவே இந்த முறையை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இன்றைய காலத்தில் நீங்கள் ஒரு வங்கிக்கணக்கை திறக்கும் போதே Debit Card யையும் சேர்த்து வழங்கிவிடுகின்றனர். மேலும் நீங்கள் ஒருசில காரணங்களுக்காக புதிய டெபிட் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் நேரிடலாம்.
அவ்வாறு புதிய அட்டையை பெற்ற பிறகு, அதை Activate செய்வது முக்கியமாகும். இதுஒன்றும் பெரிய கடினமான செயல் அல்ல. யார் வேண்டுமானாலும் New ATM Card யை Activate செய்யலாம். இதற்கான முழு விளக்கத்தையும் நான் கொடுக்கப்போகிறேன்.
How to Activate Indian Bank New ATM Card at ATM Machine
உங்களின் புதிய டெபிட் அட்டையை Activate செய்ய பின்வரும் படிகளை பின்பற்றவும்:
Step 1: உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு Indian Bank ATM Center யை அணுகவும்.
Step 2: முதலில் ATM இயந்திரத்தில் உங்களின் டெபிட் கார்டை Insert செய்யவும்.
Step 3: இப்பொழுது திரையின் கடைசியில் Generate PIN / Set PIN என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: அடுத்த திரையில் Generate OTP என்பதை தேர்வு செய்க.
Step 5: உங்களின் Indian Bank Savings Account Number யை Enter செய்து, Correct என்பதை அழுதவும்.
Step 6: தற்போது மீண்டும் உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இப்பொழுது ATM இயந்திரத்தின் திரையில் உங்களின் Name, Account Number மற்றும் Mobile Number போன்ற தகவல்களை தெரியும். அதை சரிபார்த்துவிட்டு Confirm என்பதை அழுத்தவும்.
Step 8: உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP யை பெறுவீர்கள். அந்த OTP Number யை குறித்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் Green PIN (OTP) யை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.
இந்த ATM Green PIN யை கொண்டு புதிய பின் நம்பரை எவ்வாறு Set செய்வது என்பதை பற்றி பின்வரும் படிகளில் காணலாம்.
Step 1: உங்களின் புதிய கார்டை ATM Machine இல் Insert செய்க.
Step 2: Generate PIN / Set PIN என்பதை அழுத்தவும்.
Step 3: Set PIN என்பதை கிளிக் செய்க.
Step 4: உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த Mobile Number யை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: ஏற்கனவே உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த OTP Number யை Enter செய்து Correct என்பதை தேர்வு செய்க.
Step 6: இப்பொழுது நீங்கள் Enter செய்ய விரும்பும் 4 இலக்க New ATM PIN யை Enter செய்க.
Step 7: மீண்டும் அதே 4 இலக்க PIN நம்பரை Enter செய்க.
Step 8: தற்போது ATM இயந்திரத்தின் திரையில் Your Transaction is Complete என்று தோன்றுவதை காண்பீர்கள். அதாவது உங்களின் PIN நம்பரை வெற்றிகரமாக Set செய்துவிட்டீர்கள்.
இவ்வாறு உங்களின் டெபிட் அட்டையை Activate செய்த பிறகு, அதை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அதாவது உங்களின் Indian Bank Account இன் Balance Check செய்தல், Withdrawal செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.