How to Change / Update Mobile Number in Indian Bank Account

Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் நீங்கள், உங்களின் பதிவு செய்யப்பட்ட Mobile Number-யை Change செய்ய விரும்புகிறீர்களா? அப்படி மாற்ற நினைத்தால் அதை எவ்வாறு செய்வது? அதற்கான செயல்முறைகள் என்ன? இவற்றிற்கான தீர்வை இந்த பதிவில் காணலாம்.

உங்களின் வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியமாகும். ஏனெனில் வங்கிக்கணக்கில் Register செய்த மொபைல் எண் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக Internet Banking, Mobile Banking மற்றும் SMS Banking போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இவற்றை எல்லாம் பயன்படுத்த Mobile Number தேவைப்படுகிறது.

Internet Banking மூலம் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்தனைகளுக்கும் OTP என்னும் One Time Password தேவைப்படும். இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மட்டுமே வரும்.

மொபைல் மூலமாக இருப்புத்தொகையை அறிய, வங்கிகள் வழங்கும் Missed Call Balance Enquiry வசதியையும் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து தான் பெற முடியும்.

நீங்கள் ATM Card இன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அதற்கான Alert செய்திகளும் SMS ஆக பெறுவீர்கள்.

இவ்வாறு எண்ணற்ற சேவைகளை பெறுவதற்கு உங்களின் Bank Account இல் மொபைல் எண்ணை Register செய்வது முக்கியமாகும்.

நீங்கள் மொபைல் எண்ணை Change செய்வதற்கான காரணங்கள் பின்வருமாறு இருக்கலாம்.

  • உங்களின் Indian Bank Account இல் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் நம்பர், தற்போது உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.
  • நீங்கள் வங்கியில் கணக்கு திறக்கும் போது மொபைல் நம்பரை வழங்காமல் இருந்திருக்கலாம்.
Read  How to Link Aadhaar to Indian Bank Account Online

Indian Bank இல் Online மூலமாக மொபைல் எண்ணை மாற்றும் வசதி உள்ளதா?

பல வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பரை Net Banking மற்றும் ATM Center இன் மூலம் மாற்றும் வசதியை வழங்குகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியன் வங்கியும் இணைந்துள்ளது. இதற்க்கு முன்பு இந்தியன் வங்கியில் வங்கிக்கிளைக்கு சென்று மாற்றும் வசதி (Offline) மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது நெட் பேங்கிங்கில் ஆன்லைன் மூலமாகவே மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முடியும்.

ஆன்லைன் மூலம் மொபைல் எண்ணை மாற்றுவது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து படிக்கவும்.

How to Change Mobile Number in Indian Bank Through Online

இருப்பினும் நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்த தெரியாத மக்களும் இருப்பார்கள். அவர்கள் நேரடியாக இந்தியன் வங்கிக்கு சென்று மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை மாற்ற முடியும்.

எனவே நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று எப்படி மொபைல் எண்ணை மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Name of Bank Indian Bank 
Service Category Mobile Number Update 
Mode Of Update Offline 
Toll-Free Number 1800 4250 0000

How to Change / Update Mobile Number in Indian Bank 

பின்வரும் படிகளை பின்பற்றி உங்களின் Registered Mobile Number-யை Change / Update செய்யலாம்.

Step 1: முதலில் உங்களின் வங்கிக்கணக்கு எந்த வங்கிக்கிளையில் உள்ளதோ அங்கு செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் போது Passbook மற்றும் Aadhaar Card போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

Step 2: வங்கி நிர்வாகியிடம் சென்று மொபைல் நம்பரை மாற்றுவதற்கான Form-யை கேட்டு பெறுங்கள்.

Step 3: படிவத்தை பெற்ற பிறகு அதை சரியாக நிரப்ப வேண்டும். பின்வரும் விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டியதிருக்கும்.

  • முதலில் உங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டும். அதாவது உங்களின் Name, Account No, Mobile Number போன்றவற்றை நிரப்புக.
  • Change of Mobile Number என்பதை டிக் செய்து, New Mobile Number என்ற இடத்தில் உங்களின் புதிய நம்பரை எழுத வேண்டும். Existing Mobile No என்ற இடத்தில் ஏற்கனவே உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்திருக்கும் எண்ணை எழுத வேண்டும்.
  • அடுத்தது பின்பக்கத்தின் கடைசியில் உங்களின் Signature, Name, Address போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

Step 4: நீங்கள் நிரப்பிய படிவம் மற்றும் ஆதார் நகலை வங்கி நிர்வாகியிடம் வழங்க வேண்டும். நீங்கள் ஆதார் அட்டையின் நகலை வழங்கும் போது அதில் சுய கையொப்பம் (Self attested) போடுவதற்கு மறந்துவிட வேண்டாம்.

Read  How to Change Mobile Number in Indian Bank Through Online

Step 5: உங்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு Indian Bank வங்கிக்கணக்கில் Mobile Number Change செய்யப்படும்.

Customer service request form 1Customer service request form-indian bank

ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உங்களின் புதிய மொபைல் நம்பர் மாற்றப்பட்டு விடும்.

மாற்றப்பட்ட பிறகு புதிய மொபைல் எண்ணிற்கு SMS மூலமாக Confirmation செய்தி வரும். சில நேரங்களில் Confirmation SMS வராமல் போகலாம். அப்போது Indian Bank இன் Missed Call Balance Enquiry சேவையை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.

அதாவது நீங்கள் பதிவு செய்த புதிய மொபைல் எண்ணில் இருந்து 09289592895 என்ற எண்ணை அழைக்கவும். உங்களின் மொபைல் எண் மாற்றப்பட்டு இருந்தால் SMS மூலம் Account Balance குறித்த தகவல்கள் வரும். ஒருவேளை இன்னும் மாற்றவில்லை என்றால் உங்களின் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்ற செய்தி வரும்.

முடிவுரை 

இந்த பதிவில் Offline மூலம் அதாவது நேரடியாக வங்கிக்கு சென்று எப்படி மொபைல் எண்ணை மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

இதையும் படியுங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *