How to Change Forgotten ATM PIN Number in Indian Bank
Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் ATM Card PIN Number-யை சில நிமிடங்களில் Change செய்ய முடியும். இதற்காக நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வங்கிக்கிளைக்கு போகாமலே ATM PIN Number-யை எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் ATM Card-யை வைத்திருப்பார்கள். ஏனெனில் மக்களின் வாழ்க்கையில் ATM அட்டை ஒரு அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது.
Debit Card-யை வைத்திருக்கும் அனைவரும், தங்களின் Debit Card இன் PIN நம்பரை எவ்வாறு Change செய்வது என்பதை அறிந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் சில காரணங்களுக்காக உங்களின் பின் நம்பரை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம்.
நீங்கள் கீழ்கண்ட காரணங்களுக்காக டெபிட் கார்டின் பின் நம்பரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
- நீங்கள் நீண்ட நாட்கள் ஏ.டி.ம் அட்டையை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் பின் நம்பரை மறந்து விட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பின் நம்பரை Change / Generate செய்ய நினைக்கலாம்.
- உங்களின் ஏ.டி.ம் பின் நம்பர் மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்தால், அதை மாற்றுவதற்கு முற்படலாம்.
Indian Bank வங்கியின் ஏடி.ம் பின் நம்பரை மாற்றுவதற்கு இரண்டு விதமான வழிகள் உள்ளது. முதலாவதாக வங்கிக்கிளைக்கு சென்று மாற்றுவது, இரண்டாவதாக வங்கிக்கிளைக்கு போகாமலேயே ATM Center மூலம் மாற்றுவது ஆகும்.
முதலாவதாக கூறிய வழிமுறையில், நீங்கள் Indian Bank வங்கிக்கிளைக்கு சென்று Duplicate ATM PIN Number-க்கு விண்ணப்பித்து பெறலாம்.
ஆனால் பெரும்பாலும் இந்த வழிமுறையை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் இந்த முறையில் ஏ.டி.ம் பின் நம்பரை பெறுவதற்கு அதிக நேரம் ஆகும்.
இரண்டாவதாக கூறிய வழிமுறையே சிறந்ததாகும். இந்த முறையில் வங்கிக்கு போகாமல் அருகிலுள்ள ஏதாவது ஒரு Indian Bank ATM Center-க்கு சென்று PIN நம்பரை Change செய்யலாம்.
மேலும் இதற்க்கு நேர வரம்பு கிடையாது. எந்த நேரத்திலும் ஏ.டி.ம் பின் நம்பரை மாற்ற முடியும்.
Table of Contents
How to Generate Indian Bank Green PIN
நீங்கள் ATM PIN நம்பரை Set செய்வதற்கு முன்னர், முதலில் Green PIN எண்ணை Generate செய்ய வேண்டும்.
Indian Bank Green PIN Generate செய்ய பின்வரும் படிகளை பின்பற்றவும்.
Step 1: உங்களுக்கு அருகிலுள்ள Indian Bank ATM Center-க்கு சென்று, உங்களின் Debit Card-யை Insert செய்யவும்.
Step 2: திரையில் மொழியை தேர்வு செய்யும் Option வரும். அதற்கு கீழே உள்ள GENERATE / SET PIN என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: தற்போது வரும் இரண்டு தேர்வுகளில் GENERATE OTP என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் இந்தியன் வங்கி Account Number-யை Enter செய்து Correct என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது மீண்டும் Account Number-யை Re-Enter செய்து Correct என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கு தகவல்களை திரையில் தெரிவதை காணலாம். பிறகு Confirm என்பதை அழுத்தவும்.
Step 7: நீங்கள் கிளிக் செய்தவுடன் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP (Green Pin ) வரும்.
How to Set Indian Bank ATM PIN Number Using Green PIN
உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP (Green PIN) வந்தவுடன், பின்வரும் படிகளின் மூலம் உடனடியாக ATM PIN நம்பரை Set செய்யலாம்.
Step 1: உங்களின் டெபிட் கார்டை Insert செய்யவும்.
Step 2: GENERATE / SET PIN என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: SET PIN என்பதை கிளிக் செய்க.
Step 4: இப்பொழுது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு Correct என்பதை அழுத்துக.
Step 5: உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை உள்ளிட்டு Correct என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: தற்போது நான்கு இலக்க புதிய PIN நம்பரை உள்ளிடவும்.
Step 7: இப்பொழுது நான்கு இலக்க PIN நம்பரை Re-Enter செய்யவும்.
Step 8: இப்போது உங்களின் ஏ.டி.ம் பின் நம்பர் வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
உங்களின் பின் நம்பர் Change செய்யப்பட்டதா என்பதை அறிய, நீங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி Balance Enquiry செய்து பரிசோதிக்கலாம்.
மேற்கண்ட செயல்முறையை இந்தியன் வங்கியின் புதிய ஏ.டி.ம் கார்டை Activate செய்வதற்கு பயன்படுத்தலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- Indian Bank Saving Account in Online
- Indian Bank Net Banking Registration
- Add Beneficiary In Indian Bank