How to Change Indian Bank Home Branch in Online

Indian Bank ஆனது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு Online மூலம் Home Branch யை Change செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்களின் Indian Bank Account யை, ஒரு Branch இல் இருந்து மற்றொரு Branch க்கு ஆன்லைன் மூலமாகவே Transfer செய்ய முடியும். இதை பற்றிய தகவல்களை தான்  கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

நீங்கள் உங்களின் பணத்தை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ ஒரு வங்கியில் கணக்கை திறக்கலாம். பிறகு பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்க்கோ அல்லது மாநிலத்திற்க்கோ குடிபெயராலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் உங்களின் வங்கியின் Home Branch யையும் மாற்ற வேண்டியதிருக்கும். அவ்வாறு  மாற்றினால் மட்டுமே வங்கிக்கிளையில் இருந்து பெறவேண்டிய சேவைகளை தொடர்ந்து பெற முடியும்.

இதற்க்கு முன்பு வரை Indian Bank இல் வங்கிக்கிளையை மாற்ற வேண்டுமென்றால் அதற்க்கு கடிதம் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஆனால், சமீபத்தில் இந்தியன் வங்கியானது, உங்களின் Home Branch யை Online மூலம் மாற்றுவதற்கான வசதியை வழங்கியுள்ளது.

இந்தியன் வங்கியின் Portable வசதி 

நீங்கள் இந்தியன் வங்கியின் கிளையை மாற்றுவதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Indian Bank ஆனது Online Bank Account Portability வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வாடிக்கையாளர்கள் வங்கிக்கிளையை மாற்றினாலும், Bank Account Number மாறாது. எனவே தொடர்ந்து அதே Account Number யை பயன்படுத்தலாம்.
  • வாடிக்கையாளரின் CIF Number என்னும் Customer Information File மாறாது.
  • வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தன் வங்கிக்கணக்கை விரும்பிய Branch க்கு மாற்றலாம்.
  • Bank Account Number இல் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் வங்கியின் IFSC Code மட்டும் மாறுபடும். ஏனெனில் ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு IFSC Code இருக்கும்.
  • இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர் எந்தவொரு கிளையிலிருந்தும் தனது கணக்கை இயக்கும் சுதந்திரத்தை பெறுகிறார்.
Read  How to Generate & Change Indian Bank ATM PIN Through Online

How to Change Indian Bank Home Branch Through Net Banking 

பின்வரும் செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் உங்களின் Indian Bank Account யை ஒரு Branch இல் இருந்து மற்றொரு Branch க்கு Transfer செய்யலாம்.

Step 1: நீங்கள் முதலில் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளனமான Indianbank.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Indian Bank Net Banking என்பதை கிளிக் செய்யவும்.

Choose Net Banking

Step 3: Login For Net Banking என்பதை அழுத்தவும்.

Click Internet Banking - Indian Bank Home Branch Change

Step 4: பிறகு உங்களின் User ID மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.

Login Your Indian Bank Internet banking

Step 5: இப்பொழுது இணைய வங்கியின் Dashboard திறக்கும். அதில் Value Added Services என்பதை கிளிக் செய்யவும்.

Select Value Added Services

Step 6: Home Branch Change என்ற Option யை அழுத்தவும்.

Select Home Branch Change -Indian Bank

Step 7: இதில் உங்களின் Account Number யை தேர்வு செய்த பிறகு, தற்போதையை வங்கியின் Branch Code, Branch Name போன்ற தகவல்கள் தானாகவே தெரியும்.

Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

அடுத்து புதிய வங்கிக்கிளையின் IFSC Code யை Enter செய்தால், New Branch Code மற்றும் New Branch Name போன்றவை தானாகவே நிரப்பிக்கொள்ளும்.

Enter New Branch Details

கடைசியாக Transaction Password யை Enter செய்து Submit செய்யவும்.

Step 8:  இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Enter OTP and Click Confirm

இப்பொழுது உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக Confirmation ஆகிவிடும்.

How to Change Indian Bank Home Branch Through Mobile Banking

உங்களின் Mobile Banking மூலமாகவும் இந்தியன் வங்கிக்கிளையை மாற்றலாம். அதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 1: உங்கள் மொபைலில் உள்ள Indoasis என்ற மொபைல் பாக்கிங் செயலியை திறக்கவும்.

Step 2: e- Services என்பதை தேர்வு செய்யவும்.

Home Branch Change in Mobile Banking

Step 3: Change Home Branch என்பதை கிளிக் செய்யவும்.

Indoasis Change home branch

Step 4: உங்களின் Account Number யை தேர்வு செய்த பிறகு, தற்போதைய Home Branch Address மற்றும் Branch Code ஆகியவை தோன்றும்.

Read  How to Lock / Unlock Online Transaction in Indian Bank

Indian Bank Branch Change in Tamil

Step 5: இப்பொழுது New Home Branch Address என்பதற்க்கு கீழே உங்களின் புதிய வங்கிக்கிளையின் IFSC Code யை உள்ளிடவும். உள்ளிட்ட பிறகு புதிய கிளையின் Branch Code, Branch Name மற்றும் Address ஆகியவை தானாக தோன்றும்.

Indian Bank ifsc Code

Step 6: பிறகு Proceed என்ற பட்டனை அழுத்தவும்.

Step 7:‘ அனைத்தையும் சரிபார்த்துவிட்டு Confirm என்பதை கிளிக் செய்க.

Indian Bank New Branch Change

Step 8: MTPIN நம்பரை Type செய்து Submit செய்யவும்.

Indian Bank MTPIN

Step 9: உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.

Step 10: தற்போது உங்களின் வங்கிக்கிளையை வெற்றிகரமாக மாற்றிவிட்டீர்கள்.

முடிவுரை 

விண்ணப்பதாரர்கள் இந்த நடைமுறையை செயல்படுத்த நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாக நினைத்து Branch யை Change செய்வதை தள்ளிபோடுவார்கள். ஆனால் தற்போது ஆன்லைன் மூலமாகவே இந்த வசதி கிடைப்பதால் உங்களின் வேலை சுலபமாகிவிடும். எனவே உங்களின் வங்கிக்கிளையை மாற்றுவதற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். அதற்கான செயலை உடனே தொடங்குங்கள்.

4 thoughts on “How to Change Indian Bank Home Branch in Online

  • 24th July 2021 at 12:32 pm
    Permalink

    Hi,
    Thanks for this information. I tried this. But it shows some error after entering OTP. After I tried in saturday, again it shows service not available temporarily. How to troubleshoot this problem?

    Reply
    • 26th July 2021 at 5:14 pm
      Permalink

      in Indian Bank has had a server problem for a few days. So give it a try after a few days.

      Reply
  • 3rd March 2022 at 6:48 pm
    Permalink

    BRANCH CHANGED BUT CIF NUMBER NOT CHANGED SIR, WHAT WILL I DO…?

    Reply
    • 26th March 2022 at 1:52 pm
      Permalink

      Neenga Branch Change panna IFSC Number thaan Change aagum. CIF Number Change aagathu. Athe CIF Number use pannalam

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *