Indian Bank

How to Change Mobile Number in Indian Bank Through Online

நீங்கள் உங்களின் இந்தியன் வங்கிக்கணக்கில் உள்ள மொபைல் எண்ணை மாற்ற நினைக்கிறீர்களா? அதுவும் வங்கிக்கு போகாமல் ஆன்லைன் மூலமாக மாற்றும் வசதி இருந்தால், எப்படி இருக்கும்? ஆம் நீங்கள் நினைப்பது சரி தான். 

தற்போது Indian Bank Account இல் Mobile Number யை Change செய்வது மிகவும் எளிது ஆகும். நீங்கள் வங்கிக்கிளைக்கு போகாமல் Online மூலமாகவே மொபைல் நம்பரை மாற்ற முடியும். இந்தியன் வங்கியானது இதற்கான வசதி இணைய வங்கிசேவையில் வழங்கியுள்ளது.

இதற்கான செயல்முறைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.  நீங்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்த பின்பு, யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே ஆன்லைன் மூலம் மொபைல் எண்ணை மாற்றும் செயல்முறையை அறிந்திருப்பீர்கள்.

சரி வாருங்கள் அதை பற்றி பார்க்கலாம்.

வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணின் முக்கியத்துவம் 

இன்றைய காலங்களில் யாரும் பணத்தை வீடுகளில் சேமித்து வைப்பதில்லை. மாறாக வங்கிகளில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்கிறார்கள். பிறகு தேவைப்படும் நேரங்களில் அந்த பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

வங்கிகளில் Mobile Number யை பதிவு செய்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில் மொபைல் நம்பர் மூலமாக தான் பண பரிவர்த்தனைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. 

Read  How to Change Indian Bank ATM Withdrawal Limit in Online

உதாரணமாக, Mobile Banking மற்றும் Internet Banking இல் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது OTP Number யை Enter செய்தால் மட்டுமே அந்த பரிவர்த்தனை முழுமையடையும். ATM Card இன் மூலம் பணம் எடுத்தல், POS பரிவர்த்தனைகள், Password களை மாற்றுதல் அல்லது மீட்டமைத்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மொபைல் நம்பர் இன்றியமையாதது ஆகும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Mobile Number யை சில காரணங்களுக்காக Change செய்ய விரும்பலாம். இதற்க்கு முன்புவரை Indian Bank Account இல் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு நேரடியாக வங்கிக்கிளைக்கு (Branch) சென்று தான் மாற்ற வேண்டும்.

ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நீங்கள் வீட்டில் இருந்தவாறே ஒரு சில நிமிடங்களில் Online மூலம் மொபைல் எண்ணை மாற்ற முடியும். 

இது மிகப்பெரிய செயல் என்றெல்லாம் நினைக்க தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் போன் நம்பரை மாற்ற முடியும். இந்த கட்டுரை அதற்கான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Procedure to Change Mobile Number in Indian Bank Through Online

நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று மாற்றலாம். இருப்பினும் Indian Bank வழங்கும் Internet Banking சேவை மூலமாகவும் மொபைல் எண்ணை மாற்ற முடியும்.

நீங்கள் உங்களின் Indian Bank வங்கிக்கணக்கிற்கு இணைய வங்கிச்சேவையை இன்னும் திறக்கவில்லையா? கவலை வேண்டாம். கீழே உள்ள கட்டுரையை படித்து இணைய வங்கிச்சேவையை திறப்பதற்கான செயல்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

Read  Indian Bank FD Interest Rates 2022 - Fixed Deposit
இதையும் படியுங்கள்: Indian Bank Net Banking Registration & Login: Just 5 Minutes

சரி இப்பொழுது இணைய வங்கிச்சேவையின் மூலம் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறையை பார்ப்போம்.

Step 1: நீங்கள் முதலில் https://www.indianbank.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

Step 2: அதில் Net Banking > Indian Bank Net Banking என்ற Option யை தேர்வு செய்யவும்.

Choose Indian Bank Net Banking

Step 3: Login For Net Banking என்பதை அழுத்தவும்.

Click Login for Net Banking

Step 4: உங்களின் Username மற்றும் Password யை உள்ளிட்டு இணைய வங்கிச்சேவையை Login செய்யவும்.

Enter Your Username and Password

Step 5: இணைய வங்கிச்சேவையின் Dashboard இன் மேலே உள்ள Options என்பதை கிளிக் செய்யவும்.

Click Options - Indian Bank Online

Step 6: View Profile > Mobile Number இல் உள்ள Update என்ற பட்டனை அழுத்தவும்.

Click Update for mobile number Change - Indian Bank

Step 7: இப்பொழுது உங்களின் இந்தியன் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Enter OTP Number

Step 8: இப்போது தோன்றும் Popup Box இல் OK என்ற பட்டனை அழுத்தவும்.

Press OK Button

Step 9: இந்த பக்கத்தில் உங்களின் New Mobile Number, ATM Card Number, PIN, Expiry Date போன்ற தகவல்களை Enter செய்யவும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Type New Mobile Number and ATM Card Details - Indian Bank

Step 10: இப்பொழுது நீங்கள் Enter செய்த புதிய மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Confirm என்ற பட்டனை அழுத்தவும்.

Read  Indian Bank Balance Check by Missed Call, ATM Card, Mobile App

Enter OTP New Mobile Number

Step 11: மீண்டும் தோன்றும் Popup திரையில் OK என்பதை அழுத்துக.

Press OK to Continue

Step 12: தற்போது திரையில் Your Mobile Number has been Updated Successfully என்ற செய்தி தோன்றுவதை காணலாம். அதாவது நீங்கள் வெற்றிகரமாக மொபைல் எண்ணை மாற்றிவிட்டீர்கள்.

Now Your Mobile Number ahs been Updated successfully

How can I Check my Mobile Number Updated?

நீங்கள் மேற்கண்டவாறு மொபைல் நம்பரை மாற்றிய பிறகு, அது உடனடியாக Update ஆகிவிடும். இதற்க்கு பிறகு வங்கிக்கணக்கு தொடர்புடைய அனைத்து குறுந்செய்திகளையும் (SMS) புதிய மொபைல் எண்ணிற்கு பெறுவீர்கள்.

புதிய மொபைல் நம்பர் மாறி இருப்பதை தெரிந்துகொள்ள View Profile இல் சென்று Check செய்துகொள்ளலாம்.

Now check New Mobile Number in Indian Bank Account

 

இதையும் படியுங்கள்:  How to Generate / Reset Indian Bank ATM PIN Number

முடிவுரை 

இனிமேல் நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், மேற்கண்ட செயல்முறையை பின்பற்றலாம். இதை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதால், இதற்க்கு அதிகமான நேரத்தை செலவிட தேவையில்லை. இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இதை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Frequently Asked Questions (FAQ)

இந்தியன் வங்கிக்கணக்கில் உள்ள மொபைல் எண்ணை ஆன்லைன் மூலம் மாற்ற முடியுமா?

முடியும். இணைய வங்கிச்சேவை மூலம் மாற்றலாம்.

நான் இணைய வங்கிச்சேவையை ஓபன் செய்யவில்லை என்ன செய்வது?

ஆன்லைன் மூலமாகவே இணைய வங்கிசேவைக்கு பதிவு செய்யாலாம். பதிவு செய்த பிறகு அதை லாகின் செய்து மொபைல் எண்ணை மாற்றலாம். அல்லது நேரடியாக வங்கிக்கிளைக்கு செல்லலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole