How to Change MPIN and MTPIN in Indian Bank: Indoasis App
Indian Bank Mobile Banking செயலியின் Indoasis App இல் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை எவ்வாறு Change செய்வது? இதற்கான செயல்முறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் MPIN மற்றும் MTPIN என்றால் என்ன என்பதை காண்போம்.
நீங்கள் இந்தியன் வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்த Indoasis என்ற App யை பயன்படுத்துவீர்கள். இந்த செயலியை Login செய்வதற்கு பயன்படும் 4 இலக்க எண்களே MPIN (Mobile PIN) ஆகும்.
அந்த செயலியை Login செய்த பிறகு, நீங்கள் ஏதாவது நிதி பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது தேவைப்படும் மற்றொரு 4 இலக்க எண்களே MTPIN (Mobile Transfer PIN) ஆகும். அதாவது நீங்கள் ஒரு பண பரிவர்த்தனையை செய்யும் போது MTPIN கட்டாயமாக தேவைப்படும்.
இந்த இரண்டு PIN நம்பர்களையும் நீங்கள் Indoasis App Registration செய்யும்போது உருவாக்கியிருப்பீர்கள். ஒருவேளை இந்த இரண்டு பின் நம்பர்களையும் நீங்கள் மாற்ற விரும்பினால் Mobile Banking செயலியின் மூலமாகவே மாற்றலாம்.
இந்தியன் பேங்க் மொபைல் பேங்கிங் செயலியை Download செய்ய – Indoasis App Download |
Table of Contents
How to Change MPIN and MTPIN in Indian Bank Mobile Banking
Indoasis Mobile Banking செயலியில் பின்வரும் செயல்முறையின் மூலம் MPIN மற்றும் MTPIN Change செய்யலாம். அதற்கான படிகள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
1. Steps to Change MPIN
Step 1: உங்களின் Indoasis செயலியை Login செய்யவும்.
Step 2: இப்பொழுது Mobile Banking செயலி Open ஆகும். அதில் Settings என்பதை தேர்வு செய்க.
Step 3: Settings என்ற பக்கத்தில் உள்ள Change Login PIN (MPIN) என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: Enter Old MPIN என்ற இடத்தில் உங்களின் பழைய Login PIN யை Enter செய்யவும். பிறகு அதற்கு கீழே உள்ள Enter New MPIN என்ற இடத்தில் புதிய பின் நம்பரை Enter செய்யவும்.
Step 5: இப்பொழுது Change என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: கிளிக் செய்த பிறகு MPIN has been changed Successfully என்ற செய்தி தோன்றுவதை காணலாம். இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக பின் நம்பரை மாற்றிவிட்டீர்கள்.
பின் நம்பர் மாற்றப்பட்ட பிறகு செயலி தானாகவே வெளியேறிவிடும். இப்பொழுது உங்களின் புதிய Login பின் நம்பரை உள்ளிட்டு Login செய்யலாம்.
2. Steps to Change MTPIN
Step 7: இப்பொழுது மீண்டும் Indoasis செயலியை Login செய்து Settings > Change Transaction PIN (MTPIN) என்பதை அழுத்தவும்.
Step 8: Old MTPIN மற்றும் New MTPIN நம்பர்களை Enter செய்து Change என்பதை கிளிக் செய்க.
Step 9: தற்போது வெற்றிகரமாக MTPIN நம்பரும் மாற்றப்பட்டுவிடும்.
மேற்கண்ட செயல்முறையை பயன்படுத்தி நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பின் நம்பரை மாற்றிக்கொள்ளலாம்.
முடிவுரை
இந்த பதிவின் மூலம் இந்தியன் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான Indoasis App இல் MPIN மற்றும் MTPIN யை எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
Frequently Asked Questions (FAQ)
MPIN என்றால் என்ன?
MPIN என்பது Indoasis செயலியை Login செய்ய உதவும் 4 இலக்க Mobile PIN ஆகும்.
MTPIN என்றால் என்ன?
MTPIN என்பது நீங்கள் ஒரு Transaction யை செய்யும் போது அதை முழுமையடைய செய்யும் 4 இலக்க Mobile Transaction PIN ஆகும்.
MPIN மற்றும் MTPIN யை மாற்றுவதற்கு வரம்புகள் உள்ளதா?
இல்லை. நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.
MPIN மற்றும் MTPIN யை மறந்துவிட்டால் என்ன செய்வது?
அதை மீண்டும் Reset செய்துகொள்ளலாம்.