Indian Bank

How to Add Beneficiary in IndOasis Mobile Banking App: Indian Bank

Indian Bank புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள Indoasis Mobile Banking செயலியில் ஒரு Beneficiary யை எவ்வாறு Add செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

முதலில் Beneficiary என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Beneficiary என்பது ஒரு பயனை பெற கூடிய பயனாளி ஆகும். அதாவது நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து, வேறு ஒரு நபருக்கு பணத்தை Transfer செய்கிறீர்கள் என்றால், அந்த நபரே Beneficiary ஆகும்.

ஒரு Beneficiary யை Add செய்வதால் என்ன பயன்?

பொதுவாக நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் இருந்து, மற்றொரு வங்கிக்கணக்கிற்கு Money Transfer செய்யும்போது, அவர்களின் Bank Account Number, IFSC Code, Name, Mobile Number போன்ற தகவல்களை கொடுக்க வேண்டியதிருக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு முறை Transfer செய்யும் போதும், அந்த தகவல்களை திரும்ப திரும்ப கொடுக்க வேண்டியதிருக்கும். மேலும் குறைந்த அளவு பணம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.

Read  How to Generate / Reset Indian Bank ATM PIN Number in Tamil

ஆனால் மேற்கண்ட தகவல்களை ஒருமுறை Beneficiary பட்டியலில் சேர்த்துவிட்டால் Money Transfer செய்வது எளிதாக இருக்கும்.

நீங்கள் பணத்தை அனுப்ப வேண்டுமென்றால் ஏற்கனவே Add செய்த Beneficiary யை தேர்வு செய்தாலே போதுமானது ஆகும். பிறகு Amount யை உள்ளிட்டு விரைவாக Transfer செய்யலாம்.

 How to Add Beneficiary in Indoasis App

இப்பொழுது ஒரு பயனாளரை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

உங்களின் Indian Bank Mobile Banking இல் பயனாளரை சேர்ப்பது கடினமான காரியம் அல்ல. பின்வரும் செயல்முறைகளை பயன்படுத்தி எளிதாக பயனாளியை சேர்க்கலாம்.

Step 1: Indoasis Mobile Banking App யை Open செய்யவும்.

Step 2: உங்களின் 4 இலக்க MPIN Number யை உள்ளிட்டு Login செய்யவும்.

Step 3: Manage Ben என்பதை கிளிக் செய்யவும்.

Click Manage Beneficiary

Step 4: Beneficiary Type யை தேர்வு செய்யவும். அதாவது நீங்கள் சேர்க்க விரும்பும் Account Number ஆனது இந்தியன் வங்கியா அல்லது மற்ற வங்கிகளா என்பதை தேர்வு செய்க. இங்கு Other Bank என்று தேர்வு செய்துள்ளேன்.

Read  How to Apply For Indian Bank New Passbook | பாஸ்புக்

Select Other Bank

Step 5: இப்பொழுது Beneficiary Name, Nick Name, Account Number, IFSC Code, Account Type, Beneficiary Address மற்றும் Mobile Number போன்ற அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

Enter Beneficiary Details

Step 6: பிறகு Proceed என்பதை அழுத்துக.

Step 7: இப்பொழுது Confirmation திரை திறக்கும். அதில் உள்ள தகவல்களை சரிபார்த்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Click Confirm - Indoasis mobile banking

Step 8: உங்களின் 4 இலக்க MTPIN நம்பரை Enter செய்து Submit செய்யவும்.

Enter MTPIN

Step 9: தற்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை Enter செய்து Submit செய்க.

Enter OTP Number

Step 10: இப்போது நீங்கள் வெற்றிகரமாக New Beneficiary யை Add செய்துவிட்டீர்கள்.

New Beneficiary Added Successfully

அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் சேர்த்த பயனாளர் Activate செய்யப்படுவார். இதை நீங்கள் Manage Ben > Beneficiary List இல் காணலாம்.

Activate ஆன பிறகு Beneficiary Option யை பயன்படுத்தி உங்களின் பரிவர்த்தனையை ஆரம்பிக்கலாம்.

Read  Indian Bank Debit Card Types | Limits, Charges, Usages

தொடர்புடைய கட்டுரைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest