How to Change Indian Bank ATM Withdrawal Limit in Online
தற்போது உங்களின் Indian Bank ATM Card இன் Withdrawal / POS போன்ற பரிவர்த்தனைகளின் Limit யை நீங்களே Set செய்ய முடியும். இதை நீங்கள் வங்கிக்கு போகாமல் வீட்டில் இருந்தே Mobile Banking அல்லது Internet Banking மூலம் செய்யலாம். இந்த வசதியானது உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்திற்கு கூடுதலான பாதுகாப்பை அளிக்கிறது.
நாம் ஏன் Debit Card இன் பரிவர்த்தனைகளுக்கு Limit Set செய்ய வேண்டும்?
இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
டெபிட் கார்டுக்கு எப்படி பரிவர்த்தனை அளவை Set செய்வது?
மேற்கண்ட கேள்விகளுக்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Why Change the Debit Card Limit
ஒரு வங்கி வாடிக்கையாளர் ஏன் டெபிட் கார்டு அட்டையின் அளவை மாற்ற வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
இன்றைய சூழலில் நாம் டெபிட் அட்டையை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Withdrawal, POS, e-Commerce போன்ற பலவேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம்.
ஆன்லைன் திருடர்கள் எப்படியும் நம்முடைய டெபிட் அட்டையின் தகவல்களை தெரிந்துகொண்டு அதை தவறாக பயன்படுத்த முயல்கிறார்கள். மேலும் சில நேரங்களில் நீங்கள் ATM அட்டையை தொலைத்து விடலாம். இது மற்றவர்களின் கைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில், உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம்.
ஆனால், நீங்கள் உங்களின் ATM Card க்கு Transaction Limit யை Set செய்வதால், திருடன் ஏற்படுத்தக்கூடிய சேதத்தின் அளவை குறைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களின் ATM அட்டையில் ஒரு நாளைக்கு Rs.5000 ரூபாயை Maximum Limit ஆக Set செய்வதாக கொள்வோம். ஒருவேளை டெபிட் அட்டையை மற்றவர்கள் திருடிவிட்டாலும், அவர்களால் அன்றைய நாளில் Rs.5000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.
இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் இழப்பை பெருமளவு குறைக்க முடியும்.
ATM Card Limit Set செய்வதின் நன்மைகள்
- நீங்கள் ATM Card இல் குறைந்தபட்ச வரம்பை Set செய்தால், அட்டை திருடிவிட்டால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.
- இந்த வரம்புகளை உடனடியாக செட் மற்றும் மாற்றம் செய்ய முடியும்.
- Mobile Banking மற்றும் Internet Banking மூலமாகவே இதை செய்யலாம். வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.
- நீங்கள் வீட்டில் இருந்தவாறே ATM பரிவர்த்தனை சேனல்களை (Withdrawal, POS, Contactless Card….) கட்டுப்படுத்த முடியும்.
How to Change Indian Bank ATM Withdrawal / POS Limit
நீங்கள் இரண்டு வழிகளில் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளின் வரம்பை Change செய்ய முடியும்.
1. Set / Change Limit Through Mobile Banking
Step 1: உங்களின் மொபைல் போனில் IndOasis App யை Login செய்யவும்.
Step 2: Cards என்ற பிரிவை கிளிக் செய்யவும்.
Step 3: Debit Card என்பதை தேர்வு செய்து Indian Bank Savings Account நம்பரை Select செய்க.
Step 4: Debit Card எண்ணின் மீது கிளிக் செய்யவும்.
Step 5: Set Debit Card Limit என்பதை தேர்வு செய்யவும்.
Step 6: இப்பொழுது உங்களுக்கு தேவையான Channel யை தேர்வு செய்து அதற்கான New Limit யை Set செய்யவும். பிறகு கடைசியில் உள்ள Submit என்பதை அழுதவும்.
Step 7: Confirm என்பதை கிளிக் செய்க.
Step 8: உங்களின் 4 Digit MTPIN யை உள்ளிட்டு Submit யை கொடுத்தவுடன், உங்களின் New Limit வெற்றிகரமாக Set ஆகிவிடும்.
2. Set / Change Limit Through Internet Banking
Step 1: உங்களின் Indian Bank Internet Banking யை Login செய்யவும்.
Step 2: Value Added Services என்பதை கிளிக் செய்க.
Step 3: Debit Card Services > Control Card Usage & Limits என்பதை தேர்வு செய்யவும்.
Step 4: உங்களின் Account Number யை Select செய்து Transaction Password யை உள்ளிடவும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
Step 5: உங்களின் ATM Card யை Select செய்து Card Status Enquiry என்பதை அழுத்தவும்.
Step 6: தற்போது New ATM Limit யை Set செய்து Update என்பதை அழுத்தவும்.
Step 7: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number யை உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்க.
Step 8: Confirmation செய்ய Ok என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களின் புதிய வரம்பு வெற்றிகரமாக செட் செய்யப்பட்டது என்ற செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.
மேற்கண்ட இந்த வசதியானது இந்தியன் வங்கியால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுவருவது, இந்தியன் வங்கியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். இந்த வசதியினை வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துவதன் மூலம், உங்களின் வங்கிக்கணக்கை திருடர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.