Indian Bank

Bulk Charges in Indian Bank Means in Tamil: Explanation

நீங்கள் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், சில நேரங்களில் உங்களுக்கு Bulk Charges என்று ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்ட குறுஞ்செய்தி வரும். இந்த மாதிரியான கட்டண பிடித்தங்கள் ஒரு முறையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையோ வந்திருக்கலாம். சிலருக்கு சில ரூபாய்களை பிடித்தம் செய்திருக்கலாம் அல்லது சில நூறு ரூபாய் வரை பிடித்தம் செய்திருக்கலாம். 

ஆனால் இது எதற்காக பிடித்தம் செய்யப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கான காரணம் தெரியாமல் நீங்கள் குழம்பி இருக்கலாம். அதை பற்றிய தகவலை தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

Indian Bank இல் Bulk Charges என்றால் என்ன?

இந்தியன் வங்கி பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த சேவைகளை ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டு இலவசமாக பெறலாம். ஆனால், அந்த சேவைகளை வழங்கப்பட்ட வரம்பை மீறி பயன்படுத்தும் போது, அதற்கான சேவை  கட்டணத்தை மொத்தமாக வசூலிப்பார்கள். இவ்வாறு வரம்பை மீறி பயன்படுத்தும் சேவைகளுக்கு மொத்தமாக கட்டணத்தை வசூலிப்பதே Bulk Charges ஆகும்.

 

bulk charges in indian bank means in tamil

ஆனால், அது எந்தெந்த சேவைகள் என்று அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

நிச்சயம் உங்களுக்கு சொல்கிறேன். Indian Bank ஆனது பல்வேறு சேவைகளை வழங்கி அதற்க்கு Service Charges யை வசூலிக்கிறது. அவற்றில் சில முக்கிய சேவைகளை பற்றி பார்ப்போம்.

SMS Charges 

பொதுவாக நாம் அனைவரும் வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்போம். ஏனெனில் இணையம் மூலம் செய்யும் அனைத்து பரிவர்தனைகளுக்கும் OTP Number கட்டாயமாகும். எனவே வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது தவிர்க்க முடியாதது.

OTP, Internet Banking, Indian Bank Mobile Banking போன்ற சேவைகள் இலவசம் ஆகும். இருப்பினும் நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது (Credit / Debit), மொபைல் எண்ணிற்கு SMS Alert வரும். அந்த பரிவர்த்தனையை வங்கிக்கிளை, ATM Machine மற்றும் Online போன்ற எதன் மூலமாக செய்தாலும் SMS குறுஞ்செய்தி வந்துவிடும்.

அவ்வாறு வரும் ஒவ்வொரு SMS க்கும் 25 பைசா கட்டணமாக விதிக்கப்படும். இந்த கட்டணம் மாதத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு பிடித்தம் செய்யப்படும்.

இருப்பினும் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் UPI பரிவர்த்தனைகள் போன்றவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Debit Card / ATM Card Charges 

இந்தியன் வங்கி ATM இயந்திரங்களில் ஒரு மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். அதற்க்கு மேல் செய்யப்படும் Withdrawal பரிவர்த்தனை ஒன்றுக்கு Rs.15 கட்டணமாக வசூலிக்கப்படும். 

Read  Minimum Balance in Indian Bank Savings Account

மற்ற வங்கிகளின் ATM இயந்திரங்களின் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்க்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு Rs.21 கட்டணமாக வசூலிக்கப்படும்.

நீங்கள் ஒரு புதிய ATM Card யை பெற்றவுடன் முதல் ஆண்டில் Annual Maintenance Charges (AMC) இலவசம் ஆகும். பிறகு ஒவ்வொரு ஆண்டும் ATM Card க்கு AMC கட்டணமாக Rs.150 ரூபாயை பிடித்தம் செய்வார்கள்.

Minimum Balance 

Indian Bank Savings Account யை வைத்திருப்பவர்கள் Minimum Balance பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை என்றால் அதற்க்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

கிராமப்புற / Semi Urban களில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர்கள், காசோலை இல்லையென்றால் Rs.500 மற்றும் காசோலை வைத்திருந்தால் Rs.1000 யை குறைந்தபட்ச இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும்.

Urban / Metro களில் காசோலை இல்லையென்றால் Rs.1000 மற்றும் காசோலையுடன் கூடிய சேமிப்பு கணக்கில் Rs.2500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இந்த குறைந்த இருப்பை பராமரிக்க தவறினால் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது போன்ற பல சேவைகளை நிர்ணயித்த வரம்பை விட அதிகமாக பயன்படுத்தும்போது, அதற்கான கட்டணங்கள் Bulk Charges ஆக வசூலிப்பார்கள்.

Tips to Avoid Bulk Fees in Indian Banks

1. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்கவும்

பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் கட்டணங்களைத் தவிர்க்க குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தேவையைக் கண்டறிய உங்கள் வங்கியைச் சரிபார்த்து, மொத்தக் கட்டணத்தைத் தவிர்க்க அதைப் பராமரிக்கவும்.

Read  How to Entry Indian Bank Passbook in Passbook Print Machine

2. டிஜிட்டல் பேங்கிங் சேனல்களைப் பயன்படுத்தவும்

மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேங்கிங் சேனல்கள் பெரும்பாலும் இலவசம் அல்லது பாரம்பரிய வங்கி முறைகளைக் காட்டிலும் குறைவான கட்டணங்களைக் கொண்டிருக்கும். வங்கிக் கிளை அல்லது ஏடிஎம்களுக்குச் செல்வதற்குப் பதிலாக பரிவர்த்தனைகளைச் செய்ய இந்த சேனல்களைப் பயன்படுத்தவும்.

3. உங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிடுங்கள்

பல சிறிய பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தவிர்த்து, உங்கள் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். இந்த வழியில், நீங்கள் ஒரு நாள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்யும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், மொத்தக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

4. சரியான கணக்கைத் தேர்வுசெய்க

வெவ்வேறு வகையான வங்கிக் கணக்குகள் வெவ்வேறு கட்டணங்கள் மற்றும் கட்டணங்களைக் கொண்டுள்ளன. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கணக்கைத் தேர்வுசெய்யவும் மற்றும் உங்கள் பரிவர்த்தனை அளவிற்கான மிகக் குறைந்த கட்டணங்கள்.

5. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கவும்

உங்கள் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் கட்டணங்களைப் புரிந்துகொள்ள, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும். இந்த வழியில், நீங்கள் எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்கலாம் மற்றும் மொத்த கட்டணங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

சுருக்கமாக, இந்திய வங்கிகளில் மொத்தக் கட்டணங்களைத் தவிர்க்க, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவும், டிஜிட்டல் பேங்கிங் சேனல்களைப் பயன்படுத்தவும், உங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிடவும், சரியான கணக்கைத் தேர்வு செய்யவும் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole