Indian Bank

How to Change / Update Email ID in Indian Bank Account Online

.

Indian Bank Account இல் Email ID யை Change செய்ய இனி வங்கிக்கிளைக்கு போகவேண்டிய தேவை இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே ஒரு சில நிமிடங்களில் Online மூலம் மின்னஞ்சலை மாற்ற முடியும். இதற்கான செயல்முறைகளை Step by Step ஆக இந்த இடுகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இதற்க்கு முன்பு வரைக்கும் இந்தியன் வங்கிக்கணக்கில் உங்களின் மின்னஞ்சலை Update செய்ய, நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று அதற்கான படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது இந்தியன் வங்கியானது, படிப்படியாக வங்கிசேவைகளை ஆன்லைனில் கொண்டு வரும் முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான் Email ID யை ஆன்லைன் மூலம் மாற்றும் வசதியாகும்.

இதற்க்கு முன்பே மின்னஞ்சலை மாற்றும் வசதி இணைய வங்கிசேவையில் கொடுக்கப்பட்டாலும், அதனை Edit செய்யும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது உங்களின் மின்னஞ்சலை Edit செய்து புதிய மின்னஞ்சலை பதிவு செய்ய முடியும்.

வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை ஏன் பதிவு செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 

மின்னஞ்சலை வங்கிக்கணக்கில் பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்குகளை பற்றிய அறிவிப்புகள் மற்றும் வேறு சில தகவல்களை எளிதாக பெற முடியும்.

மேலும் உங்களின் Indian Bank Account இன் Statement களை Email மூலம் பெற முடியும். அந்த Statement இல் உங்களின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் இருக்கும். நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த Email Statement பெற விரும்புகிறீர்களோ அந்த காலத்தை தேர்வு செய்ய வேண்டும். 

Read  How to Generate & Change Indian Bank ATM PIN Through Online

உதாரணமாக, ஒரு மாதம் என்று தேர்வு செய்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை உங்கள் கணக்கின் பரிவர்த்தனை விவரங்கள் தானாகவே மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

How to Change / Update Email ID in Indian Bank Account Online

உங்களின் இந்தியன் வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை மாற்றுவதற்கு இரண்டு வகையான வழிகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இங்கே காணலாம்.

Method 1: Change Email ID Through Internet Banking

பின்வரும் படிகளை பின்பற்றி இந்தியன் வங்கிக்கணக்கின் இணைய வங்கிச்சேவை மூலம் மின்னஞ்சலை மாற்றலாம்  

Step 1: உங்களின் இந்தியன் வங்கியின் இணைய வங்கிசேவையை Login செய்யவும்.

Step 2: இப்பொழுது இணைய வங்கிசேவையின் Dashboard பக்கம் திறக்கும். அதில் Options என்பதை கிளிக் செய்யவும்.

Click Options - Indian Bank Email ID Update Online

Step 3: View Profile என்ற பக்கம் திறக்கும். அதில் Email என்பதிற்கு நேராக உள்ள Update என்ற பட்டனை அழுத்தவும்.

Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

Click Update

Step 4: New E-Mail என்ற இடத்தில் உங்களின் புதிய மின்னஞ்சலை Enter செய்யவும். பிறகு அதற்க்கு கீழே உள்ள Transaction Password யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.

Type New Email ID then Submit

Step 5: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm என்பதை அழுத்துக.

Enter OTP For email id change

Step 6: இப்பொழுது தோன்றும் Popup திரையில் OK என்பதை அழுத்தவும்.

Press OK

Step 7: தற்போது Your Email ID has been Updated Successfully என்ற செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.

Now Your Email ID Successfully Changed

நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை மாற்றியவுடன் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். இதற்க்கு பிறகு வங்கியின் அறிவிப்புகள் மற்றும் Email Statement களை புதிய மின்னஞ்சலில் பெறுவீர்கள்.

மேலும் படிக்க – How to Download Indian Bank Account Statement Online

Method 2: Change Email ID Through Indoasis Mobile App 

Indoasis App என்பது இந்தியன் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியாகும். இந்த செயலியின் மூலமாகவும் உங்களின் மின்னஞ்சலை அப்டேட் செய்யலாம்.

Step 1: Indoasis என்ற மொபைல் செயலியை திறக்கவும். அதில் உங்களின் MPIN அல்லது கைரேகையை வைத்து Login செய்க.

Read  How to Download Indian Bank Account Statement Online

Login Indoasis App

Step 2: இப்பொழுது தோன்றும் பல்வேறு Option களில் e-SERVICES என்பதை கிளிக் செய்யவும்.

Click e-Services - Indian Bank

Step 3: மூன்றாவதாக உள்ள Email Updation என்பதை தேர்வு செய்யவும்.

Choose Email Updation

Step 4: இப்பொழுது உங்களின் CIF Number, Account Holder Name, Existing Email ID போன்றவை தெரிவதை காண்பீர்கள். அதற்க்கு கீழே உள்ள New Email ID என்ற இடத்தில் உங்களின் புதிய மின்னஞ்சலை Type செய்யவும்.

Enter New Email ID

பிறகு கடைசியாக இருக்கும் Proceed என்ற பட்டனை அழுத்தவும்.

Step 5: Confirm என்பதை கிளிக் செய்க.

Click Confirm

Step 6: உங்களின் 4 இலக்க MTPIN Number யை Enter செய்து Submit செய்யவும்.

Enter Indian Bank MPIN

Step 7: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் புதிய மின்னஞ்சலுக்கு One Time Password (OTP) வரும். அந்த இரண்டு OTP எண்களையும் Enter செய்து Proceed என்பதை அழுத்தவும்.

Enter OTP Both Mobile and Email - Indian Bank

தற்போது புதிய மின்னஞ்சல் வெற்றிகரமாக மாற்றப்படும். 

மேலும் படிக்க – IndOASIS: Indian Bank New Mobile Banking App Registration

மேலும் படிக்க – How to Change MPIN and MTPIN in Indian Bank: Indoasis App

மேற்கூறிய இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அந்த வழியை பயன்படுத்தி நீங்கள் மின்னஞ்சலை மாற்றலாம். 

இன்று நீங்கள் ஒரு புதிய தகவலை தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest