How to Open for Indian Bank Savings Account Online
நீங்கள் இந்தியன் வங்கியில் புதிய வங்கிக்கணக்கை திறக்க விரும்புகிறீர்களா? நீங்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறே வங்கிக்கணக்கை Open செய்யும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்? ஆம் உண்மையில் இது சாத்தியம் தான்.
Indian Bank ஆனது Online மூலமாகவே Savings Account-யை Open செய்யும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனாளர்கள், தங்களின் மொபைல் மூலமாகவே புதிய சேமிப்பு கணக்கை ஓபன் செய்ய முடியும். இதை பற்றிய முழு தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
சேமிப்பு கணக்கு ஏன் தேவை?
சேமிப்பு கணக்கை திறப்பதன் மூலம் தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறது. வங்கிகளில் பணத்தை Deposit செய்யும் போது பணமானது பாதுகாப்பாக இருக்கும். பயனாளர்களுக்கு பணத்தேவை ஏற்படும்போது அவர்கள் தங்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியும். மேலும் வங்கிகளால் வழங்கப்படும் ATM Card வசதியை கொண்டு எந்த நேரத்திலும் பணத்தை எடுக்கலாம்.
வங்கிகளால் வழங்கப்படும் Net Banking வசதியின் மூலம் ஒரு வங்கிக்கணக்கை இயக்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். Money Transfer, Recharge, Bill Pay போன்ற வசதிகளை Net Banking மூலமாக பெற முடியும்.
Interest Rate
Indian Bank-ல் திறக்கப்படும் சேமிப்பு கணக்கில் வருடத்திற்கு 3.5% முதல் 4% வரை வட்டி செலுத்தப்படும். மேலும் Recurring Deposit (RD), Fixed Deposit (FD) போன்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் காலத்தை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.
Needed Documents for Indian Bank Savings Account
Indian Bank-ல் கணக்கை திறப்பதற்கு கீழ்காணும் ஆவணங்கள் தேவைப்படுகிறது.
- Aadhaar Card
- PAN Card
- 2 Passport Size Photos
KYC Verification செய்யும் போது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையின் நகல்களில் உங்களின் சுய கையொப்பம் (Self -attested) இட வேண்டும். மேலும் ஆவணங்களை சரிபார்ப்பு செய்ய அசல் ஆவணத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
Steps for Open Indian Bank Savings Account Online
Indian Bank SB Account-யை இணையதளம் மூலமாகவோ அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ Open செய்யலாம்.
இணையதளம் மூலமாக SB கணக்கை Open செய்ய வேண்டுமென்றால் https://apps.indianbank.in/onlinesb_new என்ற Website-யை அணுக வேண்டும்.
மொபைல் ஆப் வழியே Open செய்ய Play Store-ல் IB Customer என்ற செயலியை Download செய்ய வேண்டும்.
பெரும்பாலான மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதால் மொபைல் ஆப்பை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே IB Customer செயலியின் மூலம் சேமிப்பு கணக்கை திறப்பதை பற்றி பார்க்கலாம்.
Step 1: IB Customer என்ற App-யை இன்ஸ்டால் செய்து அதை Open செய்ய வேண்டும்.
Step 2: முதலாவதாக உள்ள Open SB Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இந்த பக்கத்தில் உங்களின் Name, Mobile Number, Email ID மற்றும் Catpcha Code-யை Enter செய்ய வேண்டும். பிறகு அதற்கு கீழே உள்ள நான்கு Check Box-களையும் டிக் செய்து Submit என்பதை அழுத்த வேண்டும்.
Step 4: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Verify OTP என்பதை கிளிக் செய்க.
Step 5: உங்களின் Aadhaar அல்லது VID Number-யை கொடுத்து Verify Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 6: இப்போது ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Verify Aadhaar OTP என்பதை அழுத்த வேண்டும்.
Step 7: இப்பொழுது உங்களின் ஆதார் அட்டையில் உள்ள Photo, Date of Birth, Address போன்ற தகவல்கள் தெரியும்.
Step 8: Father Name, Mother Name, Annual Income, PAN, Occupation, Marital Status போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
Step 9: PAN எண்ணை Enter செய்தவுடன் Verify PAN என்பதை கிளிக் செய்து சரிபார்க்க வேண்டும்.
Step 10: Tap to Choose Branch என்பதை கிளிக் செய்து உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு Indian Bank Branch-யை தேர்வு செய்ய வேண்டும்.
Step 11: பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
Step 12: நீங்கள் Submit என்பதை கிளிக் செய்தவுடன் SB Account Number மற்றும் CIF Number தோன்றும். அவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
KYC Verification
நீங்கள் சேமிப்பு கணக்கை திறந்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் KYC Verification செய்ய வேண்டும். அவ்வாறு KYC Verification-யை செய்யவில்லை என்றால் சேமிப்பு கணக்கு காலாவதி ஆகிவிடும்.
நீங்கள் Online-ல் சேமிப்பு கணக்கை Open செய்த உடனே KYC Verification செய்தால் உங்களின் வேலை முழுமை அடைந்திடும். எனவே முடிந்த அளவு விரைவாக KYC சரிபார்ப்பை செய்துவிடுங்கள்.
எவ்வாறு KYC Verification செய்வது ?
ஆன்லைனில் சேமிப்பு கணக்கை திறந்தவுடன் உங்களின் Email ID-க்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்புவார்கள். அந்த விண்ணப்பத்தில் உங்களின் Name, Account Number, CIF Number போன்ற அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டிருக்கும். அந்த விண்ணப்பத்தை தனியாக Print எடுத்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தை Print எடுத்தவுடன் அதில் உங்களுக்கு தேவையான Account Type-யை டிக் செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பத்தின் கடைசியில் கையெழுத்தை இட வேண்டும்.
வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)
- பான் அட்டை (அசல் மற்றும் நகல்)
- Print செய்த விண்ணப்பம்
- 2 புகைப்படங்கள்
மேற்கண்ட ஆவணங்களை வங்கியில் கொடுத்து Scaner-ல் உங்களின் விரல் ரேகையை வைத்து Verify செய்ய வேண்டும். இப்பொழுது வெற்றிகரமாக KYC Verification முடிந்துவிடும்.
Benefits of Online Savings Account
Online மூலமாக சேமிப்பு கணக்கை திறக்கும் போது பின்வரும் பயன்களை பெறலாம்.
- ஆன்லைன் வழியே கணக்கை திறந்து KYC சரிபார்க்கும் போது உடனே Passbook-யையும் பெறலாம்.
- வங்கியில் சென்று கணக்கை திறக்கும்போது தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். எனவே ஆன்லைனில் Open செய்யும் போது அலைச்சலை தவிர்க்கலாம்.
- ATM Card-க்கு தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை. நீங்கள் கணக்கை திறந்த 7 வேலை நாட்களுக்குள் உங்களின் முகவரிக்கு அனுப்பப்படும். ஒருவேளை ATM அட்டை வரவில்லை என்றால் வங்கியை தொடர்பு கொள்ளவும்.
- ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே ஆன்லைனில் சேமிப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
முடிவுரை
இந்த கட்டுரையில் Indian Bank-ல் ஆன்லைன் மூலமாக எவ்வாறு Savings Account-யை Open செய்வது என்பதற்கான முழு தகவல்களையும் பார்த்தோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இதைப்பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
Account opening