Indian Bank

How to Deposit Cash in Indian Bank Cash Deposit Machine (CDM)

பொதுவாக பெரும்பாலான மக்கள் ATM Machine யை பயன்படுத்தி பணத்தை Withdrawal செய்கிறார்கள். ஆனால் COD என்று சொல்லப்படும் Cash Deposit Machine யை பயன்படுத்தி எத்தனை பேர் பணத்தை Deposit செய்கிறார்கள்?  என்று கேட்டால், குறைந்த அளவு மக்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்னும் சில நபர்களுக்கு பணத்தை டெபாசிட் செய்வதற்கு, COD என்ற இயந்திரம் உள்ளது என்பதே தெரியாமல் இருக்கலாம். இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், பொதுமக்களுக்கு வங்கிகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

பொதுவாக வங்கிகளில் என்னென்ன வசதிகளை வழங்குகிறார்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது, இதுபோன்ற வங்கிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல கட்டுரைகள், சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் தாய் மொழியான தமிழ் மொழியில் எங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் உங்களுக்கு Cash Deposit Machine இல் பணத்தை டெபாசிட் செய்ய தெரியவில்லையா?  இனி அந்த கவலையை விடுங்கள்.

இதற்கான செயல்முறைகளை Step by Step ஆக, உரிய புகைப்படங்களுடன் விளக்கப்போகிறேன். இந்த கட்டுரையை முழுமையாக படித்த பின்பு, COD இயந்திரத்தில் பணத்தை எவ்வாறு டெபாசிட் செய்வது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

What is Cash Deposit Machine?

முதலில் Cash Deposit Machine என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

உங்களின் வங்கிக்கணக்கில் பணத்தை போடுவதற்கு ATM இயந்திரத்தை போன்று இருக்கும் பண ஏற்பு இயந்திரமே COD Machine ஆகும். இதில் செலுத்தப்படும் பணமானது, நேரடியாக உங்களின் வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்படும். இதில் நீங்கள் செலுத்தும் பணமானது  நீங்கள் வங்கியில் காசாளரிடம் செலுத்துவதற்கு சமமாகும்.

CDM இயந்திரத்தின் சிறப்பியல்புகள் 

  • CDM இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்வது மிகவும் எளிதாகும். வெறும் 2 நிமிடங்களுக்குள் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
  • வங்கிக்குள் போகாமலேயே உங்களின் கணக்கில் பணத்தை இருப்பு வைக்கலாம்.
  • Indian Bank Account இல் பணத்தை போடுவதற்கு ATM அட்டை, மொபைல் நம்பர் போன்றவை தேவையில்லை. வங்கிக்கணக்கு எண் மட்டும் இருந்தால் போதுமானது.
  • வங்கி விடுமுறை நாட்களிலும் டெபாசிட் செய்யலாம்.
  • 24 x 7 நாட்களிலும் இயங்கக்கூடியது.

 

How to Deposit Cash in Indian Bank Cash Deposit Machine (CDM)

Indian Bank இன் COD இயந்திரத்தில் ATM Card யை பயன்படுத்தியும் அல்லது ATM Card இல்லாமலும் பணத்தை இருப்பு வைக்க முடியும். அதற்கான செயல்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

Deposit Cash with ATM Card 

Debit Card யை பயன்படுத்தி எப்படி கணக்கில் இருப்பு வைப்பது என்பதை பற்றி காணலாம்.

Step 1: உங்களுக்கு அருகில் உள்ள Indian Bank COD இயந்திரத்தை அணுகவும்.

Read  How to Register Complaint in Indian Bank Online Tamil

Step 2: ATM Card யை இயந்திரத்தில் Insert செய்யவும்.

Step 3: If You Have PIN Continue என்பதை தேர்வு செய்க.

Click If You Have PIN Continue

Step 4: இந்த பக்கத்தில் உங்களுக்கு ரசீது வேண்டுமா என்று கேட்கும். இதில் Yes என்பதை அழுத்துக.

Click Yes

Step 5: Cash Deposit என்ற Option யை கிளிக் செய்யவும்.

Select Cash Deposit Option

Step 6: Disclaimer பக்கத்தில் Agree என்பதை அழுத்துக.

Select Agree

Step 7: கணக்கு வகைகளில் SB A/C (சேமிப்பு கணக்கு) என்பதை தேர்வு செய்யவும்.

Choose Savings Bank Account - Indian Bank Cash Deposit Machine

Step 8: இப்பொழுது உங்களின் 4 இலக்க ATM PIN நம்பரை Enter செய்யவும்.

Enter Your Indian Bank 4 Digit ATM PIN Number

Step 9: தற்போது ATM Machine இல் ஒரு Box திறக்கும். அதில் உங்களின் பணத்தை நன்றாக விரித்த நிலையில் வைக்கவும்.

Deposit Cash & Click Continue - Indian Bank CDM

இதில் 100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைக்க வேண்டும். பணத்தை வைத்துவிட்டு Continue என்பதை கிளிக் செய்யவும்.

Step 10: இப்பொழுது உங்களின் பணம் இயந்திரத்தால் எண்ணப்பட்டு திரையில் காட்டப்படும். அதை நீங்கள் சரிபார்த்துவிட்டு Deposit என்பதை அழுத்தவும்.

After Confirm Click Deposit Option - Indian Bank CDM

Step 11: உங்களின் பணம் இருப்பு வைக்கப்பட்டு Your Transaction Completed Successfully என்ற தோன்றுவதை காண்பீர்கள். மேலும் அதற்கான ரசீதும் உங்களுக்கு வந்துவிடும்.

Your Transaction Completed Successfully & Take Receipt

 

Deposit Cash without ATM Card 

Debit Card இல்லாமல் எப்படி கணக்கில் இருப்பு வைப்பது என்பதை பற்றி காணலாம்.

Read  How to Change MPIN and MTPIN in Indian Bank: Indoasis App

Step 1: டெபாசிட் இயந்திரத்தின் வலது புறத்தின் கடைசியில் உள்ள பட்டனை  அழுத்தவும்.

After Confirm Click Deposit Option - Indian Bank CDM

Step 2: இப்பொழுது உங்களின் Indian Bank Savings Account நம்பரை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்யவும்.

Enter Account Number & Click Correct

Step 3: மீண்டும் உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்யவும்.

Re-Enter Account Number & Click Correct

Step 4: தற்போது வங்கிக்கணக்கை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் வங்கிக்கணக்கு எண் தோன்றும். அதை சரிபார்த்த பின்பு Confirm என்பதை அழுத்தவும்.

After Confirm your Account details then click confirm

Step 5: Deposit என்பதை தேர்வு செய்யவும்.

Click Deposit

Step 6: Agree என்ற தேர்வை கிளிக் செய்க.

Choose Agree

Step 7: கணக்கு வகைகளில் சாதாரண மக்கள் சேமிப்பு வகை கணக்கையே பயன்படுத்துகின்றனர். எனவே SB A/C என்பதை அழுத்தவும்.

Choose Savings Account

Step 8: இப்பொழுது டெபாசிட் செய்வதற்கான பெட்டி திறக்கும். அதில் பணத்தை வைத்துவிட்டு Continue என்பதை அழுத்த வேண்டும்.

Deposit Cash and Click Continue - Indian Bank

Step 9: நீங்கள் வைத்த பணம் எண்ணி முடிக்கப்பட்டவுடன் அவற்றின் விவரங்களை திரையில் காட்டும். அனைத்தும் சரியாக உள்ளது என்று நீங்கள் உறுதி செய்தபின்பு, Deposit என்பதை கிளிக் செய்யவும்.

Click Deposit - Indian Bank CDM

Step 10: இப்பொழுது பணம் வெற்றிகரமாக உங்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். அதற்கான செய்தியும் திரையில் தோன்றும். பிறகு பரிவர்த்தனை நடந்ததற்கான ரசீதும் உருவாகிவிடும். 

Now Your Cash was deposited your account successfully

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வங்கிகளும் பணத்தை டெபாசிட் செய்வதற்கான இயந்திரங்களை வைத்துள்ளன. இதன் மூலம் நீங்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் பணத்தை இருப்பு வைக்கலாம். இந்த முறையில் உங்களின் வங்கிக்கணக்கிற்கு மட்டும் இல்லாமல் மற்றவரின் வங்கிக்கணக்கிற்கும் டெபாசிட் செய்ய முடியும். அவ்வாறு மற்றவரின் கணக்கிற்கு செலுத்த அவர்களின் வங்கிக்கணக்கு எண் இருந்தாலே போதுமானது ஆகும்.

இயந்திரத்தின் மூலம் டெபாசிட் செய்ய ஒருசில நிமிடங்களே போதும் என்பதால், உங்களின் நேரத்தை பெருமளவு சேமிக்கலாம்.

One thought on “How to Deposit Cash in Indian Bank Cash Deposit Machine (CDM)

  • Keerthiraj

    It is useful information. Today I deposited money in my account through ATM. Iam always fear to go Bank. 👍👍👍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole